உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் துன் ரசாக் (P124)
மலேசிய மக்களவைத் தொகுதி
கோலாலம்பூர்
Bandar Tun Razak (P124)
Federal Constituency in Kuala Lumpur
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளில்
பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி

மாவட்டம்மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கோலாலம்பூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை119,185 (2022)[1]
வாக்காளர் தொகுதிபண்டார் துன் ரசாக் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலாலம்பூர்; பண்டார் துன் ரசாக், புடு, சுங்கை பீசி , மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, காஜாங்
பரப்பளவு25 ச.கி.மீ[2]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்வான் அசிசா வான் இசுமாயில்
(Wan Azizah Wan Ismail)
மக்கள் தொகை191,318 (2020) [3]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4]




2022-இல் செராஸ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (62.1%)
  சீனர் (26.85%)
  இதர இனத்தவர் (2.31%)

பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bandar Tun Razak; ஆங்கிலம்: Bandar Tun Razak Federal Constituency; சீனம்: 敦拉萨镇国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P124) ஆகும்.

பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பண்டார் துன் ரசாக்

[தொகு]

கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி. உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த நகரத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பண்டார் துன் ரசாக், சுங்கை பீசி உத்திநோக்கு மண்டலத்தில் (Bandar Tun Razak - Sungai Besi Strategic Zone) அமைந்து உள்ளது.[5]

பண்டார் துன் ரசாக் 1970-களில், கோலாலம்பூரில் ஒரு சிறிய நகரமாக இருந்தது. முன்னர் காலத்தில் கம்போங் காங்கோ (Kampung Konggo; Congo Village) என்று அழைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் 1960-ஆம் ஆண்டுகளில், காங்கோ குடியரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மலேசிய இராணுவ வீரர்களுக்கான குடியேற்றப் பகுதியாக இருந்தது.[6]

1984 பிப்ரவரி 1-ஆம் தேதி மலேசியக் கூட்டாட்சி பிரதேசத்தின் 10-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது மலேசியாவின் நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது அவர்களால், கம்போங் காங்கோ என்பது பண்டார் துன் ரசாக் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி

[தொகு]
2018-ஆம் ஆண்டில், மலேசியாவின் துணைப் பிரதமராகப் பதவி வகித்த போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுடன் வான் அசிசா வான் இசுமாயில்
பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1994-ஆம் ஆண்டில் சுங்கை பீசி; செபுத்தே மக்களவைத் தொகுதிகளில் இருந்து
பண்டார் துன் ரசாக் தொகுதி உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P112 1995–1999 தான் சாய் கோ
(Tan Chai Ho)
பாரிசான்
(மலேசிய சீனர் சங்கம்)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P124 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 காலீட் இபராகீம்
(Khalid Ibrahim)
பாக்காத்தான் ராக்யாட்
(பி.கே.ஆர்)
13-ஆவது மக்களவை 2013–2014
2014–2018 சுயேச்சை
14-ஆவது மக்களவை 2018–2020 கமாருதீன் ஜாபார்
(Kamarudin Jaffar)
பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
2020–2022 பெரிக்காத்தான்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வான் அசிசா வான் இசுமாயில்
(Wan Azizah Wan Ismail)
பாக்காத்தான்
(பி.கே.ஆர்)

பண்டார் துன் ரசாக் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
119,185
வாக்களித்தவர்கள்
(Turnout)
93,845 78.74% - 6.35%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
93,021 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
252
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
572
பெரும்பான்மை
(Majority)
9,817 10.56% - 17.83
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7][8]

பண்டார் துன் ரசாக் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
வான் அசிசா வான் இசுமாயில்
(Wan Azizah Wan Ismail)
பாக்காத்தான் 93,021 43,476 46.74% - 11.82 %
கமாருதீன் ஜாபார்
(Kamarudin Jaffar)
பெரிக்காத்தான் - 33,659 36.18% + 36.18% Increase
சியூ இன் கீன்
(Chew Yin Keen)
பாரிசான் - 15,886 17.08% - 13.11%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  4. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "Bandar Tun Razak is one of the six strategic zones in Kuala Lumpur". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  6. "Former Kampung Congo now a vibrant township". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  7. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
  8. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.

மேலும் காண்க

[தொகு]