உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்டகாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாந்தான் மாநிலத்தில் பெண்டகாராவின் கொடி

பெண்டகாரா அல்லது பெண்டஹாரா, ஆங்கிலம்: Bendahara அல்லது Vizier; மலாய் மொழி: Bendahara அல்லது Wazir; ஜாவி: بنداهار) என்பது பாரம்பரிய மலாய் இராச்சியங்களில் ஒரு நிர்வாகப் பதவியைக் குறிக்கும் சொல் ஆகும்.

19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அரசுகள் தென்கிழக்காசியாவிற்குள் வருவதற்கு முன்னால் ஓர் அரசர் அல்லது ஒரு சுல்தானுக்கு அறிவுரைஞராக இருப்பவரை பெண்டகாரா என்று அழைத்தார்கள்.

பெண்டகாரா எனும் பதவி அக்காலக் கட்டத்தில் ஒரு முதல்வர் பதவிக்குச் சரிசமமான பதவியாகும். மலாய் மொழியில் பெண்டகாரா அல்லது வாசிர் Wazir என்று அழைத்தார்கள்.

பொது

[தொகு]
மலாக்கா மாநிலத்தில் பெண்டகாரா எனும் பெயரில் உள்ள பிரதான சாலை

ஒரு பெண்டகாரா பதவி ஒரு சுல்தானால் நியமிக்கப்படும் பதவி. மற்றும் அது ஒரு பரம்பரைப் பதவியாகும். தவிர பெண்டகாராவும் சுல்தானும் ஒரே பரம்பரையைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். மலாய்ச் சுல்தானகத்தில் முதுகெலும்பு போன்ற பதவி.

ஒரு பெண்டகாரா என்பவர், பிரபுக்களின் தலைவராக இருந்ததால், அவரின் பதவி குறிப்பிட்ட பொறுப்புகளையும் கொண்டது.

பெண்டகாராவின் பொறுப்புகள்

[தொகு]

மலாக்கா மற்றும் ஜொகூர் பண்டைய இராச்சியங்களில், ஒரு பெண்டகாராவிற்குப் பல பணிகளும் பொறுப்புகளும் இருந்தன. அவற்றில் முதன்மையானவை:

  • சுல்தானின் முடிசூட்டு விழா மற்றும் சுல்தானைப் பதவியில் அமர்த்தும் பொறுப்பு
  • சுல்தானின் நலன் பொறுப்பு
  • இசுலாமியச் சட்ட முறைமை அல்லது சரியா (Sharia) சட்ட நடைமுறையில் உள்ள சமய விதிமுறைகளின் அடிப்படையில் அரசு விவகாரங்களில் சுல்தானுக்கு ஆலோசகராய் இருக்கும் பொறுப்பு
  • அரசத் திருமணம், பிறப்பு மற்றும் இறுதிச் சடங்குகளின் பொறுப்பு
  • சுல்தான் வாரிசு இல்லாமல் இறந்தால் அரச வாரிசு உருவாக்கும் பொறுப்பு
  • சுல்தான் சிறுபிள்ளையாக இருந்தால் பாதுகாவலராகச் செயல்படும் பொறுப்பு
  • சுல்தானின் அனைத்துக் கட்டளைகளையும் செயல்படுத்தும் பொறுப்பு[1]

ஐரோப்பியர்களின் தலையீடு

[தொகு]
போர்னியோ தீவில் குமாய் எனும் இடத்தில் பெண்டகாரா எனும் பெயரில் உள்ள சாலை

சுல்தானின் சட்டபூர்வமான தன்மையை நிர்ணயிக்கும் பொறுப்பு பெண்டகாராவிடம் இருந்தது. இது தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதற்கு முன் பெண்டகாரா எப்போதும் மற்ற பிரபுக்களிடம் ஆலோசனை கேட்பார்.

மலேசியா, இந்தோனேசியா, புரூணை போன்ற நாடுகளில் இருந்த மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தில் பிரித்தானியர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் தலையீடுகள்; பெண்டகாராவின் சுதந்திரத் தன்மைகளுக்குத் தடைகளாக அமைந்தன. தற்சமயம் பெண்டகாரா என்பது ஒரு பாரம்பரியப் பதவியாக மட்டுமே கருதப் படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bendahara". பார்க்கப்பட்ட நாள் 18 April 2020.
  2. "Kejohanan Futsal 6 Orang Sepasukan Sempena Sambutan Hari Kebangsaan Negara Brunei Darussalam ke-35 bagi tahun 2019 di London, United Kingdom". High Commission of Brunei Darussalam in London, UK. 16 March 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.

துணை நூல்கள்

[தொகு]
  • R.O. Windstedt, Bendaharas and Temenggungs, Journal of Malayan Branch of Royal Asiatic Society, Vol X part I, 1932
  • R.O. Windstedt, Early Rulers of Perak, Pahang and Acheh, Journal of Malayan Branch of Royal Asiatic Society, Vol X part I, 1932

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்டகாரா&oldid=3455704" இலிருந்து மீள்விக்கப்பட்டது