புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி
புக்கிட் பிந்தாங் (P120) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Bukit Bintang (P120) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 79,782 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | புக்கிட் பிந்தாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; புக்கிட் பிந்தாங், புடு, செராஸ், பெட்டாலிங் தெரு, துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் |
பரப்பளவு | 21 ச.கி.மீ[2] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | போங் குயி லுன் (Fong Kui Lun) |
மக்கள் தொகை | 120,529 [3] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Bintang; ஆங்கிலம்: Bukit Bintang Federal Constituency; சீனம்: 武吉免登国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P120) ஆகும்.
புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
புக்கிட் பிந்தாங்
[தொகு]புக்கிட் பிந்தாங், கோலாலம்பூர் மாநகரத்தில், மேற்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு பொழுதுபோக்கு மற்றும் கடைவல நகரம் ஆகும். இது நகரத்திற்குள் ஒரு நகரம் என்றும் அறியப்படுகிறது. கோலாலம்பூரில் மிக முக்கியமான நகரப் பகுதியாக விளங்குகிறது.
புக்கிட் பிந்தாங் நகரப் பகுதி, புக்கிட் பிந்தாங் சாலை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதி நீண்ட காலமாக கோலாலம்பூரின் மிக முக்கியமான சில்லறை வணிகப் பகுதியாகவும் விளங்கி வருகிறது.
மலேசியாவில் கணினிப் பொருட்களின் சொர்க்கம் எனும் அடைமொழியும் இந்தப் புக்கிட் பிந்தாங்கிற்கு உண்டு. 1999-ஆம் ஆண்டில் இருந்து இம்பி பிளாசா (Imbi Plaza) லோ யாட் பிளாசா (Low Yat Plaza) ஆகிய இரு விற்பனை வளாகங்களும் கணினி தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.[5][6]
புக்கிட் பிந்தாங் கணினி விற்பனை வளாகங்கள்
[தொகு]புக்கிட் பிந்தாங் கடைவலப் பகுதி, பல முக்கியமான விற்பனை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், மதுபான விடுதிகள், இரவுச் சந்தைகள், உணவு அங்காடிகள் மற்றும் பல்வகை மேல்நாட்டு உணவகங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே; குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமானது.[7]
மலேசியாவில் கணினிப் பொருட்களின் சொர்க்கம் எனும் அடைமொழியும் இந்தப் புக்கிட் பிந்தாங்கிற்கு உண்டு. 1999-ஆம் ஆண்டில் இருந்து இம்பி பிளாசா (Imbi Plaza) லோ யாட் பிளாசா (Low Yat Plaza) ஆகிய இரு விற்பனை வளாகங்களும் கணினி தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.[8]
புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி
[தொகு]தித்திவங்சா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் பண்டார் மக்களவைத் தொகுதியில் இருந்து புக்கிட் பிந்தாங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P099 | 1986–1990 | லீ லாம் தை (Lee Lam Thye) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990–1995 | வீ சூ கியோங் (Wee Choo Keong) | ||
9-ஆவது மக்களவை | P108 | 1995 | ||
1996–1999 | லீ சோங் மெங் (Lee Chong Meng) |
பாரிசான் மலேசிய சீனர் சங்கம் }} | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | போங் குயி லுன் (Fong Kui Lun) |
மாற்று பாரிசான் ஜனநாயக செயல் கட்சி | |
11-ஆவது மக்களவை | P120 | 2004–2008 | ஜனநாயக செயல் கட்சி | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் ஜனநாயக செயல் கட்சி | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் ஜனநாயக செயல் கட்சி | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது |
புக்கிட் பிந்தாங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
79,782 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
53,247 | 66.35% | ▼ -9.54% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
52,936 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
93 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
218 | ||
பெரும்பான்மை (Majority) |
38,977 | 73.63% | ▼ -2.52% |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[9][10] |
புக்கிட் பிந்தாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
போங் குயி லுன் (Fong Kui Lun) |
பாக்காத்தான் | 52,936 | 43,827 | 82.79% | -2.15% ▼ | |
தான் தெய்க் பெங் (Tan Teik Peng) |
பாரிசான் | - | 4,850 | 9.16% | -4.69% ▼ | |
சென் வின் கியோங் (Chen Win Keong) |
பெரிக்காத்தான் | - | 4,259 | 8.05% | +8.05% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Malaysia's Largest IT Lifestyle Mall". Plaza Lowyat. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
- ↑ "Plaza Imbi, is a shopping mall in downtown Kuala Lumpur. The 7-storey mall is located on Jalan Imbi, across from Berjaya Times Square". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
- ↑ "Bukit Bintang is also known as Bintang Walk or Starhill". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
- ↑ "Malaysia's Largest IT Lifestyle Mall". Plaza Lowyat. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.