துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டரசு சாலை 3113
துன் டாக்டர் லிம் சோங் யூ
விரைவுச்சாலை
Tun Dr Lim Chong Eu Expressway
வழித்தட தகவல்கள்
நீளம்:17.84 km (11.09 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:வெல்ட் குவே, ஜார்ஜ் டவுன்
 JKR(P)19 பினாங்கு மிடல்ரிங் சாலை
பினாங்கு இரண்டாவது பாலம்
துன் டாக்டர் அவாங் சாலை
JKR(P)10 பத்து மாவுங் சாலை
பினாங்கு இரண்டாவது பாலம்
South முடிவு:பத்து மாவுங்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
குளுகோர்
பாயான் லெப்பாஸ்
பாயான் லெப்பாஸ் தொழில்துறை வளாகம்
பினாங்கு இரண்டாவது பாலம்
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
நெடுஞ்சாலை அமைப்பு

துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை அல்லது கூட்டரசு சாலை 3113 (மலேசியா) ஆங்கிலம்: Tun Dr Lim Chong Eu Expressway அல்லது Federal Route 3113; சீனம்: 林倉祐大道; மலாய்: Lebuhraya Tun Dr Lim Chong Eu அல்லது Jalan Persekutuan 3113; என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள ஒரு விரைவுச்சாலை ஆகும். இந்தச் சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தை பத்து மாவுங் நகர்ப் பகுதியுடன் இணைக்கிறது.[1]

17.84 கி.மீ. (11.09 மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச் சாலை, பினாங்கு தீவின் கிழக்குக் கடற்கரையைச் சுற்றி வருகிறது. முன்னாள் பினாங்கின் முதல்வர் துன் டாக்டர் லிம் சோங் யூ நினைவாக 7 டிசம்பர் 2010-இல் அமைக்கப்பட்டது.[2]

பொது[தொகு]

இந்த விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0, பத்து மாவுங் நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சாலையில் இரண்டு பிரிவுகள் உள்ளன:

ஜெலுத்தோங் விரைவுச் சாலை (Jelutong Expressway);

பாயான் லெப்பாஸ் விரைவுச் சாலை (Bayan Lepas Expressway).

பின்னணி[தொகு]

1983-ஆம் ஆண்டு பினாங்கு பாலம் கட்டப்படும் போது இங்கு ஒரு முன்னோடிச் சாலை உருவாக்கப் பட்டது. 1985-இல் சாலை கட்டுமானம் முடிவுற்றது. பின்னர், இந்தச் சாலை வடக்கு நோக்கி ஜெலுத்தோங் விரைவுச் சாலையாகவும்; தெற்கே பாயான் லெப்பாஸ் விரைவுச் சாலையாகவும் நீட்டிக்கப்பட்டது.

முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் சோங் யூ 24 நவம்பர் 2010-இல் காலமானார். அவர் இறந்த பிறகு, 2010 டிசம்பர் 7-ஆம் தேதி, பினாங்கு மாநில அரசாங்கம் அவரின் நினைவாக அந்த விரைவுச் சாலைக்கு துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை எனப் பெயரை மாற்றியது.[3]

துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலையில் தெங்கு குடின் – குளுகோர் சாலையும் (E36 ) (Jalan Tengku Kudin–Gelugor-Penang Bridge) இணைகிறது.

மேற்கோள்[தொகு]

  1. Statistik Jalan (Edisi 2014). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2014. பக். 57. 
  2. Expressway renamed to honour Chong Eu The Star, December 7, 2010
  3. Penang has renamed a highway as Tun Dr Lim Chong Eu expressway The Star, November 26, 2010

மேலும் காண்க[தொகு]