மலேசியா எயர்லைன்சு விமானம் 17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியா எயர்லைன்சு விமானம் 17
ரோமின் பியுமிசினொ விமான நிலையத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சம்பந்தப்பட்ட விமானம் நின்றிருந்தபோது எடுக்கப்பட்ட ஒளிப்படம்
Incident சுருக்கம்
நாள்17 சூலை 2014 (2014-07-17)
சுருக்கம்Under investigation. Fired at with surface-to-air missile.[1]
இடம்ஹ்ரபோவே அருகே ,டநிட்ஸ்க் ஒப்லாஸ்து , உக்ரைன்
48°7′56″N 38°39′19″E / 48.13222°N 38.65528°E / 48.13222; 38.65528ஆள்கூறுகள்: 48°7′56″N 38°39′19″E / 48.13222°N 38.65528°E / 48.13222; 38.65528
பயணிகள்283
ஊழியர்15
உயிரிழப்புகள்(மொத்தம்) 298
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங் 777-200ER
இயக்கம்மலேசியா எயர்லைன்சு
வானூர்தி பதிவு9M-MRD
பறப்பு புறப்பாடுஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்
சேருமிடம்கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 (Malaysia Airlines Flight 17, எம்எச்17 (MH17/MAS17)[2] என்பது ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், 2014 சூலை 17 இல், விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய மலேசிய நாட்டு வானூர்தி ஆகும். போயிங் 777 ரக விமானம் உக்ரைனின் தோனெத்ஸ்க் வட்டாரத்தில் கிராபோவ் நகருக்கு அண்மையில்[3][4] உருசிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் வீழ்ந்தது.[5] விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[6]

உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர்ப் பகுதியிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி, இவ்விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், யார் இதனைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.[7][8] உக்ரைனியப் பிரச்சினையில் உருசியா சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை அறிவித்த அடுத்த நாள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.[9]

விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் வைத்து பூக் நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைனின் உட்துறை அமைச்சு அறிவித்தது.[10][11] உக்ரைனிய அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ இதனை ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்" எனக் கூறியுள்ளார்.[12] உக்ரைனியப் படையினரே விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தினர். தாம் ஒரு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தமக்குள் தொலைபேசியில் உரையாடியதைத் தமது புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக உக்ரைனிய அரசு அறிவித்தது.[13][14]

11 செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகவும் மோசமான வானூர்தித் தொடர்பான தாக்குதலாக இந்நிகழ்வு கருதப்படுகிறது[15].

விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்[தொகு]

விமானம் பயணித்த பாதை

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சூலை 17, 2014 அன்று 12:15 (நெதர்லாந்து நேரம்) மணியளவில் விமானம் புறப்பட்டது. பயண அட்டவணைப்படி இவ்விமானம் காலை 06:10 (மலேசிய நேரம்) மணியளவில் கோலாலம்பூர் சென்று சேரவேண்டும். ஆனால் 17:15 (உக்ரைன் நேரம்) மணியளவில் கிழக்கு உக்ரேனின் வான்வெளிப் பகுதியில் விமானம் எரிந்து விழுந்தது. கடைசித் தொடர்பின்போது விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் பறந்துள்ளது.[16]

விமானத்தின் காலக்கெடு[தொகு]

கடந்துவிட்ட நேரம் நேரம் நிகழ்வு
ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் ஆம்ஸ்டர்டாம் உக்ரைன் கோலாலம்பூர்
00:00 10:14 12:14 13:14 18:14
04:01 14:15 16:15 17:15 22:15 விமானம் உக்ரைன் ரேடாரில் இருந்து மறைந்தது

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்[தொகு]

நாடு வாரியாகப் பயணிகள்[17]
நாடு எண்ணிக்கை
 நெதர்லாந்து 192[a]
 மலேசியா 44[b]
 ஆத்திரேலியா 27[18]
 இந்தோனேசியா 12
 ஐக்கிய இராச்சியம் 10
 பெல்ஜியம் 4
 செருமனி 4
 பிலிப்பீன்சு 3
 நியூசிலாந்து 1[19]
 கனடா 1
மொத்தம் 298

விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 மலேசியப் பணியாளர்களும் உயிரிழந்தனர்.[20][21][22] இவர்களில் 192 பேர் நெதர்லாந்து நாட்டவர்.[23][24] சூலை 19 இல் அனைத்து 298 பேரினதும் விபரங்களை மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் வெளியிட்டது.[17]

ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெறும் 20வது பன்னாட்டு எயிட்சுக் மாநாட்டில் கலந்து கொள்ளவென விமானத்தில் போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 100 எயிட்சு வல்லுநர்களும், பன்னாட்டு எயிட்சு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜோயிப் லாங்கேயும் இதில் கொல்லப்பட்டனர்.[25][26][27] இவர்களுடன் டச்சு மேலவை உறுப்பினர் வெல்லெம் விட்டெவீன்,[28] ஆத்திரேலிய எழுத்தாளர் லியாம் டேவிசன்,[29] மலேசியத் தமிழ் நடிகை சுபா ஜெய்,[30] மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் பாட்டியார் சிறீ சித்த அமீரா[31] ஆகியோரும் இறந்த பிரபலங்களில் அடங்குவர்.

