உள்ளடக்கத்துக்குச் செல்

லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெம்பா பந்தாய் (P121)
மலேசிய மக்களவைத் தொகுதி
கோலாலம்பூர்
Lembah Pantai (P121)
Federal Constituency in Kuala Lumpur
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளில்
லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி

மாவட்டம்மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கோலாலம்பூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை101,828 (2022)[1]
வாக்காளர் தொகுதிலெம்பா பந்தாய் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலாலம்பூர்; லெம்பா பந்தாய், பங்சார், பந்தாய் டாலாம், புக்கிட் அமான், பெர்டானா தாவரவியல் பூங்கா
பரப்பளவு20 ச.கி.மீ[2]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்அகமது பகமி முகமது பட்சில்
(Ahmad Fahmi Mohamed Fadzil)
மக்கள் தொகை148,094 [3]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4]




2022-இல் லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (59.13%)
  சீனர் (19.11%)
  இதர இனத்தவர் (4.61%)

லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lembah Pantai; ஆங்கிலம்: Lembah Pantai Federal Constituency; சீனம்: 武吉免登国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P121) ஆகும்.

லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

லெம்பா பந்தாய்

[தொகு]

கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம். லெம்பா பந்தாய்க்கு அருகில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் செபுத்தே மக்களவைத் தொகுதி, சிகாம்புட் மக்களவைத் தொகுதி, மற்றும் புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி.

லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் மிகவும் பிரபலமான பகுதிகளில் பங்சார் தொகுதியும் ஒன்றாகும். இந்தப் பகுதி ஒரு பிரபலமான மேல்நிலை குடியிருப்பு பகுதி; மற்றும் ஒரு பொழுதுபோக்கு பகுதியும் ஆகும்.

பந்தாய் டாலாம்

[தொகு]

பந்தாய் டாலாம் (Pantai Dalam) என்பது பங்சார் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பகுதி. பந்தாய் டாலாம் பகுதியில் பெரிய குடியிருப்புப் பகுதிகளும்; பல சிறிய குடியிருப்புப் பகுதிகளும் கலந்து உள்ளன. அவற்றின் பட்டியல்:

  • பந்தாய் இல்பார்க் - (Pantai Hillpark)
  • கம்போங் பந்தாய் - (Kampung Pantai)
  • பிபிஆர் ஸ்ரீ பந்தாய் - (PPR Sri Pantai)
  • பிபிஆர் பந்தாய் ரியா - (PPR Pantai Ria)
  • தேசா அமான் 1 & 2 - (Desa Aman 1 & 2)
  • பந்தாய் முர்னி - (Pantai Murni)

லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி

[தொகு]
தித்திவங்சா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் டாமன்சாரா மக்களவைத் தொகுதியில் இருந்து
லெம்பா பந்தாய் தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P100 1986–1990 அப்துல் ரசாக் சாமா
(Abdul Razak Samah)
பாரிசான்
அம்னோ
8-ஆவது மக்களவை 1990–1995 முகமது கமல் உசேன்
(Mohamed Kamal Hussain)
9-ஆவது மக்களவை P109 1995–1999 சாரிசாத் அப்துல் ஜலீல்
(Shahrizat Abdul Jalil)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P121 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 நூருல் இசா அன்வார்
(Nurul Izzah Anwar)
பாக்காத்தான் ராக்யாட்
பி.கே.ஆர்
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 பாமி பட்சில்
(Fahmi Fadzil)
பாக்காத்தான்
பி.கே.ஆர்
15-ஆவது மக்களவை 2022–தற்போது

லெம்பா பந்தாய் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
101,828
வாக்களித்தவர்கள்
(Turnout)
77,469 76.08% -8.12%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
76,714 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
240
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
515
பெரும்பான்மை
(Majority)
13,912 18.13% +9.63%
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5][6]

லெம்பா பந்தாய் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
பாமி பட்சில்
(Fahmi Fadzil)
பாக்காத்தான் 76,714 35,359 46.09 % -4.15%
ரம்லான் சாயான் அசுகோலான்
(Ramlan Shahean Askolani)
பாரிசான் - 21,447 27.96% -13.84%
பவுசி அபு பக்கார்
(Fauzi Abu Bakar)
பெரிக்காத்தான் - 19,098 24.90% +24.90%
நூர் அசுமா முகமது ரசாலி
(Noor Asmah Mohd Razalli)
உள்நாட்டு போராளிகள் கட்சி
(GTA / PEJUANG)
810 1.06% +1.06

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  4. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
  6. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]