லிம் கிட் சியாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிம் கிட் சியாங்
Lim Kit Siang cropped.jpg
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
கெலாங் பாத்தா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 பெப்ரவரி 1941 (1941-02-20) (அகவை 79)
ஜொகூர்
அரசியல் கட்சி ஜனநாயக செயல் கட்சி
ஆலோசகர்
பிள்ளைகள் லிம் குவான் எங்
இணையம் Lim Kit Siang's blog

லிம் கிட் சியாங் (ஆங்கிலம்: Lim Kit Siang, பிறப்பு: பிப்ரவரி 20, 1941) மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகரும் மலேசியாவின் கெலாங் பாத்தா பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகன் லிம் குவான் எங் பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் ஆவார்.

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது[தொகு]

1969 ஆண்டில் கிட் சியாங் 18 மாதங்கள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பத்து ஆண்டுகளுக்கு பின்னர், 1979 ஆம் ஆண்டில், அவர் அரசாங்கம் மற்றும் ஒரு சுவிஸ் நிறுவனம் இடையே ஒரு பொருத்தமற்ற ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டார். பின்னர் லிம் 1987 இல் "ஆபரேஷன் லாலாங்" போது கைது செய்யப்பட்டு, அவர் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டார்[1] .

சாமிவேலு மற்றும் மைக்கா டெலிகாம் பங்குகள் ஊழல்[தொகு]

1994 ஆம் ஆண்டில், லிம் கிட் சியாங் அப்போதைய மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு மைக்கா டெலிகாம் பங்குகளைக் கையாடியதற்கு ஏசிஏ புலன் விசாரணை செய்ய பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் முன்வைத்தார். ஆனால் அப்போதைய பிரதமர் மகாதீர் குறுக்கிட்டு அவரை எட்டு மாதங்களுக்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிம்_கிட்_சியாங்&oldid=2714781" இருந்து மீள்விக்கப்பட்டது