மிங் சி லு
மிங் சி லு, (ஆங்கிலம்: Ming Shilu; மலாய் மொழி: Ming Shilu; சீனம்: 明實錄) என்பது சீனா, மிங் வம்சத்தின், 1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரையிலான சீனா நாட்டு வரலாற்றுப் பதிவுகள் ஆகும்.[1] ஆங்கிலத்தில் வெரிடபிள் ரிக்கார்ட்ஸ் (Veritable Records) என்றும் அழைக்கப் படுகிறது.
சீனாவை ஆட்சி செய்த மிங் பேரரசர்களின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ’மிங் சி லு’ பதிவுகளில் உள்ளன.[2]
மிங் வம்சாவழியினர்[தொகு]

1368-ஆம் ஆண்டு தொடங்கி 1644-ஆம் ஆண்டு வரை மிங் வம்சாவழியினர் (Ming dynasty) சீனாவின் ஆளும் வம்சாவழியினராக இருந்தனர். மகா மிங் வம்சம் (Great Ming) என்று அழைக்கப் படுவதும் உண்டு. மிங் வம்சாவழியினர் சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சமாகும். இவர்கள் ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்கள்.
மிங் அரசமரபு என்பது மங்கோலியர்களின் தலைமையிலான யுவான் வம்சத்தின் சரிவைத் தொடர்ந்து 276 ஆண்டுகளாக (1368-1644) சீனாவை ஆட்சிசெய்த ஒர் அரசமரபு ஆகும்.
மிங் அரசமரபு[தொகு]
மனித வரலாற்றில் மிகப்பெரிய ஒழுங்குமுறை அரசாங்கமும், சமூக நிலைத் தன்மையும் கொண்டதாக மிங் அரசமரபு கருதப்படுகிறது [3].
மிங் அரசமரபு, சீனாவின் மிகப் பெரிய ஏகாதிபத்திய இனமான ஆன் (Han) இனத்தின் கடைசி அரசமரபு ஆகும். லீ சிசெங் (Li Zicheng) என்பவரின் தலைமையிலான கிளர்ச்சியினால் ஒரு பகுதி வீழ்ச்சி அடைந்தது.
மஞ்சூரியா[தொகு]

பின்னர் மஞ்சூரியாவின் சிங் அரசமரபு ஆட்சியைக் கைப்பறியது. மிங் தலைநகரான பெய்ஜிங் 1644-இல் வீழ்ச்சி அடைந்தபோதும், மிங் அரசமரபினரின் எச்சங்கள் சில பகுதிகளில் 1662-ஆம் ஆண்டு வரை நீடித்தன. இவை அனைத்தும் கூட்டாக தெற்கு மிங் (Southern Ming) எனப் படுகின்றன.[4]
இந்தப் பேரரசர்களின் காலத்தின் பதிவுகளைத் தான் மிங் வம்சாவழி வரலாற்றுச் சுவடுகள் என்றும் மிங் சி லு (Ming Shi-lu) என்றும் அழைக்கிறார்கள்.
மிங் சி லு சீனப் பதிவுகள் பரமேசுவராவை பாய்-லி-மி-சு-லா (ஆங்கிலம்: Bai-li-mi-su-la; சீனம்: 拜里迷蘇剌) என்று அழைக்கின்றன. அவருடைய மகன் மெகாட் இசுகந்தர் ஷாவை (ஆங்கிலம்: Mu-gan Sa-yu-ti-er-sha; சீனம்: 母幹撒于的兒沙) என்றும் அழைக்கின்றன.[1]
யோங் லே[தொகு]

