மலேசிய இந்தியர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மலேசிய இந்தியர்களின் பட்டியல் (List of Malaysian Indians) பின்வருமாறு:-

மஹாதிர், மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார்
 • மஹாதிர், மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார்.
 • வீ. தி. சம்பந்தன், மலேசிய இந்திய காங்கிரசு (MIC) 5-ஆவது தலைவர்.மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவியை அலங்கரித்தவர்
 • * சிபில் கார்த்திகேசு, மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்
 • தேவன் நாயர் , 1981–1985 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் ஜனாதிபதியாக இருந்தவர்.
 • இராமசாமி பழனிச்சாமி, ஓர் மலேசிய அரசியல்வாதியாவர். தற்போது இவர் மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக்ப் பணியாற்றுகிரார்
 • கோவிந்தசாமி பழனிவேல், மலேசியாவின் தோட்டத் தொழில் துறை துணை அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரசு (ம.இ.கா) தலைவரும் ஆவார்.
 • மலாக்காவின் துன் அலி, இசுலாமியத் தமிழ்த் தலைவரும் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது தலைவரும் ஆவார்
 • மலேசியா வாசுதேவன், ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்
 • கமால் கமலேஸ்வரன், உலகப் புகழ்பெற்ற இசைஞர். கமால் (Kamahl) என்று மேற்கத்திய இசை உலகில் போற்றப்படுபவர்.
 • திலிப் வர்மன், ஓர் மலேசியப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்
 • பிரசாந்தினி
 • யுகேந்திரன், ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார்.
 • ஹரன் காவேரி, படம் மதிப்பெண்களை ஒரு இசையமைப்பாளர் மற்றும் மலேசிய தமிழ் சினிமாவில் ஒலித்தடங்கள்
 • ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையும் முன்னாள் இலங்கை அழகுராணியுமாவார். 2006 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் (மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்ஸ்) வெற்றி பெற்றார்.
 • டெபோரா பிரியா ஹென்றி, மிஸ் யுனிவர்ஸ் மலேஷியா 2011
 • ரவிச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர். 1960கள்-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்
 • த. ஆனந்த கிருஷ்ணன், மலேசியா தொழிலதிபர்.
 • டோனி பெர்னாண்டஸ், என்பவர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் (Now everyone can fly) எனும் மகுட வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்
 • தம்புசாமி பிள்ளை, வாழ்நாளில் பெரும் பகுதியை மலாயா தமிழர்களின் கலை கலாசாரங்களுக்கு அர்ப்பணிப்பு செய்தவர். கொடை உள்ளமும் தாராள மனமும் கொண்டவர். சமயம், மொழி பார்க்காமல் தம் செல்வத்தை தர்ம சிந்தனையுடன் அள்ளிக் கொடுத்தவர்
 • வேதமூர்த்தி பொன்னுசாமி, ஒரு மலேசிய வழக்குரைஞர் ஆவார். இவர் மனித உரிமைகள் ஆர்வலர். தற்போது இண்ட்ராப் குழுவினருடன் இணைந்து, மலேசிய இந்துக்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
 • இராசம்மா பூபாலன், என்பவர் மலேசிய விடுதலைப் போராளி, மலேசியப் பெண்ணுரிமை போராட்டவாதி, ஜான்சி ராணி படைப் போராளிமலேசிய சமூக சேவகி, கல்வியாளர். 1943-இல் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படையில் இணைந்து இரண்டாம் உலகப்போரின் பர்மா போரில் சேவை செய்தவர்
 • சி. ஜே. எலியேசர், பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.
 • பி. சி. சேகர், மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வியூகத்திற்கு மாற்றியவர்நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை என்று போற்றப்படுகிறவர். மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர், முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர்.
 • ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். மலாயா என்று அழைக்கப்பட்ட மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர்
 • ஜான் திவி, மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். ம.இ.கா வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். மலேசிய இந்தியர்களின் அரசியலில் முன்னோடியாக வாழ்ந்தவர்,
 • நைக்கல் டேவிட், உலக இல்லை 1 ஸ்குவாஷ் வீரர்
 • ச. சாமிவேலு, மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவை
 • ச. சுப்பிரமணியம்
 • வி. மாணிக்கவாசகம், ம.இ.கா. எனும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆறாவது தலைவர். இவர் 1973ஆம் ஆண்டில் இருந்து 1978ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் சேவை ஆற்றியுள்ளார். மலேசிய
 • சீனிவாசகம் தர்ம ராஜா,
 • இராமசாமி பழனிச்சாமி, ஓர் மலேசிய அரசியல்வாதியாவர். தற்போது இவர் மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக்ப் பணியாற்றுகிரார். இவர் பினாங்கு இராமசாமி என்ற பெயரில் பிரபலமானவர். மேலும் படு கவான் தொகுதியின் சார்பாக மலேசிய பாராளுமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.
 • கர்பால் சிங்
 • ஜெயக்குமார் தேவராஜ், மலேசிய அரசியல்வாதியும், மலேசிய இந்தியச் சமூக ஆர்வலரும் ஆவார்
 • எம். குலசேகரன், மலேசிய அரசியல்வாதி. இவர் மலேசிய இந்திய, சீன, பூர்வீகப் பழங்குடியினரின் உரிமைகள் போராட்டவாதியும் ஆவார்
 • சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், தந்தை செல்வா எனப் பல இலங்கைத் தமிழர்களால் குறிப்பிடப்படுபவர். அவர் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான தலைவராவார்.
 • எஸ். ஏ. கணபதி, என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர்.
 • கமால் கமலேஸ்வரன், உலகப் புகழ்பெற்ற இசைஞர். கமால் (Kamahl) என்று மேற்கத்திய இசை உலகில் போற்றப்படுபவர்.
 • கே.ஆர். சோமசுந்தரம், மலேசியாவின் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர்;இந்தியாவின் விடுதலைக்காக மலாயாவில் இருந்து போராடியவர்; நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் தலைமை அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றியவர்.
 • சந்திரமலர் ஆனந்தவேல், மலேசியாவின் காவல் துறையில் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஆணையர் பதவியை வகித்த முதல் மலேசியப் பெண்மணி. அனைத்துலகக் காவல் துறையின் மாநாடுகளில் மலேசியா வைப் பிரதிநிதித்தவர். ஐக்கிய நாடுகள் அவை யில் உயர் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். மலேசியக் காவல் துறைப் பயிற்சிக் கல்லூரியின் முதல் பெண் ஆணையர்.
 • பி. சி. சேகர், மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வியூகத்திற்கு மாற்றியவர்
 • ராஜாமணி மயில்வாகனம், மலேசியாவில் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை. ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். ஆசியான், தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். பல ஆசிய, தேசியச் சாதனைகளைப் படைத்தவர். மலேசியாவின் ஓட்டப் பந்தய வீராங்கனை விருதைப் பெற்ற முதல் பெண்மணி
 • கா. கலியபெருமாள், இவர் மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 80க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிக்கூடப் பயிற்சி நூல்களை எழுதியவர். நூற்றிற்கும் மேலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை எழுதியவர். மலேசியாவில் தமிழர் சடங்கு முறைகளை முறையாக வடிவமைத்துக் கொடுத்தவர்.
 • சி. ஜெயபாரதி, தமது எழுத்தாலும் பேச்சாலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றிவரும் ஒரு தமிழறிஞர். மருத்துவர். மலேசியாவின் சுங்கைப்பட்டாணி அரச மருத்துவமனையில் இயக்குநராக இருந்தவர்.