உள்ளடக்கத்துக்குச் செல்

செராஸ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செராஸ் (P123)
மலேசிய மக்களவைத் தொகுதி
கோலாலம்பூர்
Cheras (P123)
Federal Constituency in Kuala Lumpur
மாவட்டம்மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கோலாலம்பூர்
வாக்காளர்களின் எண்ணிக்கை101,184 (2022)[1]
வாக்காளர் தொகுதிசெராஸ் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலாலம்பூர்; செராஸ், புடு, புக்கிட் பிந்தாங், சுங்கை பீசி காஜாங்
பரப்பளவு20 ச.கி.மீ[2]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்தான் கோக் வாய்
(Tan Kok Wai)
மக்கள் தொகை135,823 (2020) [3]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4]




2022-இல் செராஸ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (14.8%)
  சீனர் (77.1%)
  இதர இனத்தவர் (0.6%)

செராஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Cheras; ஆங்கிலம்: Cheras Federal Constituency; சீனம்: 蕉赖国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P123) ஆகும்.

செராஸ் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து செராஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

செராஸ்

[தொகு]

கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி. மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் செராஸ் நகரமும் ஒன்றாகும். செராஸ் பகுதி இரு நாடாளுமன்ற மாகளவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. 1974-ஆம் ஆண்டு வரையில் செராஸ் மக்களவைத் தொகுதி; உலு லங்காட் மாவட்டத்தின் கீழ் இருந்தது. 1995-ஆம் ஆண்டில் செராஸ் மக்களவைத் தொகுதி என்று ஒரு புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.

உலு லங்காட் மாவட்டம்

[தொகு]

முன்பு காலத்தில் செராஸ் நகர்ப்பகுதி, சிலாங்கூர் மாநிலத்தின், ஐந்தாவது பெரிய மாவட்டமான உலு லங்காட்டின் ஒரு பகுதியாக இருந்தது. செராஸ் பகுதியில் பெரும்பாலான கல்வி நிலையங்கள்; ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகள் இருந்தன.

1974 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தை உருவாக்குவதற்காக, செராஸ் மாவட்டத்தின் பெரும் பகுதி, மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[5] அதன் பின்னர் செராஸ் அதன் செல்வாக்கைச் சன்னம் சன்னமாக இழந்து விட்டது. மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி இந்தத் தொகுதியில்தான் உள்ளது. 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. ஒரு நவீன தமிழ்ப் பள்ளிக்கு உரிய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள சிறந்த பள்ளியாக அறியப்படுகிறது.[6]

செராஸ் மக்களவைத் தொகுதி

[தொகு]
செராஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1994-ஆம் ஆண்டில் சுங்கை பீசி மக்களவைத் தொகுதியில் இருந்து செராஸ் தொகுதி உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P111 1995–1999 தான் கோக் வாய்
(Tan Kok Wai)
ஜனநாயக செயல் கட்சி
10-ஆவது மக்களவை 1999–2004 மாற்று பாரிசான்
ஜனநாயக செயல் கட்சி
11-ஆவது மக்களவை P123 2004–2008 ஜனநாயக செயல் கட்சி
12-ஆவது மக்களவை 2008–2013 பாக்காத்தான் ராக்யாட்
ஜனநாயக செயல் கட்சி
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 பாக்காத்தான்
ஜனநாயக செயல் கட்சி
15-ஆவது மக்களவை 2022–தற்போது

செராஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
101,184
வாக்களித்தவர்கள்
(Turnout)
72,207 71.40% -9.89%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
71,746 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
161
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
300
பெரும்பான்மை
(Majority)
54,448 75.89% -2.11
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7][8]

செராஸ் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
தான் கோ வாய்
(Tan Kok Wai)
பாக்காத்தான் 71,746 60,294 84.04% - 4.96%
சின் யோக் கெங்
(Chin Yoke Kheng)
பெரிக்காத்தான் - 5,846 8.15% + 8.15% Increase
சோங் இயூ சுவான்
(Chong Yew Chuan)
பாரிசான் - 5,606 7.81% - 3.19%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  4. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "History of Cheras". PropSocial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
  6. "பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி - 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பள்ளி". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
  7. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
  8. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செராஸ்_மக்களவைத்_தொகுதி&oldid=4047091" இலிருந்து மீள்விக்கப்பட்டது