மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2020-ஆம் ஆண்டு சனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ் தொடக்கப் பள்ளிகள் செயல்பாட்டில் இருந்தன. அந்தப் பள்ளிகளில் 80,569 மாணவர்கள் கல்வி பயின்றார்கள்.[1] இந்தப் பள்ளிகளில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இரு பள்ளிகள் மூடப்பட்டு இட மாற்ற பட்டியலில் உள்ளன.

2020-ஆம் ஆண்டு சூன் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 79,309 மாணவர்கள் பயில்கின்றனர்.[2]

2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 77,693 மாணவர்கள் பயில்கின்றனர். 2022-ஆம் ஆண்டிற்கும் 2023-ஆம் ஆண்டிற்கும் இடையில், ஈராண்டுகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 1616-ஆக குறைந்து விட்டது. ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.[3]

மலேசியாவில் இட மாற்றத்திற்குக் காத்து இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)

  • புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Bukit Ijok, Selangor).
  • மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Minyak, Selangor).

மலேசியாவில் புதிதாகத் திறக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)

  • தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Taman Keladi, Kedah).
  • பண்டார் சிறீ ஆலாம் தமிழ்ப்பள்ளி (ஜொகூர்) (SJKT Bandar Seri Alam, Johor).

மலேசியாவில் மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)[4]

  • சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பேராக்) (SJKT Ladang Sungai Timah, Perak).
  • பெடனோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Ladang Badenoch, Kedah).


புள்ளிவிவரங்கள்[தொகு]




மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2022

  1050-க்கும் மேற்பட்ட மாணவர் - பெரிய பள்ளிகள் (4) (0.76%)
  150 முதல் 1050 மாணவர் பள்ளிகள் (153) (29.03%)
  30 முதல் 149 மாணவர் பள்ளிகள் (242) (45.92%)
  30-க்கும் குறைவான மாணவர் பள்ளிகள்; ஒருங்கிணைந்த வகுப்புகள் (128) (24.29%)





நகர்/கிராமப்புற மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் 2022

  நகரம் (369) (70.02%)
  கிராமம் (158) (29.98%)





அரசாங்க நிதியுதவி பெறும் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2022

  முழு நிதியுதவி (162) (30.74%)
  பகுதி நிதியதவி (365) (69.26%)

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை - செப்டம்பர் 2023
ஆண்டு மாணவர்கள்
சனவரி 2018 [5]
81,488
ஏப்ரல் 2018 [6]
81,635
சனவரி 2019 [7]
81,321
மே 2019 [8]
81,447
சனவரி 2020 [1]
80,569
சூன் 2020 [9]
80,743
சூன் 2021[10]
80,569
சனவரி 2021
80,434
சூன் 2022 [4]
79,309
செப்டம்பர் 2023 [3]
77,693

மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2020[தொகு]

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்

மாநிலம்
கூட்டரசுப்
பிரதேசம்
மாணவர்
சனவரி
2020
பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்
(சனவரி
2019)
Δ%
ஜொகூர் 12,335 70 1,145 12,165 1.4
கெடா 7,518 59+1 899 7,783 3.5
கிளாந்தான் 36 1 9 8 28.6
மலாக்கா 2,375 21 332 2,436 2.6
நெகிரி செம்பிலான் 8,648 61 1,097 8,754 1.2
பகாங் 2,599 37 422 2,641 1.6
பேராக் 11,645 134 1,679 11,884 2.1
பெர்லிஸ் 67 1 11 65 3.1
பினாங்கு 5,397 28 554 5,478 1.5
சிலாங்கூர் 26,506 97+2 2,155 26,591 0.3
கோலாலம்பூர் 3,443 15 335 3,496 1.5
மொத்தம் 80,569 527 8,638 81,321 0.9

மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2022[தொகு]

தீபகற்ப மலேசியாவின் மாவட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்[11]

மாநிலம்
கூட்டரசுப்
பிரதேசம்
மாணவர்
சூன்
2022[4]
பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்
சூன்
2021[10]
Δ%
ஜொகூர் 11,951 71 1,145 12,183 1.9
கெடா 7,095 59+1 899 7,379 3.8
கிளாந்தான் 36 1 9 36 0.0
மலாக்கா 2,319 21 332 2,304 0.7
நெகிரி செம்பிலான் 8,744 61 1,097 8,732 0.1
பகாங் 2,531 37 422 2,559 1.1
பேராக் 11,231 133+1 1,679 11,541 2.7
பெர்லிஸ் 66 1 11 73 9.6
பினாங்கு 5,382 28 554 5,437 1.0
சிலாங்கூர் 26,393 97+2 2,155 26,664 1.0
கோலாலம்பூர் 3,561 15 335 3,526 1.0
மொத்தம் 79,309 524+4 8,638 80,434 1.4

மலேசிய மாநிலங்கள் மற்றும் மலேசியக் கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள் திரங்கானு, சபா, சரவாக் மாநிலங்களிலும்; லாபுவான்; புத்திராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களிலும் தற்போது தமிழ்ப்பள்ளிகள் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  2. "Perak school ceases operations due to lack of pupils" (in en). The Star. 2020-10-24. https://www.thestar.com.my/news/nation/2020/10/24/perak-school-ceases-operations-due-to-lack-of-pupils. 
  3. 3.0 3.1 "SenaraiSekolah_SEP2023". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2023-10-07.
  4. 4.0 4.1 4.2 "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2022". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
  5. "Senarai Sekolah 31 Januari 2018". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  6. "Senarai Sekolah 30 April 2018". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  7. "Senarai Sekolah Mengikut Kumpulan Jenis Dan Negeri - Kementerian Pendidikan Malaysia (KPM)". www.moe.gov.my. Archived from the original on 2018-07-10. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  8. "Senarai Sekolah Rendah dan Menengah 31 Mei 2019". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  9. "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  10. 10.0 10.1 "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2021". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  11. "Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022". Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022. Kementerian Pendidikan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 3 December 2023. {{cite web}}: |first1= missing |last1= (help)

மேலும் இணைப்புகள்[தொகு]