அம்பாங் ஜெயா

ஆள்கூறுகள்: 3°9′0″N 101°46′12″E / 3.15000°N 101.77000°E / 3.15000; 101.77000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாங் ஜெயா
Ampang Jaya
சிலாங்கூர்
அம்பாங் ஜெயா
அம்பாங் ஜெயா
Map
ஆள்கூறுகள்: 3°9′0″N 101°46′12″E / 3.15000°N 101.77000°E / 3.15000; 101.77000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு லங்காட்; கோம்பாக்
நகராட்சி1 சூலை 1992
மக்கள்தொகை (2020[1])
 • மொத்தம்781,089
 • அடர்த்தி3,711/km2 (9,610/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு68000, 55100, 53100
மலேசிய தொலைபேசி எண்+60-3-42, +60-3-41, +60-3-92
இணையதளம்http://www.mpaj.gov.my

அம்பாங் அல்லது அம்பாங் ஜெயா (ஆங்கிலம்: Ampang அல்லது Ampang Jaya; மலாய்: Ampang Jaya) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலம், உலு லங்காட் மாவட்டம் (Hulu Langat District); கோம்பாக் மாவட்டம் (Gombak District) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மாநகர்ப்பகுதி ஆகும்.[2]

பொதுவாக, அம்பாங் எனும் பெயர் மலேசியா முழுமைக்கும் நன்கு அறியப்பட்டச் சொல் ஆகும். அண்மைய காலத்தில் அம்பாங் எனும் சொல் அம்பாங் ஜெயா என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அம்பாங் மாநகர்ப்பகுதி கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் (Kuala Lumpur Federal Territory) கிழக்கு எல்லைக்கு சற்று வெளியே உள்ளது. அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்தால் (Ampang Jaya Municipal Council) நிர்வகிக்கப்படுகிறது. இந்த நகர்ப்பகுதி சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்து இருந்தாலும்; கோலாலம்பூருக்கு மிக மிக அருகில் இருப்பதால்; இன்றும் கோலாலம்பூரின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.[3]


வரலாறு[தொகு]

வரலாற்றின் படி, 1857-ஆம் ஆண்டில், லும்பூர் ஆறு மற்றும் கிள்ளான் ஆறு சங்கமத்தில் அம்பாங் நகரம் நிறுவப்பட்டது. லும்பூர் ஆறு இப்போது கோம்பாக் ஆறு என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அம்பாங் உருவான இடத்தில் இப்போது கோலாலம்பூர் ஜமேக் பள்ளிவாசல் (Kuala Lumpur Jamek Mosque) உள்ளது.

ஈயச் சுரங்கங்களில் வேலை செய்வதற்காகச் சீனர்கள் வருவதற்கு முன்னர், கோலாலம்பூர் நகரம் சில கடைகள் மற்றும் சில வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய குக்கிராமமாக இருந்தது. அம்பாங்கை கோலாலம்பூருடன் இணைக்க ஒரு சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலைதான் இன்றைய அம்பாங் சாலையாகும் (Jalan Ampang').[4]

ராஜா அப்துல்லா[தொகு]

1857-ஆம் ஆண்டில், அப்போதைய கிள்ளான் சுல்தானின் பிரதிநிதியான ராஜா அப்துல்லா, அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களைத் திறப்பதற்காக நெகிரி செம்பிலான் லுக்குட் பகுதியில் இருந்து 87 சீன சுரங்கத் தொழிலாளர்களை அனுப்பினர். இதன் பின்னர்தான் கோலாலம்பூர் வளர்ச்சி அடையத் தொடங்கியது.

