துன் முத்தாகிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துன் முத்தாகிர்
Tun Mutahir
மலாக்கா சுல்தானகம்
7-ஆவது பெண்டகாரா
பதவியில்
1500–1510
முன்னவர் துன் பெர்பாத்தே பூத்தே
பின்வந்தவர் பெண்டகாரா லுபோக் பத்து தெப்போக் பாடுக்கா துவான்

துன் முத்தாகிர் (மலாய் மொழி: Bendahara Sri Maharaja Tun Mutahir; ஆங்கிலம்: Tun Mutahir); என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் 7-ஆவது பெண்டகாரா எனும் முதலமைச்சர் பதவியை வகித்தவர். மலாக்காவில் பெண்டகாரா பதவி வகித்தவர்களில் துன் முத்தாகிர் சற்றே புகழ்பெற்றவர்.[1]

இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். பெண்டகாரா பதவியை வகிப்பதற்கு முன்பு, அவர் தெமாங்கோங் (Temenggong) பதவியையும் வகித்தார். இவர் தெமாங்கோங் பதவியை வகித்த போது இவரை தெமாங்கோங் ஸ்ரீ மகாராஜா (Temenggung Seri Maharaja) என்று அழைத்தார்கள்.[2].

தெமாங்கோங் பதவி ஓர் உயர்ந்த பதவியாகும். ஒரு சுல்தானகத்தில் ஒரு சுல்தானின் பாதுகாப்பு படையின் தலைவருக்கு வழங்கப்படும் பதவியாகும். சுல்தானின் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மட்டுமே அந்தப் பதவி வழங்கப்பட்டது.

பொது[தொகு]

துன் முத்தாகிர், மலாக்காவில் ஒரு செல்வாக்கு மிக்க இந்திய முஸ்லீம் தலைவராகவும் இருந்தார். மலாக்கா அரசாங்கத்தில் இந்திய முஸ்லிம்களை முக்கியமான பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

அவரின் தந்தையார் துன் அலி (Tun Ali); தாயார் துன் குடு (Tun Kudu). அவரின் தாயார்வழி பாட்டனாரின் பெயர் மணிபுரிந்தன் (Mani Purindan). தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் இருந்து வந்தவர். மணிபுரிந்தன் துன் ரத்னாவதியின் தந்தை ஆகும். அதாவது துன் முத்தாகிரின் தந்தையார் துன் அலியின் தாயார் தான் துன் ரத்னாவதி (Tun Ratna Wati). அவரின் தந்தைவழி பாட்டனார் பெண்டகாரா ஸ்ரீ அமார் ராஜா (Bendahara Sri Amar Diraja). பரமேசுவராவின் மருமகனார்.

துன் முத்தாகிர் மீது குற்றச்சாட்டு[தொகு]

துன் முத்தாகிருக்கு ஒருவர் லஞ்சம் கொடுத்ததாக ராஜா முதலியார், தன் நண்பரான தளபதி கோயா அசான் (Laksamana Khoja Hassan) என்பவருடன் ஒரு வதந்தியைப் பரப்பி விட்டதாகவும் சொல்லப் படுகிறது. அதாவது துன் முத்தாகிர் அரியணையைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார் எனும் வதந்தி.[1]

அந்த வதந்தியை நம்பிய சுல்தான் மகமுட் ஷா, பெண்டகாரா துன் முத்தாகிரின் குடும்பத்தைத் தூக்கிலிடுமாறு உத்தரவிட்டார். தூக்கிலிடப் பட்டவர்களில் துன் பாத்திமாவின் கணவரும் ஒருவராகும்.[3]

சிறப்பான பெண்டகாரா[தொகு]

சுல்தான் மகமுட் ஷா திருமணம் செய்து கொள்ள விரும்பிய துன் முத்தாகிரின் மகள் துன் பாத்திமா (Tun Fatimah) மட்டும் தூக்கிலிடப் படவில்லை. பின்னர் தன் தவற்றை உணர்ந்த சுல்தான் மகமுட் ஷா, தன் மகன் சுல்தான் அகமட் ஷாவுக்கு ஆதரவாகப் பதவி விலகினார்.[3]

துன் முத்தாகிரின் பதவிக் காலத்தில் மலாக்காவின் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. சுல்தான் அகமட் ஷாவின் பலகீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயன்ற வியாபாரிகளைப் பற்றிக் கவலைப்படாமல், நல்ல முறையில் நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. https://web.archive.org/web/20060413202402/http://sejarahmalaysia.pnm.my/
  2. Ahmad Fauzi bin Mohd Basri, Mohd Fo'ad bin Sakdan and Azami bin Man, 2004. Sejarah Tingkatan 1, Kuala Lumpur, DBP.
  3. History of Malacca - Chronology of Events

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துன்_முத்தாகிர்&oldid=3585639" இருந்து மீள்விக்கப்பட்டது