பினாங்கு இந்து அறநிலைய வாரியம்
பினாங்கு இந்து அறநிலைய வாரியம் Penang Hindu Endowments Board Lembaga Wakaf Hindu Pulau Pinang | |
![]() பினாங்கு அரசாங்கம் | |
மாநில அரசு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 சனவரி 1906 |
தலைமையகம் | 30-ஆவது தளம், கொம்தார் கோபுரம், 10000 பினாங்கு |
மாநில அரசு தலைமை |
|
மூல மாநில அரசு | பினாங்கு மாநில அரசு |
வலைத்தளம் | hebpenang |
பினாங்கு இந்து அறநிலைய வாரியம் (மலாய்: Lembaga Wakaf Hindu Pulau Pinang ; ஆங்கிலம்: Penang Hindu Endowments Board (PHEB); என்பது மலேசியா, பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஒரு வாரியம் ஆகும். இந்த வாரியம் பினாங்கு மாநிலத்தின் இந்து சமய விவகாரங்களை நிர்வகிக்கிறது.[1] இதன் நிர்வாகம் பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.
பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கைகள் மலேசிய ஒற்றுமைத் துறை அமைச்சரால் மலேசிய அமைச்சரவையின் வழியாக மலேசிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
பொது
[தொகு]தற்போது, பினாங்கு இந்து அறநிலைய வாரியம், அதன் இயக்குநர் ஆர். எஸ். என். ராயர் என்பவரால் வழிநடத்தப்படுகிறது பினாங்கு இந்து அறநிலைய வாரியம் (PHEB) என்பது 1906-ஆம் ஆண்டு இந்து அறநிலையச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.[2]
வரலாறு
[தொகு]பினாங்கு தீவு இந்து அறநிலைய வாரியம்; 1906-இல் இந்து அறநிலையச் சட்டம் 1906-இன் கீழ் நிறுவப்பட்டது. இந்துக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பினாங்கு மாநிலத்தில் பிரித்தானிய மலாயா காலனித்துவவாதிகளால் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
பங்கு
[தொகு]பினாங்கில் உள்ள இந்து சமூகத்தின் நலனுக்காக நிலம், கட்டிடங்கள், வீடுகள், கல்லறைகள், கோயில்கள் மற்றும் நிதிகள் போன்ற கொடைகளை நிர்வகிப்பதற்கு இந்த வாரியம் பொறுப்பு வகிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Penang still has full control over Hindu endowments board, says minister". FMT. 6 January 2024. Retrieved 30 January 2024.
- ↑ "Rayer new chairperson of Penang Hindu Endowments Board". Malaysiakini. 4 September 2023. Retrieved 25 September 2024.