கூட்டரசு சாலை 217 (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டரசு சாலை 217
பூச்சோங்-சுங்கை பீசி நெடுஞ்சாலை
(Puchong–Sungai Besi Highway)
வழித்தட தகவல்கள்
நீளம்:4.30 km (2.67 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
1995 – present
வரலாறு:1997
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:பூச்சோங்
  டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
JKR(B) 11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா சாலை
கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை
சுங்கை பீசி விரைவுச்சாலை
கிழக்கு முடிவு:சுங்கை பீசி
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கின்ராரா
தேசிய விளையாட்டு வளாகம்
தொழில்நுட்ப பூங்கா மலேசியா
புக்கிட் சாலில்
புஞ்சாக் சாலில்
நெடுஞ்சாலை அமைப்பு

கூட்டரசு சாலை 217 (மலேசியா) அல்லது பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை அல்லது (ஆங்கிலம்: Federal Route 217; மலாய்: Lebuhraya Bukit Jalil) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும்.

இந்தச் சாலை சா ஆலாம் விரைவுச்சாலைக்கு அடுத்த நிலையில், இரண்டாவது பெரிய நெடுஞ்சாலையாகத் திகழ்கிறது. இந்தச் சாலை கிழக்கில் சுங்கை பீசி விரைவுச்சாலையை இணைக்கிறது; மேற்கில் பூச்சோங் அருகே டாமன்சாரா–பூச்சோங் விரைவுச்சாலையை இணைக்கிறது.

புக்கிட் சாலில் நெடுஞ்சாலை[தொகு]

கின்ராரா மற்றும் புக்கிட் சாலில் நகரங்களைக் கடந்து செல்லும் இந்தச் சாலை, மலேசியாவில் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் சற்றே பழமையானது.[1]

முன்பு காலத்தில் கோலாலம்பூரில் இருந்து பூச்சோங் செல்வதற்கு ஒரே ஒரு சாலைதான் இருந்தது. அதுதான் இந்த கோலாலம்பூர் - பூச்சோங் நெடுஞ்சாலை. பின்னர் காலத்தில் புக்கிட் சாலில் நெடுஞ்சாலையுடன் இணைக்கப் பட்டது.

பொது[தொகு]

புக்கிட் சாலில் நெடுஞ்சாலையின் ‘0’ கிலோமீட்டர் (Kilometre Zero), சிலாங்கூர், பூச்சோங் அருகே பூச்சோங் ஜெயா சாலைச் சந்திப்பில் தொடங்குகிறது. பூச்சோங்கில் உள்ள பூச்சோங் நகர மையத்தில் ‘0’ கிலோமீட்டர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புக்கிட் சாலில் நெடுஞ்சாலை, 1998-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது (1998 Commonwealth Games), சா ஆலாம் விரைவுச் சாலைக்கு அடுத்த நிலையில், புக்கிட் சாலில் தேசிய விளையாட்டு வளாகத்திற்குச் செல்லும் இரண்டாவது முக்கிய நெடுஞ்சாலையாக மாறியது.

2004-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை கூட்டரசு சாலை 217 (மலேசியா) என்று மலேசிய அரசிதழில் பதிவு செய்யப்பட்டது. வேக வரம்பு 90 கி.மீ. வரை அனுமதிக்கப் படுகிறது.

கூட்டரசு சாலை 217 (மலேசியா) இடைச்சாலைகள்[தொகு]

கி.மீ. வெளியேற்றம் இணை
மாற்றம்
செல்லும்
இடம்
217
0
EXIT 21701 பூச்சோங் ஜெயா இடைமாற்றம் வடகிழக்கு

B11 பூச்சோங் சாலை >>> பெட்டாலிங் ஜெயா
ஜாலான் கிள்ளான் லாமா
கூச்சாய் லாமா
பெட்டாலிங் ஜெயா
டாமன்சாரா >>> பூச்சோங் விரைவுச்சாலை

வடமேற்கு

54 கெப்போங்
டாமன்சாரா
பெட்டாலிங் ஜெயா
பண்டார் சன்வே
2 சா ஆலாம்
2 கிள்ளான்
181 புலாவ் இண்டா

தெற்கு

பூச்சோங்
புத்ராஜெயா
29 சைபர்ஜெயா
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

மேற்கோள்[தொகு]

  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. பக். 16–64. 

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டரசு_சாலை_217_(மலேசியா)&oldid=3785454" இலிருந்து மீள்விக்கப்பட்டது