கிள்ளான் பள்ளத்தாக்கின் தொடக்கக் காலத்தில், ஈயச் சுரங்கங்கள் திறக்கப்பட்ட முக்கியமான இடங்களில் அம்பாங் ஒன்றாகும். "அம்பாங்" என்ற பெயர் மலாய் சொல்லான எம்பாங்கான் (அல்லது அம்பாங்கன்) எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. எம்பாங்கான் (Empangan) என்றால் அணை என்று பொருள்படும்.[5][6]

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்[தொகு]

மலாயா காலனித்துவ ஆட்சிக் காலத்தின் போதும்; மற்றும் பிப்ரவரி 1974-க்கு இடைப்பட்ட காலத்தின் போதும்; அம்பாங் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் கோலாலம்பூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.[7]

1 பிப்ரவரி 1974-இல் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாங் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது; மேற்குப் பகுதி, கூட்டரசு பிரதேசத்திற்குள் அமைந்து, அம்பாங் ஈலிர் (Ampang Hilir) ஆனது. கிழக்குப் பகுதி, உலு லங்காட் மாவட்டத்தின் (Hulu Langat Kajang District) ஒரு பகுதியாக சிலாங்கூருக்குள் இணைந்தது.[8]

மலாயா அவசரகாலம்[தொகு]

1950-களில் மலாயா அவசரகால உச்சக்கட்டத்தின் போது, பிரித்தானியர்கள் அம்பாங் புதிய கிராமத்தை நிறுவினர். இது கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய சீன குடியிருப்புகளில் ஒன்றாக மாறியது.

1 ஜூலை 1992-இல், கோம்பாக் மாவட்ட ஊராட்சி மன்றம்; மற்றும் உலு லங்காட் மாவட்ட ஊராட்சி மன்றம்; ஆகிய இரு மன்றங்களும் தத்தம் உலு கிள்ளான் மற்றும் அம்பாங் மாவட்டங்களை விட்டுக் கொடுத்தன. அதன் விளைவாக அம்பாங் ஜெயா நகராட்சி உருவாகியது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Banci Penduduk dan Perumahan 2020, Malaysia". https://tableau.dosm.gov.my/t/mbls/views/1202/0_mainpage?:display_count=n&:embed=y&:isGuestRedirectFromVizportal=y&:origin=viz_share_link&:showAppBanner=false&:showVizHome=n. 
  2. "Ampang Jaya, more commonly known as just Ampang, is a town, a mukim and a parliamentary constituency straddling parts of the Hulu Langat District and Gombak District, in eastern Selangor, Malaysia. It is located just outside the eastern border of Kuala Lumpur Federal Territory." (in en). https://placeandsee.com/wiki/ampang-ki-malaysia. பார்த்த நாள்: 21 August 2023. 
  3. "Ampang is a historic town and district of Kuala Lumpur partly located in the state of Selangor. Its area in Kuala Lumpur can be identified as being along the Ampang Road and Ampang Hilir. Ampang is situated to the east of the Kuala Lumpur city centre.". https://heritagemalaysia.my/Kl-Ampang.html. பார்த்த நாள்: 21 August 2023. 
  4. "Jalan Ampang is one of the main roads in Kuala Lumpur. It is also one of the oldest and longest roads in the city, having been around since the earliest days that Kuala Lumpur was established. Jalan Ampang was the route taken by the early miners to open up the tin mines in Ampang." (in en). https://www.penang-traveltips.com/malaysia/kuala-lumpur/jalan-ampang.htm. பார்த்த நாள்: 21 August 2023. 
  5. "The name Ampang originated from the construction of a dam from Bukit Belacan to a town area of Ampang (now called Ampang Point) by Chinese miners who used it for mining tin." (in ms). 12 August 2015. https://www.mpaj.gov.my/en/visitors/ampang-jaya-background. பார்த்த நாள்: 21 August 2023. 
  6. J.M. Gullick (1983). The story of Kuala Lumpur, 1857–1939. Eastern Universities Press (M). பக். 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-967-908-028-5. 
  7. "JPS WPKL - Profil Daerah". http://apps.water.gov.my/jpskomuniti/dokumen/jpswpkl@komuniti-zon%20selatan3.pdf. 
  8. "Map of British Malaya, including the Straits Settlements, Federated Malay States and Malay States not included in the Federation, 1924". https://storage.googleapis.com/raremaps/img/xlarge/43586.jpg. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாங்_ஜெயா&oldid=3778921" இருந்து மீள்விக்கப்பட்டது