புக்கிட் பிந்தாங்

ஆள்கூறுகள்: 3°8′48″N 101°42′40″E / 3.14667°N 101.71111°E / 3.14667; 101.71111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் பிந்தாங்
Bukit Bintang
Map
ஆள்கூறுகள்: 3°8′48″N 101°42′40″E / 3.14667°N 101.71111°E / 3.14667; 101.71111
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
மாவட்டம்புக்கிட் பிந்தாங்
தொகுதிபுக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
55100
தொலைபேசி எண்+603-207
போக்குவரத்துப் பதிவெண்W ; V
இணையதளம்www.dbkl.gov.my
புக்கிட் பிந்தாங் இரவு உணவு அங்காடிகள்

புக்கிட் பிந்தாங், (மலாய்: Bukit Bintang; ஆங்கிலம்: Bukit Bintang; சீனம்: 武吉免登); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், அமைந்து உள்ள ஒரு பொழுதுபோக்கு மற்றும் கடைவல நகரம். இது நகரத்திற்குள் ஒரு நகரம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான நகரப் பகுதியாக விளங்குகிறது.

புக்கிட் பிந்தாங் நகரப் பகுதி, ஜாலான் புக்கிட் பிந்தாங் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதி நீண்ட காலமாக கோலாலம்பூரின் மிக முக்கியமான சில்லறை வணிகப் பகுதியாகவும் விளங்கி வருகிறது.

அமைவிடம்[தொகு]
2022-இல் புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (15.3%)
  சீனர் (71.6%)
  இதர இனத்தவர் (1.1%)

புக்கிட் பிந்தாங் கடைவலப் பகுதி, பல முக்கியமான விற்பனை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், மதுபான விடுதிகள், இரவுச் சந்தைகள், உணவு அங்காடிகள் மற்றும் பல்வகை மேல்நாட்டு உணவகங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே; குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமானது.[1]

மலேசியாவில் கணினிப் பொருட்களின் சொர்க்கம் எனும் அடைமொழியும் இந்தப் புக்கிட் பிந்தாங்கிற்கு உண்டு. 1999-ஆம் ஆண்டில் இருந்து இம்பி பிளாசா (Imbi Plaza) லோ யாட் பிளாசா (Low Yat Plaza) ஆகிய இரு விற்பனை வளாகங்களும் கணினி தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.[2][3]

2021 சூன் மாதம், கோலாலம்பூர் மாநகராட்சி, புக்கிட் பிந்தாங் சந்திப்பில் சிபுயா பாணியிலான பாதசாரிக் கடவையை (Shibuya-style pedestrian crossing) உருவாக்கியது. கோலாலம்பூர் ஒற்றைத் தண்டவாள நிலையத்திற்கு (KL Monorail Line) கீழ், இந்தப் பாதசாரிக் கடவை அமைந்து உள்ளது. இதற்கு பிந்தாங் நடைபாதை என்று பெயர்.[4][5]

கோலாலம்பூரின் தங்க முக்கோணம்[தொகு]

கோலாலம்பூரின் தங்க முக்கோணத்திற்குள் (Kuala Lumpur's Golden Triangle) புக்கிட் பிந்தாங் மாவட்டம் அமைந்து உள்ளது. இந்த முக்கோணப் பகுதி புக்கிட் பிந்தாங் சாலையில் தொடங்கி ராஜா சூலான் (Raja Chulan) புது சாலையில் முடிவு அடைகிறது.[6]

புக்கிட் பிந்தாங் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள சுல்தான் இசுமாயில் சாலை; இம்பி சாலை (Imbi Road); வால்டர் கிரேனியர் சாலை (Walter Grenier Road); பூலான் சாலை, சங்காட் புக்கிட் பிந்தாங் (Changkat Bukit Bintang); அலோர் சாலை ஆகியவை இந்த மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப் படுகின்றன.

புக்கிட் பிந்தாங் நகரத்தின் தெற்கில் புடு செராஸ்; மேற்கில் பெட்டாலிங் தெரு (Chinatown), வடக்கில் புக்கிட் நானாஸ், வட கிழக்கில் கோலாலம்பூர் நகர மையம் (KLCC); கிழக்கில் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் வானளாவி (Tun Razak Exchange), மாலூரி மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.[7]

புகழ்பெற்ற வணிக வளாகங்கள்[தொகு]

புக்கிட் பிந்தாங் லாட் 10 வளாகம்

புக்கிட் பிந்தாங் நகரம், மலேசியாவில் புகழ்பெற்ற கடைவல மாவட்டங்களில் ஒன்றாகும்.

பெர்ஜெயா டைம்ஸ் வளாகம் (Berjaya Times Square)

இம்பி பிளாசா (Imbi Plaza)

பாரன்ஹீட் 88 (Fahrenheit 88)

லோ யாட் பிளாசா (Low Yat Plaza)

சுங்கை வாங் வளாகம் (Sungei Wang Plaza)

லாட் 10 (Lot 10)

பெவிலியன் கோலாலம்பூர் (Pavilion Kuala Lumpur)

லாலா போர்ட் புக்கிட் பிந்தாங் நகர மையம் (LaLaport Bukit Bintang City Centre)

போன்ற வணிக வளாகங்கள் இந்தப் பகுதியில்தான் அமைந்து உள்ளன. மலேசியாவில் பெரும்பாலோருக்கு நன்கு அறியப்பட்ட வளாகங்கள் ஆகும்.[8]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bukit Bintang is also known as Bintang Walk or Starhill. Shopaholics rejoice at the mere mention of 'Bukit Bintang' as the Starhill area is considered the best shopping and entertainment district of Kuala Lumpur". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  2. "Malaysia's Largest IT Lifestyle Mall". Plaza Lowyat. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  3. "Plaza Imbi, is a shopping mall in downtown Kuala Lumpur. The 7-storey mall is located on Jalan Imbi, across from Berjaya Times Square". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  4. "Bukit Bintang, Bintang Walk or Starhill, center for choices of abundant fashion, food & entertainment options – klia2.info". பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  5. "In a city known as an international shopping haven, the Bukit Bintang district stands out for having some of the trendiest shops and tallest buildings". GPSmyCity (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  6. "Known as Kuala Lumpur's commercial, shopping and entertainment hub, the Golden Triangle is actually a large area that encompasses a number of major streets". kuala-lumpur.ws. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  7. "Designed as KL's best-connected address, TRX's 70-acre masterplan includes a dedicated MRT interchange station and direct accesses to Jalan Tun Razak, MEX and SMART Highways". www.trx.my. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  8. "Home to several of Kuala Lumpur's premiere sightseeing landmarks, it is called the colonial core of KL". kuala-lumpur.ws. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: புக்கிட் பிந்தாங்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_பிந்தாங்&oldid=3978505" இலிருந்து மீள்விக்கப்பட்டது