உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கார் தமிழ்ப்பள்ளி

ஆள்கூறுகள்: 06°25′00″N 100°11′00″E / 6.41667°N 100.18333°E / 6.41667; 100.18333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கார் தமிழ்ப்பள்ளி
கங்கார் நகரம்
அமைவிடம்
கங்கார் தமிழ்ப்பள்ளி is located in மலேசியா
கங்கார் தமிழ்ப்பள்ளி
கங்கார் தமிழ்ப்பள்ளி
மலேசியாவில் அமைவிடம்
கங்கார், பெர்லிஸ், மலேசியா
அமைவிடம்06°25′00″N 100°11′00″E / 6.41667°N 100.18333°E / 6.41667; 100.18333
தகவல்
வகைஆண்/பெண் இரு பாலர் பள்ளி
குறிக்கோள்மொழி காப்பவன் இனம் காப்பான்
தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு
தொடக்கம்1936
பள்ளி மாவட்டம்கங்கார்
01000
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்RBD0053
தலைமை ஆசிரியர்திரு. உதயகுமார்
தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
6 வகுப்பறைகள்
14 ஆசிரியர்கள்
மாணவர்கள்82
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

கங்கார் தமிழ்ப்பள்ளி என்பது (மலாய்: SJK(T) Kangar; ஆங்கிலம்: Kangar Tamil School; சீனம்: 甘加泰米) மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தின் கங்கார் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி. பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஜாலான் பாடாங் காத்தோங் (Jalan Padang Katong) எனும் சாலையில் இந்தப் பள்ளி அமைந்து உள்ளது.[1]

மலேசிய நாட்டின் கடைசி எல்லைப் பகுதியில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்து இருக்கும் கங்கார் தமிழ்ப்பள்ளி; பெர்லிஸ் மாநிலத்திலும் ஒரே தமிழ்ப் பள்ளி ஆகும். 1936-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

1930-ஆம் ஆண்டுகளில் கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி நகரத்தில் இருந்தும்; பினாங்கு பட்டர்வொர்த் நகரத்தில் இருந்தும்; தமிழர்கள் சிலர் துணிமணிகள்; மளிகைப் பொருட்கள் வணிகம் செய்வதற்காகக் கங்கார் நகருக்குச் சென்றார்கள். அவர்களிடம் தமிழர்கள் பலர் வேலை செய்தார்கள். அவர்களின் குழந்தைகளின் கல்வி நலன் கருதி ஒரு பலகை வீட்டில் தமிழ்ப்பள்ளி முதன்முதலாக அமைக்கப்பட்டது.

2003-ஆம் ஆண்டில் அந்தப் பள்ளிக்கு மூன்று மாடிக் கட்டிடம் கட்டித் தரப்பட்டது. அப்போது அந்தப் பள்ளியில் 72 மாணவர்கள் பயின்றார்கள். 14 ஆசிரியர்களுடன் 4 பள்ளி அலுவலக ஊழியர்களும் பணியாற்றினார்கள்.[2]

2003-ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 136. (பெண்கள்: 75; ஆண்கள் 61). ஆசிரியர்களின் எண்ணிக்கை 12.

அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் சாதனை

[தொகு]

2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியா; ஜகார்த்தா மாநகரில் அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான 2021-ஆம் ஆண்டு புத்தாக்கப் போட்டியில் தொழில்நுட்பம், கணினிப் போட்டி (Youth International Science Fair (YISF) 2021) நடைபெற்றது. அந்தப் போட்டியில் கங்கார் தமிழ்ப்பள்ளி வெள்ளி பதக்கம் வென்று வெற்றி வாகை சூடி உள்ளது.

23 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அனைத்துலக மாணவர்கள் இந்த அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப் போட்டியில் கலந்து கொண்டனர்.[3]

பெர்லிஸ் தமிழர்களுக்குப் பெருமை

[தொகு]

இந்த அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றது பெர்லிஸ் மாநிலத்தின் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து உள்ளது. அந்த அனைத்துலகப் போட்டியில் பெருமை சேர்த்த மாணவர்கள்

  • லாரா அன்சிலியா செல்வராஜ்;
  • ஹெரன் ராஷ் ஜெய ராஷ்;
  • குஜென் சந்திரஹான்
  • ருத்ரா மணிவண்ணன்.

