சுல்தான் முசபர் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் முசபர் ஷா
Muzaffar Shah
மலாக்காவின் 5-ஆவது சுல்தான்
ஆட்சிமலாக்கா சுல்தானகம்: 1446 – 1459
முன்னிருந்தவர்பரமேசுவரா தேவ ஷா
பின்வந்தவர்சுல்தான் மன்சூர் ஷா
மரபுமலாக்கா சுல்தானகம்
தந்தைசுல்தான் முகமது ஷா
இறப்பு1459
சமயம்இசுலாம்

சுல்தான் முசபர் ஷா (மலாய் மொழி: Sultan Muzaffar Shah ibni Almarhum Sultan Muhammad Shah; ஆங்கிலம்: Muzaffar Shah of Malacca); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் ஐந்தாவது அரசர். இவர் சுல்தான் முகமது ஷாவின் மகன் ஆவார்.

மலாக்காவின் நான்காவது அரசர் பரமேசுவரா தேவ ஷா எனும் ராஜா இப்ராகிம் என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார். பரமேசுவரா தேவ ஷா கொலை செய்யப்பட்ட பின்னர், அவருக்குப் பிறகு ராஜா காசிம் எனும் பெயர் கொண்ட இவர் மலாக்கா சுல்தானாக முடிசூட்டப் பட்டார்.

ராஜா காசிம் (Raja Kassim) என்பது சுல்தான் முசபர் ஷாவின் அசல் பெயராகும். சீனாவின் மிங் சி லு வரலாற்றுப் பதிவுகளில் சுல்தான் முசபர் ஷா எனும் இந்த அரசர், சுலுதான் உடாபோனா ஷா (Sulutan Wudafona Sh) என்று அழைக்கப் படுகிறார்.[1]:246

பொது[தொகு]

மிங் சி லு (Ming Shi-lu) ஆங்கிலத்தில் வெரிடபிள் ரிக்கார்ட்ஸ் (Veritable Records) என்பது சீனா மிங் வம்சத்தின், 1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரையிலான சீனா நாட்டு வரலாற்றுப் பதிவுகள்.[2]

சீனாவை ஆட்சி செய்த மிங் பேரரசர்களின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த மிங் சி லு பதிவுகளில் உள்ளன.[3]

முசபர் ஷாவின் மாமா துன் அலி[தொகு]

சுல்தான் முசபர் ஷாவின் தந்தையார் சுல்தான் முகமது ஷா. மலாக்காவின் மூன்றாவது அரசர். தாயாரின் பெயர் துன் வதி (Tun Wati).

சுல்தான் முசபர் ஷாவின் மாமா, துன் அலி (Tun Ali) ஒரு செல்வாக்கு மிக்க தமிழ் முஸ்லீம் தலைவர் ஆவார். இவர் தன்னுடைய மருமகன் ராஜா காசிம் (Raja Kassim) எனும் சுல்தான் முசபர் ஷாவை, அரியணையில் அமர்த்தலாம் என்று மலாக்காவின் நான்காவது சுல்தானான ராஜா பரமேசுவரா தேவ ஷாவை (Raja Sri Parameswara Dewa Shah) கொலை செய்யச் சதி செய்ததாகக் கூறப் படுகிறது.

ராஜா பரமேசுவரா தேவ ஷாவின் அசல் பெயர் ராஜா இப்ராகிம். இவர் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது அரசர். பட்டத்துப் பெயர் சுல்தான் அபு சாகித். இவர் கொலை செய்யப்பட்ட பின்னர் சுல்தான் முசபர் ஷா பதவிக்கு வந்தார்.

விளக்கம்[தொகு]

  • ராஜா காசிம் >>> சுல்தான் முசபர் ஷா
  • ராஜா இப்ராகிம் >>> சுல்தான் அபு சாகித் >>> பரமேசுவரா தேவ ஷா

ராஜா காசிம் எனும் முசபர் ஷா[தொகு]

மலாக்காவின் ஆட்சியாளராகப் பதவியேற்ற பிறகு, ராஜா காசிம் தன்னைச் சுல்தான் முசபர் ஷா என்று பெயரிட்டுக் கொண்டார். சுல்தான் முசபர் ஷா, மறைந்த தன் தந்தை சுல்தான் முகமது ஷா அறிமுகப்படுத்திய அனைத்துப் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், பாரம்பரிய மரபுகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடைகளை அகற்றுமாறு தன் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சுல்தான் முசபர் ஷா, பதவியில் அமர்வதற்கு முன்னர் அப்போதைய மலாக்காவின் முதல்வர் துன் அலியின் மகளைத் திருமணம் செய்தவர். இவர்களுக்குப் பிறந்த மகனின் மகனின் பெயர் ராஜா அப்துல்லா (Raja Abdullah). சுல்தான் முசபர் ஷா 1459-ஆம் ஆண்டில் காலமானார்.

மலாக்கா சுல்தான்கத்தின் ஆட்சியாளர்கள்[தொகு]

மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்
பரமேசுவரா
1400–1414
மெகாட் இசுகந்தர் ஷா
1414–1424
சுல்தான் முகமது ஷா
1424–1444
பரமேசுவரா தேவ ஷா
1444–1446
சுல்தான் முசபர் ஷா
1446–1459
சுல்தான் மன்சூர் ஷா
1459–1477
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
1477–1488
சுல்தான் மகமுட் ஷா
1488–1511
சுல்தான் அகமட் ஷா
1511–1513
சுல்தான் மகமுட் ஷா
1513–1528

மேற்கோள்கள்[தொகு]

  1. Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
  2. Wang, G. (2005). "The first three rulers of Malacca". In L., Suryadinata (ed.). Admiral Zheng He and Southeast Asia. International Zheng He Society / Institute of Southeast Asian Studies. pp. 26–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9812303294.
  3. Wade 2005, ப. Search - Malacca

வெளி இணைப்புகள்[தொகு]

சுல்தான் முசபர் ஷா
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் மலாக்கா சுல்தான் பின்னர்

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_முசபர்_ஷா&oldid=3898370" இலிருந்து மீள்விக்கப்பட்டது