புக்கிட் மின்யாக்

ஆள்கூறுகள்: 5°19′43″N 100°26′56″E / 5.32861°N 100.44889°E / 5.32861; 100.44889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் மின்யாக்
Bukit Minyak
பினாங்கு
Map
புக்கிட் மின்யாக் is located in மலேசியா
புக்கிட் மின்யாக்
புக்கிட் மின்யாக்
      புக்கிட் மின்யாக்
ஆள்கூறுகள்: 5°19′43″N 100°26′56″E / 5.32861°N 100.44889°E / 5.32861; 100.44889
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்மத்திய செபராங் பிறை
நாடாளுமன்றம்புக்கிட் மெர்தாஜாம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு14020[1]
மலேசிய தொலைபேசி எண்+6-04-50XXXX
மலேசிய போக்குவரத்து பதிவெண்P
இணையதளம்http://www.mpsp.gov.my

புக்கிட் மின்யாக் (மலாய்: Bukit Minyak; ஆங்கிலம்: Bukit Minyak; சீனம்: 武吉敏惹) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District), புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதியில் (Bukit Mertajam Federal Constituency) உள்ள ஒரு தொழில்துறை நகரம்.

இந்த நகர்ப் பகுதியில் நூற்றுக் கணக்கான சிறு தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளன. தவிர சரி சமமான நிலையில் மக்களின் குடியிருப்புகளும் உள்ளன.

பொது[தொகு]

இந்த நகரம் கம்போங் புக்கிட் மின்யாக் கிராமத்தின் (Kampung Bukit Minyak) பெயரால் அழைக்கப் படுகிறது. இந்த கிராமம் ஜூரு ஆறு (Sungai Juru) மற்றும் ஆரா ஆறு (Sungai Ara) ஆகிய ஆறுகளின் கரைகளில் அமைந்துள்ளது. சுங்கை ஜூரு ஆற்றை ரம்பை ஆறு (Sungai Rambai) என்றும் அழைப்பது உண்டு.[2]

புக்கிட் மின்யாக் தொழில் பூங்கா (Bukit Minyak Industrial Park) இங்கு அமைந்துள்ளது. மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம் E1  (North–South Expressway Northern Route) (E1) இந்த நகரத்திற்கு மேற்கில், மிக மிக அருகில் உள்ளது.

அருகாமையில் உள்ள நகரங்கள்[தொகு]

சாலை விரிவாக்கத் திட்டங்கள்[தொகு]

பினாங்கு மாநில அரசாங்கம், புக்கிட் தெங்கா மாநில சட்டமன்றத் தொகுதியில் உள்ள புக்கிட் மின்யாக் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளைத் தீர்க்க பல சாலை விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது.[3]

ஜூரு புறநகர் வளாகத்திற்கு அருகிலுள்ள கெபுன் நெனாஸ் சாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சாலை விரிவாக்கம் மற்றும் எதிர்மறை சாலை (Counter Flow) திட்டத்தையும் பினாங்கு மாநில அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poskod Bukit Minyak, Bukit Mertajam, Pulau Pinang, Malaysia". www.poskod.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2023.
  2. "Bukit Minyak is a place in Seberang Perai Tengah. It is named after the village of Kampung Bukit Minyak which is located along the banks of Sungai Juru also called Sungai Rambai and Sungai Ara upstream". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 June 2023.
  3. 3.0 3.1 "பினாங்கு மாநில அரசாங்கம், புக்கிட் மின்யாக் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளைத் தீர்க்க பல சாலை விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது". பார்க்கப்பட்ட நாள் 11 June 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_மின்யாக்&oldid=3735590" இலிருந்து மீள்விக்கப்பட்டது