மலேசியப் பொதுத் தேர்தல், 1990

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பொதுத் தேர்தல், 1990

← [[மலேசியப் பொதுத் தேர்தல், 1986|1986]] 20–21 அக்டோபர் 1990 1995 →

மலேசிய மக்களவையின் 180 இடங்கள்
அதிகபட்சமாக 91 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்7,958,641
 
தலைவர் மகாதீர் முகமது தெங்கு ரசாலி அம்சா
(செமாங்காட் 46)
பாட்சில் நூர்
லிம் கிட் சியாங்
(ஜசெக)
ஜோசப் பைரின்
(ஐக்கிய சபா)
கூட்டணி பாரிசான் நேசனல் அங்காத்தான் பெர்பாடுவான் காகாசான் ராக்யாட்
முந்தைய
தேர்தல்
57.28%, 148 இடங்கள் 15.50, 1 seat 22.69%, 34 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
127 15 34
மாற்றம் 21 14 4
மொத்த வாக்குகள் 2,985,392 1,218,211 1,113,488
விழுக்காடு 53.38% 21.78% 19.91%
மாற்றம் 3.90pp 6.28 pp 2.78 pp

முந்தைய பிரதமர்

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்

பிரதமர்-அமர்வு

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்


மலேசியப் பொதுத் தேர்தல், 1990 (1990 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1990;) என்பது 1990 அக்டோபர் 20 - 21-ஆம் தேதிகளில், மலேசியாவில் நடைபெற்ற 8-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவில் உள்ள 180 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாட்களில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 351 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இதன் விளைவாக அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 180 இடங்களில் 148 இடங்களை வென்றது. வாக்குப்பதிவு 57.28%. கிளாந்தான் மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா (Angkatan Perpaduan Ummah) அனைத்து 39 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அவற்றில் 24 இடங்கள் மலேசிய இசுலாமிய கட்சிக்கும்; மற்றும் 15 இடங்கள் செமாங்கட் 46 (Semangat 46) கட்சிக்கும் கிடைத்தன.[1][2]

பொது[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மாநிலங்களின் சட்டப் பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநிலப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.[3]

தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரைப் பிரதமர் அல்லது பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக்கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[4]

தேசியப் பொதுத் தேர்தல்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.

ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%Seats+/–
பாரிசான் நேசனல்அம்னோ29,85,39253.3871–12
மலேசிய சீனர் சங்கம்18+1
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி10+2
மலேசிய இந்திய காங்கிரசு60
ஐக்கிய சபா தேசிய அமைப்பு6+1
கெராக்கான்50
சரவாக் டயாக் இனக்கட்சி4–1
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி40
சரவாக் தேசியக் கட்சி3–1
மக்கள் முற்போக்கு கட்சி00
மொத்தம்127–21
அங்காத்தான் பெர்பாடுவான்செமாங்காட் 468,42,34215.068புதிது
மலேசிய இசுலாமிய கட்சி3,75,8696.727+6
மொத்தம்12,18,21121.7815+14
காகாசான் ராக்யாட்ஜனநாயக செயல் கட்சி9,85,22817.6120–4
ஐக்கிய சபா கட்சி1,28,2602.2914+4
மொத்தம்11,13,48819.91340
மலேசிய மக்கள் கட்சி56,4621.0100
சரவாக் மலேசிய மக்கள் சங்கம்35,3100.630புதிது
மக்கள் நீதி முன்னணி12,6550.230புதிது
சரவாக் ஐக்கிய தொழிலாளர் கட்சி1620.0000
சுயேச்சைகள்1,71,5473.0740
மொத்தம்55,93,227100.00180+3
செல்லுபடியான வாக்குகள்55,93,22797.24
செல்லாத/வெற்று வாக்குகள்1,58,4982.76
மொத்த வாக்குகள்57,51,725100.00
பதிவான வாக்குகள்/வருகை79,58,64172.27
மூலம்: Nohlen et al., CLEAIPU

மேற்கோள்கள்[தொகு]

  1. Francis Kok-Wah Loh; Francis Loh Kok Wah; Boo Teik Khoo; Khoo Boo Teik (2002). Democracy in Malaysia: Discourses and Practices. Routledge. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1161-9.
  2. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  3. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
  4. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]