பங்சார்

ஆள்கூறுகள்: 3°7′51″N 101°40′10″E / 3.13083°N 101.66944°E / 3.13083; 101.66944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்சார்
புறநகர்
Bangsar
பங்சார் ஒரு காட்சி; முன்புறத்தில் பங்சார் பாருவின் தெரசெக் வீடுகள்.
பங்சார் ஒரு காட்சி; முன்புறத்தில் பங்சார் பாருவின் தெரசெக் வீடுகள்.
பங்சார்-இன் கொடி
கொடி
பங்சார்-இன் சின்னம்
சின்னம்
பங்சார் is located in மலேசியா
பங்சார்
      பங்சார்
ஆள்கூறுகள்: 3°7′51″N 101°40′10″E / 3.13083°N 101.66944°E / 3.13083; 101.66944
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
புறநகர்பங்சார்
தொகுதிலெம்பா பந்தாய்
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு59000, 59100 and 59200
மலேசியத் தொலைபேசி எண்+60 322
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W ; V
போலீஸ்ஜாலான் டிராவர்ஸ், பிரிக்பீல்ட்ஸ்
தீயணைப்புபந்தாய்
இணையதளம்www.dbkl.gov.my

பங்சார், (மலாய்: Bangsar; ஆங்கிலம்: Bangsar; சீனம்: 孟沙); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில், அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகும்.

பங்சார் புறநகர்ப் பகுதி, கோலாலம்பூரில் உள்ள மிகப் பெரிய நகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். நகர மையத்தில் இருந்து தென்மேற்கே 4 கி.மீ. (2.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது லெம்பா பந்தாய் (Lembah Pantai) நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

பொது[தொகு]

பங்சார் புறநகர்ப் பகுதியின் பொருளாதாரம் பெரும்பாலும் வணிகமாகும். இங்கு பற்பல வணிகப் பேரங்காடிகள், வணிக மாளிகைகள் மற்றும் இரவு சந்தை தளங்கள் இருப்பதைக் காணலாம். இங்கு மலாய்க்காரர்கள் 61%; சீனர்கள் 24%; இந்தியர்கள் 15% ஆகவும் உள்ளனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் (Klang Valley) உள்ள மற்ற நகரங்களான பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya) மற்றும் சுபாங் ஜெயா (Subang Jaya) போன்றவை சொந்தமாக நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளன. எனினும், பங்சார் புறநகர்ப் பகுதி கோலாலம்பூர் மாநகராட்சியால் (DBKL) நிர்வகிக்கப் படுகிறது.

வரலாறு[தொகு]

பங்சார் எனும் சொல் பங்கே-கிரிசார் (Bunge-Grisar) ரப்பர் தோட்டம் அல்லது பங்சார் தோட்டம் (Bangsar Estate) எனும் சொல்லில் இருந்து உருவானது. எட்வார்ட் பங்கே (Edouard Bunge) எனும் பெல்ஜியம் நாட்டவர்; ஆல்பிரட் கிரிசார் (Alfred Grisar) எனும் பிரெஞ்சுக்காரர்; இவர்களின் பெயர்களில் இருந்துதான் பங்சார் எனும் சொல் (Bungsar) உருவாக்கப் பட்டது.

1906-ஆம் ஆண்டில், மலாயா நாடு பிரித்தானியா நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அந்த வேளையில், 19 மே 1906-இல், லண்டன் மாநகரைத் தளமாகக் கொண்ட கோலாலம்பூர் ரப்பர் நிறுவனம் (Kuala Lumpur Rubber Company Limited (“KLRC”) மலாயாவில் உருவாக்கப்பட்டது.

கோலாலம்பூர் ரப்பர் நிறுவனம்[தொகு]

1900-ஆம் ஆண்டுகளில், ஐக்கிய அமெரிக்காவில் குதிரை வண்டிகளுக்குப் பதிலாக நவீன மகிழுந்துகள் அறிமுகமாயின. அதனால் காற்றடைத்த ரப்பர்ச் சக்கரங்களுக்கு (Pneumatic Rubber Tyres) கிராக்கி ஏற்பட்டது. ஆகவே ரப்பருக்கு ஏற்பட்ட உடனடித் தேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள கோலாலம்பூரைச் சுற்றிலும் ரப்பர் மரங்களை நடுவதற்கு திட்டமிடப் பட்டது.[1][2]

பிரித்தானிய பவுண்டு £ 180,000 மூலதனத்துடன், கோலாலம்பூர் ரப்பர் நிறுவனம், 640 ஹெக்டேர் நிலத்தில், 5 தோட்டங்களைக் கையகப் படுத்தியது. அந்தத் தோட்டங்களில் ரப்பர் மற்றும் காபி பயிரிடப்பட்டன. கோலாலம்பூர் ரப்பர் நிறுவனத்தின் பங்குகள், 1907-இல் லண்டன் பங்குச் சந்தையில் (London Stock Exchange) பட்டியலிடப்பட்டன.[3]

பங்கே கிரிசார் ரப்பர் தோட்டம்[தொகு]

பங்சார் சாலை
பங்சார் எல்ஆர்டி தொடருந்து நிலையம்

அந்த வகையில் கோலாலம்பூரில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ரப்பர் தோட்டம் தான் பங்கே கிரிசார் (Bunge Grisar) ரப்பர் தோட்டம். கோலாலம்பூர் ரப்பர் நிறுவனத்தின் முதல் குழு உறுப்பினர்களில் பெல்ஜியம் நாட்டவர் எட்வார்ட் பங்கே; மற்றும் பிரான்சு நாட்டவர் ஆல்பிரட் கிரிசார் ஆகியோர் அடங்குவர். இவர்கள் இருவரின் பெயர்களில் இருந்துதான் பங்சார் எனும் சொல் உருவானது.[4]

