வனப்பெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரபு மொழி வனப்பெழுத்து இசுலாமிய ஆண்டு 1206 /கிபி 1791.

வனப்பெழுத்து என்பது ஒரு வகை காட்சிக் கலை ஆகும். இது எழுதும் கலை எனக் குறிப்பிடப்படுவது உண்டு. ஒரு தற்கால வரைவிலக்கணம் வனப்பெழுத்து எழுதுதலை, வெளிப்பட்டுத் தன்மையுடனும், இயைபுத் தன்மை கொண்டதாகவும், திறமையாகவும் குறிகளுக்கு வடிவம் கொடுத்தல் என வரையறுக்கிறது.

தற்காலத்து வனப்பெழுத்துக்கள் எழுத்துக்குரிய பயன்பாட்டுத் தன்மை கொண்ட கையால் எழுதப்பட்ட எழுத்துக்களில் இருந்து, பண்பியல் வெளிப்பாட்டுத்தன்மை கொண்ட கையெழுத்துக் குறிகள் வரை பல விதமாக உள்ளன. இவற்றுட் சிலவற்றில் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாமலும் இருக்கக்கூடும். இன்றும் திருமண அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள், எழுத்துரு வடிவமைப்பு, வணிகச் சின்ன வடிவமைப்பு, மதம்சார்ந்த கலைகள், பலவகையான அறிவித்தல்கள், வரைகலை வடிவமைப்பு, கல்வெட்டுக்கள், நினைவுக்குரிய ஆவணங்கள் போன்றவற்றினூடாக வனப்பெழுத்து வழங்கி வருகிறது.

தமிழ் வனப்பெழுத்துக்கள்[தொகு]

Tamil Aum.jpg
Tamil om.png

அலங்காரத் தேவைகளுக்காக தமிழ் பதாதைகளில் இத்தகைய வனப்பெழுத்துக்களைப் பெரிதும் காணலாம். ஆலயங்கள் மற்றும் சமய விழாக்களில் இத்தகைய வனப்பெழுத்துக்களைக் காணலாம்.

மேலும் படிக்க[தொகு]

இசுலாமிய எழுத்தணிக்கலை

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனப்பெழுத்து&oldid=2018091" இருந்து மீள்விக்கப்பட்டது