சிகாம்புட் மக்களவைத் தொகுதி
சிகாம்புட் (P117) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Segambut (P117) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர் தொகுதி | சிகாம்புட் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; சிகாம்புட், கம்போங் காசிப்பிள்ளை, மாண்ட் கியாரா, ஸ்ரீ கியாரா, பண்டார் மஞ்சளாரா, சிகாம்புட் டாலாம், கம்போங் சுங்கை பெஞ்சாலா |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | அன்னா இயோ (Hannah Yeoh Tseow Suan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 119,652 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 51 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
சிகாம்புட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Segambut; ஆங்கிலம்: Segambut Federal Constituency; சீனம்: 泗岩沫国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P117) ஆகும்.
சிகாம்புட் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து சிகாம்புட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சிகாம்புட்
[தொகு]சிகாம்புட் புறநகர்ப் பகுதி, மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி கூட்டமைப்பில் உள்ள ஒரு முக்கிம்; ஒரு புறநகரம்; அத்துடன் கோலாலம்பூர் கூட்டாட்சியின் துணை மாவட்டமும் ஆகும்.
மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் சிகாம்புட் நகரமும் ஒன்றாகும். சிகாம்புட் புறநகர்ப் பகுதி தனி ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
பண்டார் மஞ்சளாரா
[தொகு]1974-ஆம் ஆண்டுக்கு முன்பு சிகாம்புட் நகர்ப்பகுதி பத்துமலை துணை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது கோலாலம்பூர் மாநகரம் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் மாண்ட் கியாரா; ஸ்ரீ கியாரா போன்ற உயர்தர மனைவீடுக் கட்டடங்கள் உள்ளன. தாமான் ஸ்ரீ சிகாம்புட்; பண்டார் மஞ்சளாரா போன்ற நடுத்தர மனைவீடுகள் உள்ளன. சிகாம்புட் டாலாம்; கம்போங் சுங்கை பெஞ்சாலா போன்ற கிராமப்புற வீடுகளும் உள்ளன. சிகாம்புட் மக்களவைத் தொகுதியில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.[4][5][6]
சிகாம்புட் மக்களவைத் தொகுதி
[தொகு]சிகாம்புட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2023) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் கெப்போங்; லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதிகளில் இருந்து சிகாம்புட் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P106 | 1995–1999 | தான் கீ குவோங் (Tan Kee Kwong) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P117 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | லிம் லிப் எங் (Lim Lip Eng) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜசெக) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | அன்னா இயோ (Hannah Yeoh Tseow Suan) |
பாக்காத்தான் அரப்பான் (ஜசெக) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
சிகாம்புட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
119,652 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
85,491 | 71.45% | ▼ -12.27 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
85,496 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
389 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
389 | ||
பெரும்பான்மை (Majority) |
59,684 | 69.81% | ▼ -0.80 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7][8] |
சிகாம்புட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
அன்னா இயோ (Hannah Yeoh Tseow Suan) |
பாக்காத்தான் | 85,496 | 68,438 | 80.05% | -2.02% ▼ | |
பிரபாகரன் வைத்திலிங்கம் (Prabagaran Vythilingam) |
பெரிக்காத்தான் | - | 8,754 | 10.24% | +10.24% | |
டேனியல் லிங் சியா சின் (Daniel Ling Sia Chin) |
பாரிசான் | - | 8,304 | 9.71% | -1.76% ▼ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Where is Mont Kiara, Kuala Lumpur, Federal Territory of Kuala Lumpur, Malaysia on Map Lat Long Coordinates". www.latlong.net. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "Cover Story: Banking on its location". 24 March 2021.
- ↑ Kaur, Sharen (1 November 2018). "Second fiddle to Mont Kiara | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]