சிப்பாய்
Appearance
சிப்பாய் (sepoy, பாரசீக மொழி: سپاهی சிப்பாஹி "போர் வீரன்") என்பது மேற்கத்தைய (பொதுவாக பிரித்தானியாவின் பிடியில் இருந்த இந்தியாவின் உள்ளூர் போர்வீரர்களைக் குறிக்கும். குறிப்பாக, பிரித்தானிய இந்திய இராணுவம், மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்றவற்றில் பணி புரிந்த உள்ளூர் போர் வீரர்கள் சிப்பாய்கள் என அழைக்கப்பட்டனர். ஆயினும் தற்போதும் இந்திய, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய இராணுவ மட்டத்தில் இச்சொல் உப்யோகிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக 1806 இல் இடம்பெற்ற வேலூர் சிப்பாய் எழுச்சி, மற்றும் 1857 இல் இடம்பெற்ற சிப்பாய்க் கிளர்ச்சி ஆகியவற்றில் இவர்களின் பங்கு கணிசமானது.