இவர்களின் வெற்றிக்குப் பின்னால் துணையாக இருந்தவர்கள் கங்கார் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள்; பெற்றோர்கள்; பள்ளியின் பணியாளர்கள்; முன்னாள் மாணவர் சங்கத்தின் மாணவர்கள்; பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்; பள்ளி வாரிய உறுப்பினர்கள்[4]

தவிர இந்தப் பள்ளி வேறு பல அனைத்துலகப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளது.[5] தலைமையாசிரியர் உதயகுமார்; இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு சிறப்பான சேவைகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் இந்தப் பள்ளி புதிய உத்வேகத்தில் புதிய வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்து கொண்டு வருகிறது.[6]

கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு இலவசமாக ஒரு பேருந்து

[தொகு]

பெர்லிஸ் மாநிலத்தில் ஒரே தமிழ்ப்பள்ளியாக இருப்பதால் 20 கி.மீ. தொலைவில் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். மழைக் காலங்களில் பற்பல சிரமங்களையும் எதிர்நோக்குகிறார்கள். மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வருவதையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு மலேசிய ஹினோ வாகன விற்பனை நிறுவனம் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு இலட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஒரு பேருந்தை இலவசமாக வழங்கி உள்ளது. 25 மாணவர்கள் அமர்ந்து செல்ல வசதி கொண்ட அந்தப் பேருந்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களிடம் வழங்கப் பட்டது.[7][8]

பொது

[தொகு]

அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவில் பற்பல சாதனைகளைச் செய்து வருகிறார்கள். மலேசியாவில் உள்ள மற்ற மொழிப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாகவும் செயல் படுகிறார்கள்.

மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை மூடிவிடுங்கள் என்று மலேசிய அரசியல்வாதிகள் சிலர் சொல்வது வழக்கமாகி வருகிறது.[9] ஆனாலும் தமிழ்ப் பள்ளிகளை மூட விட மாட்டோம் என்று மலேசியத் தமிழர்களும் போராடி வருகிறார்கள்.

மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பு; கற்றல் கற்பித்தலில் நவீன அணுகுமுறைகள்; உற்சாகமானத் தூண்டுதல்கள் போன்றவை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.[10]

அதே வேளையில் அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு பெரிய மாற்றமும் ஏற்பட்டு உள்ளது. இனப் பற்றும் மொழிப் பற்றும் மேலோங்கி வருகிறது.

மேலும் காண்க

[தொகு]

யூடியூப் காணொலி Jimmikki Kammal - Malaysia - Perlis - SJKT Kangar Version யூடியூப் காணொலி SJKT Kangar, Pesta Pantai Timur Show பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளி படங்கள்

மலேசிய மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
  2. Sekolah ini merupakan sekolah aliran Bahasa Tamil yang tunggal di Negeri Perlis Indera Kayangan.
  3. 2021-ஆம் ஆண்டு புத்தாக்கப் போட்டியில் தொழில்நுட்பம் மற்றும் கணினி பட்டியலில் கங்கார் தமிழ்ப்பள்ளி வெள்ளி பதக்கம் வென்று வெற்றி வாகை சூடி உள்ளது.
  4. TAMIL schools bagged multiple gold, silver and bronze awards at the Youth International Science Fair (YISF) 2021 which took place in Jakarta, Makkal Osai reported.
  5. This is the first time for SJKT Kangar to participate in an international innovation competition and we’ve landed with a Silver Award.
  6. "புத்தாக்கப் போட்டியில் கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை". Archived from the original on 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.
  7. Hino Motors providing 25-seater school bus benefitting SJKT Kangar, Perlis.
  8. Perlis' sole Tamil school given a Hino mini bus.
  9. "The three groups filed the action last year, seeking a declaration that Sections 2, 17 and 28 of the Education Act 1996, which allow the setting up of vernacular schools to use Chinese and Tamil as their main languages, is inconsistent with Article 152(1) of the Federal Constitution". Archived from the original on 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.
  10. Tamil schools: Improve them, not shut them down. Only foolish, ill-mannered and uninformed persons will call for Tamil schools to be closed.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கார்_தமிழ்ப்பள்ளி&oldid=3662450" இலிருந்து மீள்விக்கப்பட்டது