உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாங் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பாங் சாலை
Jalan Ampang
Selangor State Route B31
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு கோலாலம்பூர் மாநகராட்சி
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கோலாலம்பூர், மலாக்கா சாலை
 கோலாலம்பூர் உள் வட்டச்சுற்று சாலை
சுல்தான் இசுமாயில் சாலை
E12

 அம்பாங்-கோலாலம்பூர் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை (AKLEH)
கோலாலம்பூர் உள் வட்டச்சுற்று சாலை 1
(துன் ரசாக் சாலை)
செலாத்தாக் சாலை
28 கோலாலம்பூர் மத்திய சுற்றுச் சாலை 2
E19

 சுங்கை பீசி-உலு கிள்ளான் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை (SUKE)
தாமான் புத்ரா சாலை
லெம்பா ஜெயா சாலை
கிழக்கு முடிவு:அம்பாங், சிலாங்கூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோலாலம்பூர் மாநகர் மையம்
(Kuala Lumpur City Centre) கம்போங் டத்தோ கிராமாட், செத்தியாவாங்சா, செதாபாக், உலு கிள்ளான்,
நெடுஞ்சாலை அமைப்பு

அம்பாங் சாலை அல்லது ஜாலான் அம்பாங் (ஆங்கிலம்: Ampang Road) (Selangor State Route B31); (மலாய்: Jalan Ampang), என்பது மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு, சிலாங்கூர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய சாலை ஆகும். 1880-களில் கட்டப்பட்ட இந்தச் சாலை கிள்ளான் பள்ளத்தாக்கின் பழைமையான சாலைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.[1]

அம்பாங் ஜெயாவிற்கு ஒரு முக்கிய சாலையாக அமைந்து இருக்கும் இந்தச் சாலையை, துன் ரசாக் சாலை அல்லது உலு கிள்ளான் சாலை வழியாக எளிதில் அணுகலாம். உலு கிள்ளான் சாலை இப்போது கோலாலம்பூர் மத்திய சுற்றுச் சாலை 2-இன் ஒரு பகுதியாக உள்ளது. இந்தச் சாலையை செராஸ் பகுதியில் இருந்து சாமாலின் சாலை (Jalan Shamelin) வழியாகவும் அணுகலாம்.

வரலாறு

[தொகு]

1857-ஆம் ஆண்டு, கிள்ளான் நகரில் மலாய் மன்னராக இருந்த ராஜா அப்துல்லா (Raja Abdullah bin Raja Jaafar), வெள்ளீயச் சுரங்கங்களை அமைக்கும் பணிக்குச் சீனத் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததில் இருந்து, அம்பாங் நகரின் வரலாறு தொடங்குகிறது.[2]

இதற்கு முன்னர் ராஜா அப்துல்லா, 1849-ஆம் ஆண்டில், அம்பாங்கில் வெள்ளீயச் சுரங்கங்களை திறப்பதற்காக மலாக்காவில் இருந்த சீ யாம் சுவான் (Chee Yam Chuan) எனும் வணிகர்; மற்றும் பிற சீன வணிகர்களிடம் இருந்து பெரும் தொகையைப் பெற்றார்.

அம்பாங் காட்டுப்பகுதி

[தொகு]

இந்தத் தொழிலாளர்கள் அம்பாங், புடு, பத்து எனும் இடங்கில் சுரங்கங்களை அமைக்க, கோம்பாக் ஆறு மற்றும் கிள்ளான் ஆறு ஆகிய இரு ஆறுகளும் கலக்கும் இடத்தில் தங்கினர். பின்னர், இந்தச் சுரங்கங்கள் வணிக மையங்களாக மாறின. அவையே பெரிய நகரமாக உருவெடுக்க வழி வகுத்தது.[3]

அம்பாங் பகுதியின் வளர்ச்சி சீன கடைக்காரர்களை ஈர்த்தது. அந்த வகையில், தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் இருந்த அம்பாங் காட்டுக் குடியேற்றத்தை ஒரு சிறிய நகரமாக மாற்றுவதற்கும் வழிவகுத்தது.

வளர்ச்சி

[தொகு]

1888-ஆம் ஆண்டில், கோலாலம்பூர் சுகாதார வாரியத்தின் (Kuala Lumpur Sanitary Board) தலைவராக சேவை செய்த ஜி. டி. திக்கெல் (G. T. Tickell) என்பவரால் அம்பாங் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போதைய பழைய அம்பாங் சாலையில் சிலாங்கூர் குதிரைப் பந்தய மன்றம் (Selangor Turf Club) இருந்தது. அந்த இடத்தில் தான் தற்போதைய பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் (Petronas Twin Towers) உள்ளன.

சௌக்கிட்

[தொகு]

அப்போதைய பழைய அம்பாங் சாலையின் கிளைச் சாலையில் லோக் சௌ கிட் நிறுவனத்திற்கு சொந்தமான வீடுகளும் நிலங்களும் இருந்தன. லோக் சௌ கிட் (Loke Chow Kit) எனும் சீன வணிகர் வைத்து இருந்த இடம்தான் இப்போது சௌக்கிட் என்று அழைக்கப்படுகிறது.

போக்குவரத்து

[தொகு]

அம்பாங் சாலையின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பகுதியில் ஐந்து விரைவுப் போக்குவரத்து நிலையங்கள் உள்ளன:

வழித்தடம்

[தொகு]

பொதுவாக, அம்பாங் சாலை கிழக்கு-மேற்கு திசையில் செல்கிறது. புக்கிட் நானாஸ் நகர்ப் பகுதியைக் கடந்து வடகிழக்கு திசையில் தொடர்கிறது.

2022 ஆம் ஆண்டில் அம்பாங் சாலையின் காட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jalan Ampang B31 - jalan raya tertua di Kuala Lumpur Overview". Blog Jalan Raya Malaysia. 26 January 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2013.
  2. Andaya, Barbara Watson (1982). A history of Malaysia. New York: St Martin's Press. pp. 139.
  3. "Yap Ah Loy's Administration". Yapahloy.tripod.com. 2000-09-12. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாங்_சாலை&oldid=4111241" இலிருந்து மீள்விக்கப்பட்டது