கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம்
கஸ்தாம் சாலை Jalan Kastam | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KD18 | |||||||||||
கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | சீன மொழி: 关税路 | ||||||||||
அமைவிடம் | கஸ்தாம் சாலை, கிள்ளான் துறைமுகம், சிலாங்கூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°0′46″N 101°24′9″E / 3.01278°N 101.40250°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
தடங்கள் | KD18 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் | ||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை; 1 தீவு மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
தொடருந்து இயக்குபவர்கள் | KD18 மலாயா தொடருந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD18 | ||||||||||
வரலாறு | |||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 25 kV AC மின்மயமாக்கல் | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Jalan Kastam Komuter Station; மலாய்: Stesen Komuter Jalan Kastam); சீனம்: 关税路) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் துறைமுகம் கஸ்தாம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம், கோலா கிள்ளான் நகரத்திற்கு மிக அருகில் உள்ளது.[2]
இந்த நிலையம் கஸ்தாம் சாலை புறநகர்ப் பகுதியின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.
பொது
[தொகு]கஸ்தாம் சாலை நிலையத்திற்கு அருகில் மலாயா தொடருந்து நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. தற்போது அந்தக் கிடங்கு பழைய தொடருந்து இயந்திரங்களைக் கிடத்தி வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அவை பின்னர் பழைய இரும்பு வணிகர்களிடம் அனுப்பப்படும்.[3]
கஸ்தாம் சாலை கொமுட்டர் நிலையம் கோலா கிள்ளான் புறநகர் பகுதியில் கட்டப்பட்டது; மற்றும் கிள்ளான் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள கஸ்தாம் சாலை என்ற புறநகர்ப் பகுதியின் பெயரால் பெயரிடப்பட்டது.[4]
1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து கஸ்தாம் சாலை நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jalan Kastam KTM station is a commuter train halt located in Port Klang, Selangor and served by the Sentul-Port Klang Route of the KTM Komuter railway system". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
- ↑ "The KTM Jalan Kastam Railway Station (Stesen Keretapi) is located in Port Klang in the state of Selangor and is a stop on the KTM Komuter Route (Laluan) between Tanjung Malim and Pelabuhan Klang (via KL Sentral station)". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
- ↑ "The KTM scrapyard and depot located beside the Station to house old, broken down locomotives". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
- ↑ "KTM Komuter - Jalan Kastam Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 19 December 2010. பார்க்கப்பட்ட நாள் 31 October 2024.
மேலும் காண்க
[தொகு]- கிள்ளான் கொமுட்டர் நிலையம்
- புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம்
- தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம்
- கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை
- தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்