பூச்சோங் தமிழ்ப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூச்சோங் தமிழ்ப்பள்ளி மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் பூச்சோங் நகரிலிருந்து 14ஆவது மையில் தொலைவில் உள்ளது. கிள்ளிங் ஆல் தோட்டப் பள்ளி என்று 1947இல் பூச்சோங் பேருந்து நிறுத்துமிடம் அருகில் இப்பள்ளி நிறுவப்பட்டது. தொடக்கத்தில் கிள்ளிங் ஆல் தோட்டம், புக்கிட் ஈத்தாம் தோட்டம் மற்றும் அங்காங் தோட்டத்திலிருந்து தமிழ் மாணவர்கள் பயின்று வந்தனர். இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக 1947இல் உண்ணாமலை பணியாற்றினார்.

நவம்பர் 29, 1968 இல் பள்ளிக் கட்டிடம் தீயில் அழிந்தது.[1] புதிய கட்டிடத்தின் கட்டுமானம் முடியும் வரை தற்காலிகமாக பூச்சோங் அன் மிங் சீனப்பள்ளியில் செயலாற்றி வந்தது. முன்னாள் பூச்சொங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மைக்கேல் சானின் முயற்சியால் ஒரு புதிய இரண்டு மாடி கட்டிடம் தற்போது உள்ள பள்ளித் தளத்தில் எழுப்பப்பட்டது. இக்கட்டிடம் ஆகஸ்டு 16, 1973 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]