சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | சாலாக் செலாத்தான், கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°05′54″N 101°42′17″E / 3.09833°N 101.70472°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) ரேபிட் ரெயில் (MRT) | ||||||||||
தடங்கள் | (கேடிஎம் கொமுட்டர்) பத்துமலை-புலாவ் செபாங் மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KC03 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | KC03 1995 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Salak Selatan Komuter Station; மலாய்: Stesen Komuter Salak Selatan) என்பது மலேசியா, கோலாலம்பூர், சாலாக் செலாத்தான் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]
சாலாக் விரைவுச்சாலை -இன் எதிர்ப்புறமாக, சாலாக் செலாத்தான் நகரில் இருந்து 400 மீட்டர் தெற்கே இந்த நிலையம் அமைந்துள்ளது.
பொது
[தொகு]சிரம்பான் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் முதன்மையாகச் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் நான்கு தொடருந்து பாதைகளைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த நிலையத்தில், வடக்கு அல்லது தெற்கு செல்லும் பயணிகளுக்கு இரண்டு நடைபாதைகள் மட்டுமே உள்ளன. இரண்டு வெளிப்புறப் பாதைகளால் நடைபாதைகள் சேவை செய்யப்படுகின்றன.
அதே வேளையில், நிலையத்தில் நடுவில் உள்ள இரண்டு தடங்கள், நிலையத்தில் நிற்காத தொடருந்துகளுக்கான மாற்றுவழி தடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையம் ஒரு சிறிய தொடருந்து ஊழியர் குழுவினரைக் கொண்டு செயல்படுகிறது.[2]
இலகுத் தொடருந்து நிலையம்
[தொகு]SP15 சாலாக் செலாத்தான் இலகுத் தொடருந்து நிலையம், இந்த சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில், மிக அருகில் அமைந்துள்ளது.
அடுத்த நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், சாலையின் வழியாகத்தான் பயணிகள் நடந்து செல்ல வேண்டும். இரண்டு நிலையங்களும் மிக அருகில் இருந்தாலும் அவை ஒருங்கிணைக்கப்படவில்லை.
மேலும் காண்க
[தொகு]- செபுத்தே கொமுட்டர் நிலையம்
- மிட் வெளி கொமுட்டர் நிலையம்
- கோலாலம்பூர் சென்ட்ரல்
- தாமான் வாயூ கொமுட்டர் நிலையம்
- பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Salak Selatan KTM station is a KTM Komuter train station located near the Kuala Lumpur township of Salak South. Facing the Salak Expressway off exit 2704 of the highway, the station is situated south from the old town of Salak South, about 400m apart". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ "The Salak Selatan KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Line. The Station was completed and opened to the public on 1995". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.