உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை பாக்காப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கை பாக்காப்
Sungai Bakap
சுங்கை பாக்காப் நகர்ப்புறம்
சுங்கை பாக்காப் நகர்ப்புறம்
சுங்கை பாக்காப் is located in மலேசியா
சுங்கை பாக்காப்
சுங்கை பாக்காப்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°12′00″N 100°30′00″E / 5.20000°N 100.50000°E / 5.20000; 100.50000
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்தென் செபராங் பிறை
அரசு
 • உள்ளூராட்சிசெபராங் பிறை
 • நகராண்மைக் கழகத் தலைவர்ரொசாலி முகமட்
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
14200
மலேசியத் தொலைபேசி+6045
மலேசியப் போக்குவரத்து எண்P
இணையதளம்http://www.mpsp.gov.my

சுங்கை பாக்காப் (ஆங்கிலம்: Sungai Bakap; மலாய்: Sungai Bakap; சீனம்: 双溪峇甲); என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு தெற்கில் ஜாவி ஆறு (Sungai Jawi); வடக்கில் சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) நகரமும்; வால்டோர் கிராமமும் உள்ளன.[1]

நிபோங் திபால் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இருப்பினும் மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் புக்கிட் மெர்தாஜாம்.

ஈப்போ, கோலாலம்பூர், பினாங்கு, அலோர் ஸ்டார் போன்ற மாநகரங்களில் இருந்து சுற்றுப் பயணிகள் இங்கு வந்து ஓய்வு எடுத்துக் கொள்வது வழக்கம். இங்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அதனால் அதிகமான அளவில் சுற்றுப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.

கிராமப் பகுதிகள்

[தொகு]

சுங்கை பாக்காப் நகர்ப் பகுதியில் சில கிராமங்கள் உள்ளன. அவற்றுள் வால்டோர் கிராமம் இந்த நகரத்திற்கு மிக முக்கியமான இடமாகும். இங்கு நிறைய உணவகங்கள் உள்ளன.

  • ஜாலான் ஸ்டேசன் கிராமம் (Kampung Jalan Stesen)
  • தித்தி ஈத்தாம் கிராமம் (Kampung Titi Hitam)
  • மஸ்ஜித் பாரு கிராமம் (Kampung Masjid Baru)
  • ஜாவி, சுங்கை பாக்காப் கிராமம் (Kampung Jawi, Sungai Bakap)
  • லீமா கொங்சி கிராமம் (Kampung Lima Kongsi)
  • வால்டர் கிராமம் (Kampung Valdor)

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

சுங்கை பாக்காப் நகர்ப்புறத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 392 மாணவர்கள் பயில்கிறார்கள். 42 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD4029 சுங்கை பாக்காப் SJK(T) Ldg Sempah செம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 14200 சுங்கை ஜாவி 82 10
PBD4032 சுங்கை பாக்காப் SJK(T) Ladang Valdor வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 14200 சுங்கை பாக்காப் 189 17
PBD4034 சுங்கை பாக்காப் SJK(T) Sungai Bakap சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி 14200 சுங்கை ஜாவி 121 15

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sungai Bakap is a town in Seberang Perai Selatan. It is located immediately to the south of Valdor". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை_பாக்காப்&oldid=3422237" இலிருந்து மீள்விக்கப்பட்டது