பாவு மாவட்டம்

ஆள்கூறுகள்: 1°25′0″N 110°0′9″E / 1.41667°N 110.00250°E / 1.41667; 110.00250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவு மாவட்டம்
Bau District
சரவாக்
பாவு மாவட்டம் is located in மலேசியா
பாவு மாவட்டம்
      பாவு மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°25′0″N 110°0′9″E / 1.41667°N 110.00250°E / 1.41667; 110.00250
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகூச்சிங் பிரிவு
மாவட்டம்பாவு மாவட்டம்
நகரம்பாவு நகரம்
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்62,200
அஞ்சல் குறியீடு93250
தொலைபேசி எண்கள்6082
பாவு மாவட்டத்தின் வரைப்படம்

பாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Bau; ஆங்கிலம்: Bau District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவில்; உள்ள ஒரு மாவட்டம்.[1][2]

1840-ஆம் ஆண்டுகளில் பாவு மாவட்டத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போர்னியோ நிறுவனத்தினால் (The Borneo Company) தங்கச் சுரங்கத் தொழில்கள் கையகப் படுத்தப்பட்டன. 1921-இல், சுரங்கத் தொழில்களில் வருமானம் குறைவானது. அதன் தொடர்ச்சியாகச் சுரங்கங்கள் மூடப்பட்டன.[3]

1970-களின் பிற்பகுதியில் உலக தங்கத்தின் விலை உயர்ந்த போது சுரங்கங்கள் மீண்டும் திறக்கப் பட்டன. பின்னர் ஆசிய நிதி நெருக்கடி தொடங்கியபோது 1996-இல், அந்தச் சுரங்கங்கள் மீண்டும் மூடப்பட்டன.[4] 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுரங்க உரிமைகள் நார்த் போர்னியோ கோல்ட் நிறுவனத்திடம் (North Borneo Gold) இருந்தது.[5]

வரலாறு[தொகு]

1837-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி, செக்ராங் இபான்கள் (Skrang Ibans); பிரதாக் மலை (Bratak Peak) சிகரத்தின் உச்சியில் இருந்த சகோய் - பிரதாக் பிடாயூ (Jagoi-Bratak Bidayuh) குடியேற்றப் பகுதியில் வாழ்ந்த பிடாயூ மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 2,000 சகோய் - பிரதாக் பிடாயூ ஆண்களைக் கொன்றார்கள். 1,000 பெண்களைச் சிறைபிடித்தார்கள்.

சகோய் - பிரதாக் பிடாயூ சமூகத்தின் தலைவரான பாங்லிமா குலோவ் மற்றும் அவரின் சீடர்கள் சிலர் படுகொலையில் இருந்து தப்பினர்.

ஜாகோய் - பிரதாக் தினம்[தொகு]

ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி, 1837 படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களின் நினைவாக பாவ் பகுதியில் உள்ள பிரதாக் சிகரத்தின் உச்சியில் ஜாகோய் - பிரதாக் தினத்தை (Jagoi-Bratak Day) கொண்டாடுகிறார்கள். அந்த நாளைக் குறிக்கும் வகையில், 1988 மே 1-ஆம் தேதி ஒரு நினைவுக் கல் அமைக்கப்பட்டது.[6][7]

1841-ஆம் ஆண்டில் சரவாக்கின் புதிய வெள்ளை ராஜா ஜேம்ஸ் புரூக், சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் சிலரை மீட்டு எடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  2. "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  3. "Zedex Minerals Ltd (ASX:ZDX) Bau Global JORC Resource Now 1.612 M oz Au". ABN Newswire. 5 November 2008 இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528183157/http://www.abnnewswire.net/press/en/59000/. 
  4. Chew, Daniel (1990) Chinese Pioneers on the Sarawak Frontier 1841-1941 Oxford University Press, Singapore, ISBN 0-19-588915-0
  5. Kaur, Amarjit (February 1995) "The Babbling Brookes: Economic Change in Sarawak 1841-1941" Modern Asian Studies 29(1): pp. 65-109, p.73
  6. "Descendants mark Jagoi-Bratak Day." New Straits Times 10 May 2000;
  7. "The Jagoi-Bratak group first settled at Bung Bratak when they migrated out some 750 years ago from Mount Sungkong in West Kalimantan, Indonesia. Then sometimes in early 1840s, they moved from Bung Bratak to surrounding areas form 34 different villages. Bung Jagoi was the first Bidayuh village within Jagoi area". Visit Sarawak 2022 #BounceBackBetter.[தொடர்பிழந்த இணைப்பு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவு_மாவட்டம்&oldid=3648603" இலிருந்து மீள்விக்கப்பட்டது