பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KC02 
Rapid_KL_Logo
பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம்
Batu Kentonmen Komuter Station
பொது தகவல்கள்
அமைவிடம்பத்து கென்டன்மன், ஈப்போ சாலை, 51200 கோலாலம்பூர்
ஆள்கூறுகள்3°11′53.1″N 101°40′52.2″E / 3.198083°N 101.681167°E / 3.198083; 101.681167
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம் (KTM)
ரேபிட் ரெயில் (MRT)
தடங்கள்   சிரம்பான்  
பத்துமலை-புலாவ் செபாங்
(கேடிஎம் கொமுட்டர்)
நடைமேடை2 பக்க நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KC02 
வரலாறு
திறக்கப்பட்டது KC02  சூலை 2010
மின்சாரமயம்உண்டு
முந்தைய பெயர்கள்Kent
சேவைகள்
முந்தைய நிலையம்   பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம்   அடுத்த நிலையம்
பத்துமலை
>>>
கம்போங் பத்து
 
சிரம்பான் வழித்தடம்
 
செந்தூல்
>>>
தம்பின்
அமைவிடம்
Map
பத்து கென்டன்மன்

பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batu Cantonment Komuter Station; மலாய்: Stesen Batu Kentonmen Komuter) என்பது மலேசியா, கோலாலம்பூர், ஈப்போ சாலையின் 4.5-ஆவது மைலில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]

ஈப்போ சாலை என்பது கோலாலம்பூரில் உள்ள ஒரு பெரிய சாலை; மற்றும் புறநகர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள முதன்மை சாலையாகும்.

வரலாறு[தொகு]

முன்பு இந்த இடத்தில் ஓர் இராணுவத் தடுப்பு மையம்; மற்றும் ஓர் இராணுவ ஆயுதக் கிடங்கு மையம்; என இரு இராணுவ மையங்கள் இருந்தன. அதனால் இந்த இடத்திற்குப் பத்து கென்டன்மன் (மலாய்: Batu Kentomen) என்று பெயர் பெயரிடப்பட்டது.

1905-ஆம் ஆண்டில், இதே இடத்தில் முதன்முதலாக ஒரு தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. அதற்கு பத்து கென்டன்மன் தொடருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் 2010-ஆம் ஆண்டில் அந்த நிலையம், கொமுட்டர் தொடருந்து நிலையமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர், அந்த நிலையத்திற்கு பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் என புதிய பெயர் வைக்கப்பட்டது.

போக்குவரத்து சேவைகள்[தொகு]

இந்த நிலையம் இங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகளுக்கு போக்க்குவரத்து வசதிகளை வழங்கும் நிலையமாக கட்டப்பட்டது. அருகிலுள்ள இராணுவத் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பு நடைபாதைகள் கட்டப்பட்டு உள்ளன.[2]

இராணுவ ஊழியர்கள், கொமுட்டர் நிலையத்தை வசதியாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த நடைபாதைகள் உதவுகின்றன.

நடைபாதை வழித்தடங்களை இணைப்பதற்கும்; மற்றும் பயணச் சீட்டு அலுவலகத்திற்குச் செல்லும் பாதைகளை இணைப்பதற்கும்; மின்தூக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையம் ஊனமுற்றோருக்கான நட்புறவு நிலையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் முக்கிய தளங்கள் உலோக கூரைகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

பெயர்[தொகு]

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் காலத்திலும்; மற்றும் 1980-ஆம் ஆண்டுகள் வரையிலும்; பத்து கென்டன்மன் நிலையம் என்பது கென்ட் நிலையம் என்று அறியப்பட்டது.[3]

இணைப்புகள்[தொகு]

புத்ராஜெயாவழித்தடத்தின், கென்டன்மன் துரிதக் கடவு நிலையம் (Kentonmen MRT Station) நடந்து செல்லும் தூரத்தில் தான், பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையமும் உள்ளது. ஆனாலும், கென்டோன்மன் துரிதக் கடவு நிலையமும்; பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையமும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைக்கப்படவில்லை.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "The Batu Kentonmen KTM Komuter Station is a KTM Komuter train station forms part of Seremban Line KTM Komuter train services. The Station opened and electrified on July 2010". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
  2. "It is integrated with the adjacent military base, as sheltered walkways are built allowing military staff convenient use of the station. Slightly off platform, a line from the main line branches of into the camp". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
  3. "The KTM Klang Valley rail network circa 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]