ஆங் துவா ஜெயா மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அங் துவா ஜெயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங் துவா ஜெயா (P137)
மலேசிய மக்களவை தொகுதி
மலாக்கா
மலேசிய நாடாளுமன்றம்
முன்னாள் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்அடாம் அட்லி
Adam Adli
கட்சிபாக்காத்தான் ஹரப்பான்; பி.கே.ஆர்.
அமைவிடம்மத்திய மலாக்கா
மலாக்கா
மலேசியா
வாக்காளர்கள்118,493 (2022)




2022-இல் ஆங் துவா ஜெயா தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  சீனர் (30.5%)
  இதர இனத்தவர் (0.5%)

ஆங் துவா ஜெயா (மலாய்: Hang Tuah Jaya; ஆங்கிலம்: Hang Tuah Jaya; சீனம்: 汉都亚再也); என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி (P137) ஆகும்.

இந்தத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு முதல் மலேசிய மக்களவையில் (Dewan Rakyat) பிரதிநிதித்துவம் படுத்தப் படுகிறது.[1]

பொது[தொகு]

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2018 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பி.கே.ஆர். கட்சியின் சார்பில் சம்சுல் இசுகந்தர் (Shamsul Iskandar @ Yusre Mohd Akin) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிகேஆர் கட்சியின் சார்பில் அடாம் அட்லி (Adam Adli) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆங் துவா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் பரப்பளவு 116 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 118,493 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆங் துவா ஜெயா நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

அங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
புக்கிட் கட்டில் தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப் பட்டது
14-ஆவது 2018–2022 சம்சுல் இசுகந்தர் பாக்காத்தான் (பிகேஆர்)
15-ஆவது 2022–இதுவரையில் அடாம் அட்லி

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்றத் தொகுதி சட்டமன்றத் தொகுதி
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–இன்று வரையில்
அங் துவா ஜெயா ஆயர் குரோ
ஆயர் மோலேக்
புக்கிட் கெட்டில்
பெங்காலான் பத்து

தற்போதைய மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

எண் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N15 பெங்காலான் பத்து கல்சோம் நூர்டின் பாரிசான் (அம்னோ)
N16 ஆயர் குரோ கெர் சி இயீ பாக்காத்தான் (ஜசெக)
N17 புக்கிட் கெட்டில் அட்லி சகாரி பாக்காத்தான் (அமாணா)
N18 ஆயர் மோலேக் ரகுமாட் மரிமான் பாரிசான் (அம்னோ)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  1. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-20.

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:மலேசிய நாடாளுமன்றத் தொகுதிகள்