மிங் வம்சாவழியினரில் மிக முக்கியமானவர் யோங் லே (Yongle Emperor). பட்டியலில் மூன்றாவதாக வருபவர். இவருடைய அசல் பெயர் ஜு டி (Zhu Di). இவர் 1402 முதல் 1424 வரை சீனாவை ஆட்சி செய்தார்.
யோங்லே (Yongle) மாமன்னர் காலத்தில் தான் பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்று இருக்கிறார். ஒரு முறை அல்ல. இரு முறைகள். முதல் முறை: 03.10.1405. இரண்டாவது முறை: 04.08.1411.[5]
பரமேசுவராவின் சீனப் பயணத்தின் போது செங் கே (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் அவருக்குத் துணையாக இருந்து இருக்கிறார்கள்.
மிங் சி லு வரலாற்றுப் பதிவுகள்[தொகு]
மிங் சி லு வரலாற்றுப் பதிவுகள் அனைத்தும் வனப்பெழுத்து (calligraphy) பிரதிகள். 40,000 பக்கங்கள் கொண்டவை. மிகப் பெரிய ஒரு வரலாற்றுக் காப்பகம்.[6]
1368 - 1644-ஆம் ஆண்டுகளில் சீனாவுடன் தொடர்புகள் வைத்து இருந்த தென்கிழக்கு ஆசியா, ஆசியா நாடுகளின் வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்தப் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
எல்லாப் பதிவுகளும் சீன மொழியில் (Classical Chinese) இருக்கின்றன. சீன மொழி தெரியாதவர்கள் தகவல்களை மீட்டு எடுப்பதில் சிரமப் பட்டார்கள். இருப்பினும் ஜீப் வேட் (Geoff Wade) எனும் ஓர் ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர் 1993-ஆம் ஆண்டு, அந்தப் பதிவுகளை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
சீனா பெய்ஜிங் பல்கலைக்கழகம்[தொகு]
தென்கிழக்கு ஆசியா நாடுகளின் வரலாற்றுப் பதிவுகளில் 3000 பதிவுகளைச் சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார். 1993-ஆம் ஆண்டு தொடங்கிய மொழிபெயர்ப்பு 2013-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் பிடித்தன. ஏறக்குறைய 40 கல்வியாளர்கள் அவருக்கு உதவியாக இருந்து உள்ளார்கள். அரும் பெரும் முயற்சி.
அந்த வகையில் சீனா பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் இருந்த சீனக் கையெழுத்துப் பதிவுகளில் 3000-க்கும் மேற்பட்ட பதிவுகள் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டன. மொழி பெயர்க்கப்பட்ட அந்தப் பதிவுகள், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திடம் (National University of Singapore) ஒப்படைக்கப் பட்டன.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்; ஆசியா ஆய்வு நிறுவனத்துடன் (Asia Research Institute) இணைந்து ஒரு தரவு தளத்தை (Database) உருவாக்கின. இன்று வரையிலும் பராமரித்து வருகின்றன.
மிங் சி லு பதிவுகளில் மலாக்கா[தொகு]
- (28 அக்டோபர் 1403) -- இன் கிங் (Yin Qing) எனும் அரவாணி மலாக்காவிற்கு அனுப்பப் பட்டார் [1] பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- (3 அக்டோபர் 1405) -- பாய்-லி-மி-சு-லா, எனும் மலாக்கா நாட்டின் ஆளுநர் சீனாவின் மிங் மன்னரைச் சென்று கண்டார். [2] பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- (16 பிப்ரவரி 1409) -- அபு லா ஜியா சின் என்பவர் மிங் அரண்மனைக்குச் சென்றார். [3] பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- (4 ஆகஸ்டு 1411) -- பாய்-லி-மி-சு-லாவிற்கு மிங் அரண்மனையில் சிறப்பு விருந்து வழங்கப் பட்டது. [4] பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- (14 ஆகஸ்டு 1411) -- பாய்-லி-மி-சு-லா, அவருடைய மனைவி, அவருடைய பிள்ளைகள், அமைச்சர்கள், 540 உதவியாளர்கள் மிங் அரண்மனைகுச் சென்றனர். [5] பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- (17 ஆகஸ்டு 1411) -- பாய்-லி-மி-சு-லாவிற்கு அரசு விருந்து வழங்கப் பட்டது. [6] பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- (5 அக்டோபர் 1414) -- பரமேசுவராவின் மகன் மெகாட் இசுகந்தர் ஷா (ராஜா ஸ்ரீ ராமா விக்ரமா) சீன அரண்மனைக்குச் சென்று தன் தந்தையார் இறந்த செய்தியைச் சொன்னார்.[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Wang, G. (2005). "The first three rulers of Malacca". in L., Suryadinata. Admiral Zheng He and Southeast Asia. International Zheng He Society / Institute of Southeast Asian Studies. பக். 26–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9812303294. https://books.google.com/books?id=DtaBBgAAQBAJ&pg=PA26.
- ↑ Wade 2005, ப. Search - Malacca
- ↑ Edwin Oldfather Reischauer, John King Fairbank, Albert M. Craig (1960) A history of East Asian civilization, Volume 1. East Asia: The Great Tradition, George Allen & Unwin Ltd.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Edward L. Dreyer (2007). Zheng He: China and the Oceans in the Early Ming Dynasty, 1405–1433. New York. NY: Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780321084439. https://archive.org/details/zhenghechinaocea0000drey.
- ↑ "Southeast Asia in the Ming Shi-lu | H-Asia | H-Net". https://networks.h-net.org/node/22055/links/117616/southeast-asia-ming-shi-lu. பார்த்த நாள்: 5 July 2022.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.epress.nus.edu.sg/msl/entry/2115?hl=melaka.
சான்றுகள்[தொகு]
- Edward L. Dreyer (2007). Zheng He: China and the Oceans in the Early Ming Dynasty, 1405–1433. New York. NY: Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780321084439. https://archive.org/details/zhenghechinaocea0000drey.
- Wade, Geoff (2005). "The Ming Shi-lu as a source for Southeast Asian History". http://epress.nus.edu.sg/msl/MSL.pdf. provides detailed and extensive background information on how the Ming Shi-lu was composed and the rhetoric that it uses.
வெளி இணைப்புகள்[தொகு]
- "Veritable Records of the Ming Dynasty, Joseon Dynasty & Qing Dynasty". Academia Sinica. http://hanchi.ihp.sinica.edu.tw/mql/login.html.