உலக மக்களின் அஞ்சலி[தொகு]

விமானத்தின் விவரங்கள் [32][தொகு]

  • வகை: போயிங் 777 – 2H6ER
  • வரிசை எண்: 28411
  • பதிவு எண்: 9M-MRD
  • தயாரிப்பு விவரம்: போயிங் 777 வகையில் 84 ஆவது விமானம்.
  • முதல்முறையாக பறந்த நாள்: 17 சூலை 1997
  • மலேசிய ஏர்லைன்சுக்கு விற்கப்பட்ட நாள்: 29 சூலை 1997
  • என்ஜின்கள்: இரண்டு Rolls-Royce Trent 800
  • விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282

படிமங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1 டச்சு-அமெரிக்க இரட்டைக் குடியுரிமை உள்ளவர் உட்பட.
  2. 15 பணியாளர்கள் உட்பட.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Missile fired at Malaysian plane: US intelligence". CNBC. 17 July 2014. 17 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Statement Malaysia Airlines MH17". klm.com. 18 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Malaysian airliner crashes in E. Ukraine near Russian border, over 283 people on board". RT. 17 July 2014. 17 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Gruesome images of Malaysia MH17 plane crash in east Ukraine appear online (PHOTOS)". RT. 17 July 2014. 17 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Malaysia Airlines plane crashes on Ukraine-Russia border – live". த டெயிலி டெலிகிராப். Archived from the original on 2014-07-18. https://web.archive.org/web/20140718001608/http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ukraine/10974050/Malaysia-Airlines-plane-crashes-on-Ukraine-Russia-border-live.html. பார்த்த நாள்: 17 சூலை 2014. 
  6. Zverev, Anton (17 சூலை 2014). "Malaysian airliner downed in Ukraine war zone, 295 dead". ராய்ட்டர்ஸ். 17 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. Schmitt, Eric; Mabry, Marcus; MacFarquhar, Neil; Herszenhorn, David M. (17 சூலை 2014). "Malaysia Jet Brought Down in Ukraine by Missile, U.S. Officials Say". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/07/18/world/europe/malaysian-airlines-plane-ukraine.html. பார்த்த நாள்: 18 சூலை 2014. 
  8. Birnbaum, Michael; Branigin, William; Londoño, Ernesto (17 சூலை 2014). "Malaysia Airlines plane crashes in eastern Ukraine; U.S. intelligence blames missile". வாசிங்டன் போஸ்ட். 17 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
  9. Baker, Peter; Shear, Michael (17 சூலை 2014). "Tragedy on Top of Crisis May Strengthen Stand Against Russia in U.S. and Europe". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/07/18/world/europe/tragedy-on-top-of-crisis-may-strengthen-stand-against-russia-in-us-and-europe.html. பார்த்த நாள்: 18 July 2014. 
  10. de Carbonnel, Alissa (17 சூலை 2014). "Malaysian passenger plane crashes in Ukraine near Russian border -Ifax". ராய்ட்டர்ஸ். Archived from the original on 2014-07-18. https://web.archive.org/web/20140718000653/http://www.reuters.com/article/2014/07/17/ukraine-crash-airplane-idUSL6N0PS59Y20140717. பார்த்த நாள்: 17 சூலை 2014. 
  11. Zverev, Anton (17 சூலை 2014). "Ukraine says rebels shoot down Malaysian airliner, 295 dead". ராய்ட்டர்ஸ். Archived from the original on 2014-07-17. https://web.archive.org/web/20140717213520/http://www.reuters.com/article/2014/07/17/us-ukraine-crisis-airplane-idUSKBN0FM22N20140717. பார்த்த நாள்: 17 சூலை 2014. 
  12. "Malaysia Airlines crash: President Poroshenko calls shooting down of Malaysian plane an 'act of terrorism'". த டெயிலி டெலிகிராப். 17 July 2014. Archived from the original on 17 ஜூலை 2014. https://web.archive.org/web/20140717191131/http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ukraine/10974784/Malaysia-Airlines-crash-President-Poroshenko-calls-shooting-down-of-Malaysian-plane-an-act-of-terrorism.html. பார்த்த நாள்: 17 July 2014. 
  13. "Malaysian plane was shot down by rebels, intercepted phone calls prove, Ukraine's president says". நேசனல் போஸ்ட் (ஏபி). 17 சூலை 2014. http://news.nationalpost.com/2014/07/17/malaysian-passenger-plane-was-shot-down-by-rebels-intercepted-phone-calls-prove-ukraines-president-says/. பார்த்த நாள்: 17 சூலை 2014. 
