திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய வகை செயின்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி (Sekolah Jenis Kebangsaan (T) St. Teresa Convent) மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தைப்பிங் எனும் நகரில் அமைந்துள்ளது. பள்ளியின் தலைமையாசிரியராக சிவரத்தினமும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இரவிந்திரனும் பணியாற்றுகின்றனர். 2014 நிலவரப்படி பள்ளியில் 634 மாணவர்களும் 37 ஆசிரியர்களும் உள்ளனர்.

வரலாறு[தொகு]

1903 இல் கிறித்துவக் கன்னித்துறவியான சகோதரி யூஃபெரெசால் (Sister Euphraise) எட்டுக் குழந்தைகளுடன் தமிழ் பயிற்றுவிக்கும் வகுப்பாக ’கிலியன் பா’ (Klian Pau) இல் இப்பள்ளி ஆரம்பமானது. பின்னர் அவர் தைப்பிங் சென்று அங்கு புனித லூசிஸ் சர்ச்சுக்குப் பின்புறமுள்ள ஒரு அறையில் 26 மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார். 1921 இல் பள்ளியை மேலும் ஒரு அறைக்கு விரிவுபடுத்தி நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிப்பித்தார். ஆண்டுகள் செல்லச்செல்ல பள்ளி மேலும் வளரத் தொடங்கியது. 1933 இல் பெராக் கல்வித்துறையின் கீழ் மாநிலத்தின் இரண்டாவது தமிழ்ப்பள்ளியாகப் பதிவு செய்யப்பட்டது. அச்சமயம் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 320 ஆக இருந்தது. அருள்திரு அன்னை யூஃபெராஸ் பள்ளியின் முதல் தலைமையாசிரியையாகப் பொறுப்பு வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]