சீர்திருத்தம் (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீர்திருத்த இயக்கம்
Reformasi
Street protests in Kuala Lumpur after Anwar Ibrahim's sentencing, April 1999.jpg
ஏப்ரல் 1999-இல், அன்வார் இப்ராகிமின் தண்டனைக்குப் பிறகு கோலாலம்பூரில் தெரு ஆர்ப்பாட்டங்கள்.
நாள்செப்டம்பர் 1998
இடம்மலேசியா
காரணம்* மகாதீர் அமைச்சரவையின் கீழ் உள்ள மத்திய அரசின் மீது அதிருப்தி * அம்னோ பிரிவுவாதம்
முடிவு
  • கெஅடிலன் கட்சி உருவாக்கம் (KEADILAN)
  • 1999 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் பல பாரிசான் தேசிய அரசியல்வாதிகளின் தோல்வி
  • 2003-இல் மலேசியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்த மகதிர் முகமது ராஜினாமா செய்தார்.
  • 2004-இல் அன்வார் சிறையில் இருந்து விடுதலை
  • 2008 மற்றும் 2013 தேர்தல்களில் பாரிசான் நேசனல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது.
  • பாரிசான் நேசனல் 2008; 2013 பொதுத் தேர்தல்களில் 3 மாநில சட்டமன்றங்களில் எதிர்க்கட்சியாக மாறியது.
  • பாரிசான் நேசனல் 2018 பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தது. 61 ஆண்டுகால தடையற்ற ஆட்சி முடிவுக்கு வந்தது.
வழிநடத்தியோர்
எண்ணிக்கை
பல நூறு ஆயிரம்

சீர்திருத்த இயக்கம் அல்லது ரிபார்மசி (ஆங்கிலம்: Reformasi movement; மலாய் மொழி: Reformasi (Malaysia); என்பது 1998-ஆம் ஆண்டில், மலேசியாவில் அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டபோது அவரின் ஆதரவாளர்கள் மூலமாகத் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம் ஆகும்.

இதன் மூலம் நீண்டகால கூட்டணி பாரிசான் நேசனல் அரசுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்றன. இந்த இயக்கத்தின் போராட்டங்கள், அன்வார் பதவியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வரை தொடர்ந்தன. [1]

பொது[தொகு]

இந்த இயக்கம் பின்பு மக்கள் நீதிக் கட்சி ஆக மாறியது. 2008 மலேசிய பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் 31 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தக் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் ஆளும் பாரிசான் நேசனல் அரசை, 1969 க்குப்பின் முதல் முறையாக, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழக்கச் செய்தது.

மேற்கோள்கள்[தொகு]