உள்ளடக்கத்துக்குச் செல்

மலாயா பொதுத் தேர்தல், 1959

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா பொதுத் தேர்தல், 1959

← 1955 19 ஆகஸ்டு 1959 1964 →

மலாயா மக்களவையின் 104 இடங்கள்
அதிகபட்சமாக 53 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்2,133,272
வாக்களித்தோர்1,564,575 (73.34%)
  First party Second party Third party
 
தலைவர் துங்கு அப்துல் ரகுமான் புர்கானுடின் எல்மி அகமது போசுதமாம்
கட்சி
கூட்டணி

பாஸ்

மலாயா மக்கள் சோசலிச முன்னணி
முந்தைய
தேர்தல்
81.68%, 51 இடங்கள் 4.06%, 1 இடம் 0.48%, 0 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
74 13 8
மாற்றம் 23 12 8
மொத்த வாக்குகள் 800,944 329,070 199,688
விழுக்காடு 51.77% 21.27% 12.91%
மாற்றம் 29.91pp 17.21pp 12.43pp

  Fourth party Fifth party Sixth party
  MP
தலைவர் சீனிவாசகம் தர்ம ராஜா ஓன் ஜாபார் தான் கீ காக்
கட்சி
மக்கள் முற்போக்கு கட்சி
தேசியக் கட்சி மலாயா கட்சி
முந்தைய
தேர்தல்
0.11%, 0 இடங்கள் 7.88%, 0 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
4 1 1
மாற்றம் 4 1 புதிது
மொத்த வாக்குகள் 97,391 32,578 13,404
விழுக்காடு 6.29% 2.11% 0.87%
மாற்றம் 6.18pp 5.77pp புதிது


முந்தைய பிரதமர்

துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய கூட்டணி கட்சி

பிரதமர்-அமர்வு

துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய கூட்டணி கட்சி


மலாயா பொதுத் தேர்தல், 1959 (ஆங்கிலம்: 1959 Malayan General Election; மலாய்: Pilihan raya umum Malaya 1959) என்பது 1959 ஆகஸ்டு மாதம் 19-ஆம் திகதி மலாயாவில் நடைபெற்ற 1-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். இந்தத் தேர்தல் மலாயா கூட்டமைப்பின் முதல் நாடாளுமன்றத் தேர்தல்; மற்றும் மலாயாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலும் ஆகும்.[1]

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மலாயாவில் நடைபெற்ற தேசிய அளவிலான மூன்றாவது தேர்தல் இதுவாகும். 1963-இல் சபா, சரவாக், சிங்கப்பூர் ஆகிய மூன்று பிரதேசங்களுடன் மலாயா இணைந்து மலேசியாவை உருவாக்கியது.

பொது[தொகு]

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 14 மாநிலங்களில்; 11 மாநிலங்களில் உள்ள 282 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக், சிங்கப்பூர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான மலாயா கூட்டணி கட்சி மொத்த 104 இடங்களில் 74 இடங்களைப் பெற்றது. மலாயா கூட்டணி கட்சிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 51.77%. எதிர்க்கட்சிகள் 48% வாக்குகளுடன் 30 இடங்களைப் பெற்றன. மலாயாவின் அரசியலமைப்பின்படி 71% பெரும்பான்மை பெற்ற மலேசிய கூட்டணி கட்சி ஆட்சியை அமைத்தது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, 1959 மே 20 முதல் சூன் 24 வரையில் மலாயாவின் 11 மாநிலங்களில் உள்ள 282 மாநிலத் தொகுதிகளிலும் மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றன. திராங்கானு மற்றும் கிளாந்தான் மாநிலங்களின் நிர்வாகங்களை மலேசிய இசுலாமிய கட்சி கைப்பற்றிக் கொண்டது

மலேசியப் பொதுத் தேர்தல்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநில அளவிலான மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.[2]

தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரை மலேசியப் பிரதமர் அல்லது மலேசியப் பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக் கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[3]

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.

ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

காலவரிசைகள்[தொகு]

மக்களவை[தொகு]

  • வேட்பு மனு தேதி: 15 சூலை 1959
  • தேர்தல் நாள்: 19 ஆகஸ்டு 1959

மாநில சட்டமன்றங்கள்[தொகு]

மாநிலம் வேட்பு மனு தேதி தேர்தல் நாள்
பெர்லிஸ் 15 ஏப்ரல் 1959 20 மே 1959
கெடா 15 ஏப்ரல் 1959 20 மே 1959
மலாக்கா 18 ஏப்ரல் 1959 23 மே 1959
பேராக் 22 ஏப்ரல் 1959 27 மே 1959
சிலாங்கூர் 25 ஏப்ரல் 1959 30 மே 1959
நெகிரி செம்பிலான் 28 ஏப்ரல் 1959 2 சூன் 1959
பினாங்கு 2 மே 1959 6 சூன் 1959
 ஜொகூர் 6 மே 1959 10 சூன் 1959
பகாங் 13 மே1959 27 சூன் 1959
 திராங்கானு 16 மே 1959 20 சூன் 1959
கிளாந்தான் 20 மே 1959 24 சூன் 1959

தேர்தல் முடிவுகள்[தொகு]

கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%Seats+/–
மலாயா கூட்டணி கட்சிஅம்னோ5,53,16035.7552+18
மலாயா சீனர் சங்கம்2,32,07315.0019+4
மலாயா இந்திய காங்கிரசு15,7111.023+1
மொத்தம்8,00,94451.7774+23
மலாயா இசுலாமிய கட்சி3,29,07021.2713+12
மலாயா மக்கள் சோசலிச முன்னணிமலாயா தொழிலாளர் கட்சி1,99,68812.916+6
மலாயா மக்கள் கட்சி2புதிது
மொத்தம்8புதிது
மக்கள் முற்போக்கு கட்சி97,3916.294+4
தேசியக் கட்சி32,5782.111+1
மலாயா கட்சி13,4040.871புதிது
சுயேச்சைகள்74,1944.803+3
மொத்தம்15,47,269100.00104+52
செல்லுபடியான வாக்குகள்15,47,26998.89
செல்லாத/வெற்று வாக்குகள்17,3061.11
மொத்த வாக்குகள்15,64,575100.00
பதிவான வாக்குகள்/வருகை21,33,27273.34
மூலம்: Nohlen et al. [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  2. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
  3. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயா_பொதுத்_தேர்தல்,_1959&oldid=3956179" இலிருந்து மீள்விக்கப்பட்டது