மலேசியப் பொதுத் தேர்தல், 1969
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மலேசிய மக்களவையின் 144 இடங்கள் அதிகபட்சமாக 73 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 3,439,313 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 73.53% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மலேசியப் பொதுத் தேர்தல், 1969 (ஆங்கிலம்: 1969 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1969) என்பது 1969 மே மாதம் 10-ஆம் திகதி மலேசியாவில் நடைபெற்ற 3-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 144 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. 1963-இல் மலேசியா உருவான பிறகு சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைகிறது.[1]
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு , மலேசிய சீனர் சங்கம் மற்றும் மலேசிய இந்திய காங்கிரசு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மலேசிய கூட்டணி கட்சி குறைந்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்தத் தேர்தலில் மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவின் கீழ் பூமிபுத்ராகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு எதிராக கெராக்கான் மற்றும் ஜனநாயக செயல் கட்சி; ஆகிய இரு கட்சிகளும் பரப்புரைகள் செய்தன. [2]
தேசிய நடவடிக்கை மன்றம்
[தொகு]இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மொத்தமாக 54 இடங்களை வென்றன; அதே வேளையில் மலேசிய கூட்டணி கட்சி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது. அத்துடன் பேராக், சிலாங்கூர், பினாங்கு கிளாந்தான் ஆகிய மாநிலங்களிலும் மலேசிய கூட்டணி கட்சி தனது பெரும்பான்மையை இழந்தது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மே 12 அன்று தலைநகர் கோலாலம்பூரில், கெராக்கான் மற்றும் ஜனநாயக செயல் கட்சி; ஆகிய இரு கட்சிகளும் தங்கள் வெற்றிப் பேரணியை நடத்தினர. மே 13 அன்று அம்னோ அதன் சொந்த பேரணியை நடத்தியது. ஆனால் இந்தப் பேரணி பின்னர் ஒரு கலவரமாக மாறியது. இதன் தொடர்ச்சியாக 13 மே இனக்கலவரம் என்றும் அறியப்படும் இனக் கலவரங்களும் ஏற்பட்டன.
இந்த நிகழ்வுகளின் விளைவாக, நாடாளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்ய மலேசிய மத்திய அரசு முடிவு செய்தது. அதன் பின்னர் அரசாங்க நிர்வாகம் தேசிய நடவடிக்கை மன்றம் (National Operations Council) எனும் அமைப்பின் மூலம் 1971-ஆம் ஆண்டு வரை நிர்வகிக்கப்பட்டது.[3] இந்தத் தொடர் நிகழ்வுகள், பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரகுமான் நிர்வாகத்தின் முடிவிற்கும் வழி அமைத்தன. அவருக்குப் பின் சில மாதங்களுக்குப் பிறகு அப்துல் ரசாக் உசேன் பதவியேற்றார். அதன் பின்னர் ரசாக் அவர்கள், கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியை தனியொரு கூட்டாட்சிப் பிரதேசமாகவும் மாற்றி அமைத்தார்.[4]
பொது
[தொகு]ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 360 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா மாநிலத்தில் மட்டும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.
இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 144 இடங்களில் 74 இடங்களை வென்றது. பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 44.94%.[5]
மலேசியப் பொதுத் தேர்தல்
[தொகு]மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநில அளவிலான மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.[6]
தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரை மலேசியப் பிரதமர் அல்லது மலேசியப் பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக் கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[7]
மலேசிய நாடாளுமன்றம்
[தொகு]மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.
ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி அல்லது கூட்டணி | வாக்குகள் | % | Seats | +/– | |||
---|---|---|---|---|---|---|---|
மலேசிய கூட்டணி கட்சி | அம்னோ | 10,76,507 | 44.94 | 52 | –7 | ||
மலேசிய சீனர் சங்கம் | 13 | –14 | |||||
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | 5 | –3 | |||||
மலேசிய இந்திய காங்கிரசு | 2 | –1 | |||||
சரவாக் சீனர் சங்கம் | 2 | –2 | |||||
மொத்தம் | 74 | –22 | |||||
மலேசிய இசுலாமிய கட்சி | 5,01,123 | 20.92 | 12 | +3 | |||
ஜனநாயக செயல் கட்சி | 2,86,606 | 11.96 | 13 | +12 | |||
கெராக்கான் | 1,78,971 | 7.47 | 8 | புதிது | |||
மக்கள் முற்போக்கு கட்சி | 80,756 | 3.37 | 4 | +2 | |||
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி | 72,754 | 3.04 | 5 | +2 | |||
சரவாக் தேசியக் கட்சி | 64,593 | 2.70 | 9 | +5 | |||
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | 30,765 | 1.28 | 2 | புதிது | |||
மலேசிய மக்கள் கட்சி | 27,110 | 1.13 | 0 | 0 | |||
சபா சீனர் சங்கம் | 18,313 | 0.76 | 3 | –1 | |||
ஐக்கிய சபா தேசிய அமைப்பு | 13,634 | 0.57 | 13 | +7 | |||
ஐக்கிய மலேசிய சீன அமைப்பு | 1,808 | 0.08 | 0 | புதிது | |||
சுயேச்சைகள் | 42,669 | 1.78 | 1 | +1 | |||
மொத்தம் | 23,95,609 | 100.00 | 144 | –15 | |||
செல்லுபடியான வாக்குகள் | 23,95,609 | 94.73 | |||||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,33,253 | 5.27 | |||||
மொத்த வாக்குகள் | 25,28,862 | 100.00 | |||||
பதிவான வாக்குகள் | 34,39,313 | 73.53 | |||||
மூலம்: CLEA |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
- ↑ Report on the parliamentary (Dewan Rakyat) and state legislative assembly general elections 1969 of the states of Malaya, Sabah, and Sarawak பரணிடப்பட்டது 4 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "May 13: Why Malaysiakini revisited an old, but persistent, wound". 16 May 2019.
- ↑ "Kuala Lumpur History Facts and Timeline: Kuala Lumpur, Federal Territory, Malaysia".
- ↑ Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
- ↑ Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
- ↑ Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times.
வெளி இணைப்புகள்
[தொகு]- Chin, James (2000). "A New Balance: The Chinese Vote in the 1999 Malaysian General Election". South East Asia Research 8 (3): 281–299. doi:10.5367/000000000101297299.
- "Malaysia unlikely to go fundamentalist: Lee Kuan Yew". (Dec. 13, 1999).
- Institut Kajian Asia Tenggara (PDF)