சுல்தான் முகமது ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் முகமது ஷா
Muhammad Shah
மலாக்காவின் 3-ஆவது சுல்தான்
ஆட்சிமலாக்கா சுல்தானகம்: 1424 – 1444
முன்னிருந்தவர்மெகாட் இசுகந்தர் ஷா
பின்வந்தவர்பரமேசுவரா தேவ ஷா
மரபுமலாக்கா சுல்தானகம்
தந்தைமெகாட் இசுகந்தர் ஷா
இறப்பு1444
சமயம்இசுலாம்

சுல்தான் முகமது ஷா (மலாய் மொழி: Sultan Muhammad Shah ibni Almarhum Sultan Megat Iskandar Shah; ஆங்கிலம்: Muhammad Shah of Malacca); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் மூன்றாவது அரசர் ஆவார். ராஜா தெங்கா (Raja Tengah) அல்லது ராடின் தெங்கா (Radin Tengah) என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[1]:246

இவர் மலாக்கா சுல்தானகத்தின் இரண்டாவது ஆட்சியாளரான சுல்தான் மெகாட் இசுகந்தர் ஷாவின் மகன் ஆவார். இவர் 1424 முதல் 1444 வரை மலாக்காவை ஆட்சி செய்தார். மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளரான இவரைச் சில சான்றுகள் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்றும் பெயரிடுகின்றன.[2]

முதலில் இவருக்கு ஸ்ரீ மகாராஜா என்ற பட்டப் பெயர் இருந்தது. பின்னர் இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். ஒருவேளை அவர் ஒரு முஸ்லீம் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து இருக்கலாம்; அதனால் ஸ்ரீ மகாராஜா எனும் அவரின் பெயர் மாற்றம் கண்டு இருக்கலாம்.[3]

பொது[தொகு]

இவரைச் சுல்தான் முகமது ஷா (Sultan Mohammad Shah) என்று சில சான்றுகள் பெயரிட்டுள்ளன. சுல்தான் முகமது ஷா என்பவர் ராஜா தெங்காவின் மகன் என்றும் வெவ்வேறு பதிப்புகள் தெரிவிக்கின்றன.

சுல்தான் முகமது ஷாவுக்கு ராஜா இப்ராகிம் மற்றும் ராஜா காசிம் என இரு மகன்கள் இருந்தனர். இவருக்குப் பின் ராஜா இப்ராகிம் எனும் பரமேசுவரா தேவ ஷா (Abu Syahid Shah) ஆட்சிக்கு வந்தார்.

மலாக்கா சுல்தான்கத்தின் ஆட்சியாளர்கள்[தொகு]

மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்
பரமேசுவரா
1400–1414
மெகாட் இசுகந்தர் ஷா
1414–1424
சுல்தான் முகமது ஷா
1424–1444
பரமேசுவரா தேவ ஷா
1444–1446
சுல்தான் முசபர் ஷா
1446–1459
சுல்தான் மன்சூர் ஷா
1459–1477
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
1477–1488
சுல்தான் மகமுட் ஷா
1488–1511
சுல்தான் அகமட் ஷா
1511–1513
சுல்தான் மகமுட் ஷா
1513–1528

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சுல்தான் முகமது ஷா
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
மெகாட் இசுகந்தர் ஷா
மலாக்கா சுல்தான் பின்னர்
பரமேசுவரா தேவ ஷா

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_முகமது_ஷா&oldid=3490075" இருந்து மீள்விக்கப்பட்டது