கம்போங் காசிப்பிள்ளை

ஆள்கூறுகள்: 3°16′38″N 101°41′08″E / 3.27722°N 101.68556°E / 3.27722; 101.68556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்போங் காசிப்பிள்ளை
Kampung Kasipillay
கோலாலம்பூர்
கம்போங் காசிப்பிள்ளை is located in மலேசியா
கம்போங் காசிப்பிள்ளை
      கம்போங் காசிப்பிள்ளை
ஆள்கூறுகள்: 3°16′38″N 101°41′08″E / 3.27722°N 101.68556°E / 3.27722; 101.68556
நாடு மலேசியா
கூட்டரசு நிலப்பகுதி கோலாலம்பூர்
நகர்ப்புறம்கம்போங் காசிப்பிள்ளை
நாடாளுமன்றத் தொகுதிசிகாம்புட்
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்மலேசிய நேரம்
மலேசிய அஞ்சல் குறியீடு51200
மலேசியத் தொலைபேசி எண்+6-03
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W
V
இணையதளம்www.dbkl.gov.my

கம்போங் காசிப்பிள்ளை அல்லது காசிப்பிள்ளை கிராமம், (மலாய்: Kampung Kasipillay; ஆங்கிலம்: Kampung Kasipillay) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் (Federal Territory of Kuala Lumpur) சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் செந்தூல் பகுதியில் உள்ள புறநகரப் பகுதியாகும். கோலாலம்பூர் மாநகரத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் இந்த காசிப்பிள்ளை கிராமமும் ஒன்றாகும்.[1]

கோலாலம்பூரின் மாநகரத்தின் வடக்கில், மாநகர மையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், செந்தூல், சிகாம்புட் ஆகிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. அத்துடன் பத்து மலைக்குச் செல்லும் வழியில் ஜாலான் ஈப்போ (Jalan Ipoh) சாலையின் கிள்ளான் ஆற்று பகுதியில் உள்ளது.[2]

செந்தூல் நகர்ப் பகுதிக்குள், காசிப்பிள்ளை கிராமம் அமைந்து இருப்பதால் இங்கு இந்தியர்களின் நடமாட்டத்தை அதிகமாகக் காணலாம்.

காசிப்பிள்ளை[தொகு]

கம்போங் காசிப்பிள்ளை எனும் பெயரில் கம்போங் (Kampung) எனும் சொல் மலாய் மொழியில் கிராமம் என்பதைக் குறிப்பிடுவதாகும். 1900-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூரில், காசிப்பிள்ளை (Kasipillay) என்பவர் மிகவும் பிரபலமாக விளங்கியவர்.

தமிழர்ச் சமுதாயத்தின் தலைவராக மதிக்கப்பட்டவர். செல்வச் சிறப்புமிக்க 1900-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர் தமிழர்களின் தலைவராக இருந்தவர் என்றும் அறியப் படுகிறார்.

செந்தூல் வரலாறு[தொகு]

மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் செந்தூலும் ஒரு பகுதியாகும். செந்தூலில் அதிகமான அளவில் இந்து கோயில்களையும், தேவாலயங்களையும் காண முடியும்.[3]

1896-ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, இங்கு தமிழர்கள் அதிகமாக வந்து குடியேறினர். அதனால் தான் இங்கு தமிழர்களை அதிகமாகக் காண முடிகின்றது.[4]

ஈப்போ சாலை[தொகு]

ஈப்போ சாலை எனும் ஜாலான் ஈப்போ (Jalan Ipoh) என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாகும். கோலாலம்பூர் மாநகராட்சி, (Dewan Bandaraya Kuala Lumpur) 2014 நவம்பர் 26-ஆம் தேதி, ஜாலான் ஈப்போ எனும் பெயரை ஜாலான் சுல்தான் அசுலான் சா என மாற்றம் செய்தது.

1980-ஆம் ஆன்டுகளில், மலேசியாவின் மாமன்னர்களின் பெயர்களை கோலாலம்பூர் சாலைகளுக்குச் சூட்டுவது என கோலாலம்பூர் மாநகராட்சி முடிவு செய்தது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharil, Suraya; Razali, Fatin; Mohamed, Zawawi S.; Jun, Chang L.; Peik, A.L.S. (May 2016). "Flood forecasting model using empirical method for a small catchment area". Journal of Engineering Science and Technology 11 (5): 666-672. https://www.researchgate.net/publication/303127052_Flood_forecasting_model_using_empirical_method_for_a_small_catchment_area. 
  2. Mohd Syariefudin Abdullah; Mohd Mahadee Ismail; Mansor Mohd Noor (2016). "Kesepaduan Sosial Dan Kejiranan Di Kawasan Rukun Tetangga". Jurnal Kinabalu 19: 63. https://jurcon.ums.edu.my/ojums/index.php/ejk/article/view/503/345. 
  3. "Sentul's history is reflected in its old-world charm". TheStar. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  4. "Sentul - a historic railway town". TheStar. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.
  5. City folk surprised by DBKL’s sudden decision.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்போங்_காசிப்பிள்ளை&oldid=3642583" இலிருந்து மீள்விக்கப்பட்டது