பண்டார் துன் ரசாக்

ஆள்கூறுகள்: 3°5′0″N 101°43′0″E / 3.08333°N 101.71667°E / 3.08333; 101.71667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் துன் ரசாக்
Bandar Tun Razak
கோலாலம்பூர்
கோலாலம்பூர் காற்பந்து விளையாட்டு அரங்கம்
கோலாலம்பூர் காற்பந்து
விளையாட்டு அரங்கம்
பண்டார் துன் ரசாக் is located in மலேசியா
பண்டார் துன் ரசாக்
      பண்டார் துன் ரசாக்
ஆள்கூறுகள்: 3°5′0″N 101°43′0″E / 3.08333°N 101.71667°E / 3.08333; 101.71667
நாடு மலேசியா
நகர்ப்புறம் கோலாலம்பூர்
தொகுதிபண்டார் துன் ரசாக்
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
56000
மலேசியத் தொலைபேசி எண்+603
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W
V
இணையதளம்www.dbkl.gov.my

பண்டார் துன் ரசாக், (மலாய்: Bandar Tun Razak; ஆங்கிலம்: Bandar Tun Razak; சீனம்: 敦拉萨镇); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், அமைந்து உள்ள புறநகரம். உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அத்துடன் தனித்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகவும் இயங்குகிறது.

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த நகரத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பண்டார் துன் ரசாக், சுங்கை பீசி உத்திநோக்கு மண்டலத்தில் (Bandar Tun Razak - Sungai Besi Strategic Zone) அமைந்து உள்ளது.[1]

அமைவு வசதிகள்[தொகு]

பண்டார் துன் ரசாக்கில், கோலாலம்பூர் காற்பந்து விளையாட்டரங்கம் (Kuala Lumpur Football Stadium); ஈருருளி சுற்றரங்கம் (Velodrome); ஒரு பொது நீச்சல் குளம், விளையாட்டு மையம்; மலேசியத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை (Hospital Universiti Kebangsaan Malaysia); கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்தின் கிளை அலுவலகம்; போன்ற மற்ற வசதிகள் உள்ளன.[2]

மலேசியத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, தற்சமயம் துவாங்கு முக்ரிஸ் மருத்துவமனை (Hospital Canselor Tuanku Muhriz UKM) என்று அழைக்கப் படுகிறது.[3]

வரலாறு[தொகு]
2018-இல், பண்டார் துன் ரசாக் மக்கள் தொகை இன வாரியாக[4]

  இதர இனத்தவர் (1.54%)

பண்டார் துன் ரசாக் 1970-களில், கோலாலம்பூரில் ஒரு சிறிய நகரமாக இருந்தது. முன்னர் காலத்தில் கம்போங் காங்கோ (Kampung Konggo; Congo Village) என்று அழைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் 1960-ஆம் ஆண்டுகளில், காங்கோ குடியரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மலேசிய இராணுவ வீரர்களுக்கான குடியேற்றப் பகுதியாக இருந்தது.

கம்போங் காங்கோ[தொகு]

அதனால் அதற்கு கம்போங் காங்கோ என்று பெயரிடப்பட்டது. இந்தப் பகுதியில் 1990-ஆம் ஆண்டுகளில் புதிய நவீன வீடமைப்புகள் அமைக்கப்பட்டன. அவற்றில் காங்கோவில் பணியாற்றிய இராணுவ வீரர்களில் சிலருக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன. அவர்களில் சிலர் இன்னும் அங்கு வாழ்கின்றனர்.

1984 பிப்ரவரி 1-ஆம் தேதி மலேசியக் கூட்டாட்சி பிரதேசத்தின் 10-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது மலேசியாவின் நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது அவர்களால், கம்போங் காங்கோ என்பது பண்டார் துன் ரசாக் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.[5]

2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மாற்றம்[தொகு]

1990-களின் பிற்பகுதியில், பண்டார் துன் ரசாக், செராஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, தனித்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றப் பட்டது. 2008 பொதுத் தேர்தல் வரை, பண்டார் துன் ரசாக், அம்னோ மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியின் கோட்டையாக இருந்தது.

2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, பண்டார் துன் ரசாக் தொகுதியைக் கைப்பற்றிக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bandar Tun Razak is one of the six strategic zones in Kuala Lumpur". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  2. "The Kuala Lumpur Football Stadium (also known as Cheras Football Stadium) is a multi-purpose stadium located in Cheras. Used mostly for football matches, the stadium holds about 18,000 people.mpur". www.visitkl.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  3. "HCTM – Hospital Canselor Tuanku Muhriz UKM". பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  4. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-20.
  5. "Former Kampung Congo now a vibrant township". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பண்டார் துன் ரசாக்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_துன்_ரசாக்&oldid=3642162" இலிருந்து மீள்விக்கப்பட்டது