கெப்போங்

ஆள்கூறுகள்: 3°12′51.2″N 101°38′20.1″E / 3.214222°N 101.638917°E / 3.214222; 101.638917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்போங்
Kepong
நகரம்
Map
கெப்போங் is located in மலேசியா
கெப்போங்
      கெப்போங்
ஆள்கூறுகள்: 3°12′51.2″N 101°38′20.1″E / 3.214222°N 101.638917°E / 3.214222; 101.638917
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
கூட்டரசு நிலப்பகுதிகோலாலம்பூர் கூட்டரசு மாநிலம்
அரசு
 • உள்ளூராட்சிகோலாலம்பூர் மாநகர் கழகம்
 • மேயர்முகமட் அமின் நோர்டின்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
52xxx, 51xxx
மலேசியத் தொலைபேசி எண்+603-62
போக்குவரத்துப் பதிவெண்B

கெப்போங், (மலாய்: Kepong; ஆங்கிலம்: Kepong; சீனம்: 甲洞); என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி நிலப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரம். ’கெப்போங்’ என்பது ஒரு மலாய்ச் சொல். "சூழ்" அல்லது "சுற்று" என்று பொருள். இந்த நகரம் ஒரு மலைத்தொடரால் சூழப்பட்டு உள்ளது. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம்.

கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள் டாமன்சாரா (சிலாங்கூர்), கெப்போங், குவாங் மற்றும் கோலா சிலாங்கூர்.

முக்கியச் சுற்றுலா இடங்கள்[தொகு]

 • மலேசிய வன ஆய்வுக் கழகம் (Forest Research Institute Malaysia)[1]
 • துமாசிக் வெள்ளீயத் தொழிற்சாலை (Temasek Pewter Factory)[2]
 • கெபோங் சீனக் கோயில்கள்
 • சாம்னாக் சம்போதி பௌத்த ஆலயம் (Samnak Sambodhi Buddhist Temple)
 • கெப்போங் பெருநகரப் பூங்கா (Kepong Metropolitan Park). பரப்பளவு 90 ஹெக்டர். கோலாலம்பூரில் உள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். பத்துமலை பகுதியில் இருந்து எளிதாக அணுகலாம்.
 • கெப்போங் ஏரிக்கரைப் பூங்கா (Lake Gardens)
 • பார்க்சிட்டி பூங்கா (Central Park 2 Desa Parkcity)

நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

கோலாலம்பூரின் கூட்டாட்சிப் பிரதேசத்தின் 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் கெப்போங் ஒன்றாகும். இந்தத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த லிம் லிப் எங் (Lim Lip Eng) ஆவார்.[3]

போக்குவரத்து[தொகு]

கெப்போங் பகுதியில் இரு இரயில் நிலையங்கள் உள்ளன. முதலாவது KA06 கெப்போங் இரயில் நிலையம் (KTM KA06). இரண்டாவது  KA07  கெப்போங் சென்ட்ரல் நிலையம் (KA07 Kepong Sentral).

எம்.ஆர்.டி. சுங்கை பூலோ செர்டாங் புத்ராஜெயா இரயில் பாதை (MRT Sungai Buloh Serdang Putrajaya Line) உருவாக்கப்பட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டில் சேவை தொடங்கப் படுகிறது.[4]

ரேபிட் கேஎல் (RapidKL); எஸ்.ஜே. பேருந்து (SJ Bus); மற்றும் சிலாங்கூர் ஆம்னிபஸ் (Selangor Omnibus) ஆகியவை கெப்போங் பகுதியில் பேருந்து போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வருகின்றன.

சுங்கை பூலோ - செர்டாங் - புத்ராஜெயா - வழித்தடம்[தொகு]

எம்ஆர்டி. (Mass Rapid Transit) சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடத்தில் (MRT Sungai Buloh Serdang Putrajaya Line), கெப்போங் சென்ட்ரல் கொமுட்டர் நிலையம் அமைந்துள்ளது.

புத்ராஜெயா வழித்தடம் (MRT Putrajaya Line) அல்லது எம்.ஆர்.டி., (Mass Rapid Transit 2) முன்பு சுங்கை சுங்கை பூலோ - செர்டாங் - புத்ராஜெயா - இரயில் சேவை என அழைக்கப்பட்டது (Sungai Buloh–Serdang–Putrajaya Line (SSP Line). இது பன்னிரண்டாவது இரயில் போக்குவரத்துப் பாதையாகும்.

கோலாலம்பூரில் இது இரண்டாவது விரைவுப் போக்குவரத்து (Mass Rapid Transit) பாதை. கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், நான்காவது முழுத் தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத சேவை. இந்தச் சேவை கோலாலம்பூரில் உள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு (Kuala Lumpur known as the Klang Valley Integrated Transit System) எனவும் அழைக்கப் படுகிறது.[5]

கெப்போங் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

கோலாலம்பூர் கூட்டரசு பகுதியான கெப்போங்கில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி. 364 மாணவர்கள் பயில்கிறார்கள். 27 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
WBD0184 கெப்போங் SJK(T) Ladang Edinburgh எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 52100 கோலாலம்பூர் 364 27

சுங்கை பூலோ - புத்ராஜெயா இரயில் சேவை காட்சியகம்[தொகு]

சுங்கை பூலோ - செர்டாங் - புத்ராஜெயா - இரயில் சேவை, 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "FRIM". Forest Research Institute Malaysia (FRIM). பார்க்கப்பட்ட நாள் 25 January 2022.
 2. "Taman Kepong Founded in 1981". Tumasek Pewter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 January 2022.
 3. "Portal Rasmi Parlimen Malaysia - Profile Ahli Dewan".
 4. "The Putrajaya Line (previously known as Sungai Buloh-Serdang-Putrajaya Line) is the second line of the KVMRT Project to be developed". MRT Corp. பார்க்கப்பட்ட நாள் 25 January 2022.
 5. "Putrajaya Line MRT Phase 1 Expected To Open In November 2021". 2021-07-08.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kepong
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்போங்&oldid=3960005" இலிருந்து மீள்விக்கப்பட்டது