ஜாமிஃ பள்ளிவாசல்
ஜாமிஃ பள்ளிவாசல் Masjid Jamek | |
---|---|
![]() | |
அமைவிடம் | கோலாலம்பூர், மலேசியா |
நிறுவப்பட்ட ஆண்டு | 1909 |
நிர்வாகம் | கோலாலம்பூர் இஸ்லாமிக் கவுன்சில் |
கட்டிடக்கலைத் தகவல்கள் | |
கட்டிட மாதிரி | இஸ்லாம், மூரிசு, முகலாயர் |
நீளம் | {{{நீளம்}}} |
மினாரா(க்கள்) | 2 |
ஜாமிஃ பள்ளிவாசல் என்பது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பழமையான பள்ளிவாசலாகும். இது கிளாங் ஆற்றுக்கும் கோம்பஃ ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதனை ஆர்தர் பெனிசன் அப்பாக் என்பவர் வடிவமைத்தார்.
வரலாறு[தொகு]
இப்பள்ளி கட்டிமுடிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழித்து 1909 ஆம் வருடம் செலங்கூர் சுல்தானால் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்நகரத்தில் மலாய்க்காரர்களின் முதல் அடக்கத்தலம் அமையப்பெற்ற பள்ளிவாசலாகும். மலேசியாவின் தேசிய பள்ளிவாசல் 1965ல் திறக்கப்படுவதற்கு முன் இப்பள்ளியே கோலாலம்பூரின் முக்கிய பள்ளிவாசலாக திகழ்ந்தது.
இப்பள்ளிவாசல் மஸ்ஜித் ஜாமிஃ எல்ஆர்டி மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ளது. இந்த இரயில் நிலையத்திற்கு அருகில் மற்றொரு மஸ்ஜித் இந்தியா என்னும் தமிழ் பள்ளிவாசல் அமையப்பெற்றுள்ளது.