  14. "They shouldn't be f****** flying. There is a war going on': Moment Russian separatists 'realized they had shot down a jetliner' released by Ukrainian government". டெய்லி மெயில். 17 July 2014. http://www.dailymail.co.uk/news/article-2696847/They-shouldnt-f-g-flying-There-war-going-Ukraine-intelligence-officials-release-phone-calls-claim-PROVES-Russia-shot-Flight-MH17.html. பார்த்த நாள்: 17 July 2014. 
  15. "MH17 Is The Deadliest Plane Crash Since 9/11". தி ஹப்பிங்டன் போஸ்ட். 17 July 2014. 17 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
  16. Malaysia airliner crash: What we know
  17. 17.0 17.1 "Saturday, July 19, 11:40 AM GMT +0800 Media Statement 6: MH17 Incident". Malaysia Airlines. 19 சூலை 2014. 2014-07-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Official nationalities" defined multiple times with different content
  18. Luke Royes. "Live: Malaysia Airlines jet crashes in Ukraine". ஏபிசி.
  19. "Malaysia Airlines MH17 crash: Kiwi confirmed on board". 18 July 2014. 18 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  20. "Malaysia Airlines flight MH17 crash: 'Six Britons, 23 US citizens and 80 children' feared dead after Boeing passenger jet 'shot down' near Ukraine-Russia border". The Independent. 17 சூலை 2014. http://www.independent.co.uk/news/world/europe/malaysia-airlines-plane-crash-boeing-jet-carrying-295-people-crashes-in-ukraine-9612882.html. பார்த்த நாள்: 17 சூலை 2014. 
  21. Jacquelin Magnay (18 சூலை 2014). "28 Australians among 298 killed on MH17 crash in Ukraine". The Australian.
  22. Walker, Shaun; Branigan, Tania (17 சூலை 2014). "Malaysia Airlines flight MH17 crashes in east Ukraine". தி கார்டியன். http://www.theguardian.com/world/2014/jul/17/malaysia-airlines-plane-crash-east-ukraine. பார்த்த நாள்: 17 சூலை 2014. 
  23. "Malaysia Airlines plane brought down in Ukraine". Big News Network.com. http://www.bignewsnetwork.com/index.php/sid/223870275/scat/b8de8e630faf3631/ht/Malaysia-Airlines-plane-brought-down-in-Ukraine. பார்த்த நாள்: 17 சூலை 2014. 
  24. "MH17 hit by missile from rebel-held Ukraine - Obama". பிபிசி (British Broadcasting Corporation). 18 சூலை 2014. http://www.bbc.co.uk/news/world-europe-28378388. பார்த்த நாள்: 18 சூலை 2014. 
  25. Lillebuen, Steve (18 சூலை 2014). "Crash claims top AIDS researchers heading to Melbourne". http://www.smh.com.au/national/crash-claims-top-aids-researchers-heading-to-melbourne-20140718-zuaw3.html. பார்த்த நாள்: 18 சூலை 2014. 
  26. Pearlman, Jonathan (18 July 2014). "Leading HIV researchers lost as flight MH17 is downed in Ukraine". Telegraph Media Group Limited. Archived from the original on 17 ஜூன் 2020. https://web.archive.org/web/20200617221027/https://www.telegraph.co.uk/news/worldnews/australiaandthepacific/australia/10975275/Leading-HIV-researchers-lost-as-flight-MH17-is-downed-in-Ukraine.html. பார்த்த நாள்: 18 சூலை 2014. 
  27. Hogan, Caelainn; Eunjung Cha, Ariana (18 July 2014). "Top AIDS researcher and others in field perished on MH17". http://www.washingtonpost.com/national/health-science/top-aids-researcher-and-others-in-field-perished-on-mh17/2014/07/18/2aa31972-0e85-11e4-8341-b8072b1e7348_story.html. பார்த்த நாள்: 18 சூலை 2014. 
  28. "Senator Witteveen (PvdA) omgekomen bij crash – Binnenland – VK". De Volkskrant. 18 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  29. "Victorians among those killed in MH17 crash: Premier". Bendigo Advertiser. 19 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  30. "Malaysian actress, Dutch hubby and baby die with MH17". The Malaysian Insider. 22 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  31. "Najib & Hishammuddin's Step Grandmother On Board MH17". 20 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  32. "Malaysia Airlines 9M-MRD (Boeing 777 – MSN 28411) | Airfleets aviation". Airfleets.net. 17 July 2014 அன்று பார்க்கப்பட்டது.

இதையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Malaysia Airlines Flight 17
என்பதின் ஊடகங்கள் உள்ளன.