பங்சார் தோட்டம் ஒரு குடியிருப்புப் பகுதியாக உருவாக்கப் படுவதற்கு முன்பு, அது பிரெஞ்சு தோட்ட நிறுவனமான சொக்பின் (Société Financière des Caoutchoucs (Socfin) குழுமத்திற்குச் சொந்தமானது. 1969-ஆம் ஆண்டில், பங்சார் தோட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் வீட்டுமனைப் பகுதி பங்சார் பார்க் (Bangsar Park) ஆகும்.

அதன் பின்னர் சொக்பின் குழுமம், தனது நிலத்தைத் தனியார்களுக்கு விற்கத் தொடங்கியது. அதிலிருந்து பங்சார் விரைவான வளர்ச்சியைக் கண்டது.[5]

மலேசிய தேசிய மின்சார வாரியம்[தொகு]

1950-களில், பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பங்சார் பகுதியில் தங்க வைத்தன. கோலாலம்பூர் தொடருந்து நிலையம் (Kuala Lumpur Railway Station); மற்றும் அதன் தொடருந்து கூடம்; ஆகியவை பிரிக்பீல்ட்ஸில் இருந்து மூன்று கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்ததால், மலாயா தொடருந்து நிறுவனம் பங்சார் பகுதியைப் பயன்படுத்தியது.

மலேசிய தேசிய மின்சார வாரியம் (National Electricity Board) (இப்போது: தெனாகா நேசனல் பெர்காட்; Tenaga Nasional Berhad); அதன் தலைமையகம் பந்தாய் இல்ஸ் (Pantai Hills) பகுதியில் இருந்ததால், புக்கிட் பங்சாரில் (Bukit Bangsar) அதன் ஊழியர்களைத் தங்க வைத்தது. இன்றும் பங்சாரில் மின்சார வாரிய பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன.

பங்சார் மருத்துவமனை[தொகு]

பங்சார் மாரோப் சாலை

1900-களின் முற்பகுதியில் பங்சார் மருத்துவமனை (Bangsar Hospital) கட்டப்பட்டது. இதை ஐரோப்பிய மருத்துவமனை (European Hospital) என்று அழைத்தார்கள். அந்த மருத்துவமனைதான் அங்குள்ள ஆரம்பகால அரசாங்க கட்டிடங்களில் மிகப் பழைமையானதாகும். 1965-ஆம் ஆண்டின் இறுதியில், புக்கிட் பங்சார் (Bukit Bangsar) பகுதியில், ஒரு மில்லியன் ரிங்கிட் செலவில், எட்டு மாடிகளைக் கொண்ட பொது சுகாதாரக் கல்லூரி (Public Health College) கட்டிடம் கட்டப்பட்டது.[6]

1966-ஆம் ஆண்டில், சுகாதார ஆய்வாளர்கள் பயிற்சிப் பள்ளி (Health Inspectors Training School) மற்றும் செவிலியர்கள் பயிற்சிப் பள்ளி (Nurses Training School) ஆகியவை பங்சாரில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டன. 1967-ஆம் ஆண்டில், பொது சுகாதார கழகம் (Institute for Public Health) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப் பட்டது.

1969 மே 13 கலவரத்தின் போது பங்சாரில் உள்ளூர்ச் சீனர்களுக்குச் சொந்தமான பல கடைகள் எரிக்கப் பட்டன. அத்துடன் பெட்டாலிங் ஜெயாவுக்குச் செல்லும் வழியில் பங்சார் சாலையைக் கடந்து சென்றவர்களின் கார்கள்; விசையுந்துகள்; மிதியுந்துகளும் எரிக்கப்பட்டன.[7]

பங்சார் பாரு[தொகு]

1974-ஆம் ஆண்டில், எங் லியான் நிறுவனம் (Eng Lian Enterprise Sdn Bhd) பங்சாரில் 1,125 வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கியது. அதன் பின்னர் அங்கே ஒரு செழிப்பான வணிகச் சமூகம் உருவானது. அதுவே பின்நாட்களில் பங்சார் பாரு (Bangsar Baru) என்றும் பெயர் பெற்றது.[8]

1970-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூரில் குடியேறிய மக்களுக்கு வீட்டுவசதி வழங்கும் புறநகர்ப் பகுதியாகவும் பங்சார் மாறியது. 1980-களில் பெரும்பாலான கோலாலம்பூர் மக்கள் பங்சார் விரும்பும் இடமாகவும் மாறியது.[8]

தவிர டிவி3 எனும் மலேசியத் தொலைக்காட்சி நிறுவனம் (TV3 Malaysia); மற்றும் லீவர் பிரதர்ஸ் (Lever Brothers) எனும் பன்னாட்டு நிறுவனம்; ஆகியவற்றின் தலைமையகங்கள் பங்சாரில் அமைக்கப்பட்டன. அந்த வகையில் பங்சாரின் வளர்ச்சிக்கு பங்களித்த நிறுவனங்களில் முதன்மையானவை என்றும் அறியப் படுகிறது.[8]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kuala Lumpur Kepong Berhad, Annual Report, 2005.
  2. Van, Lea Pham (February 2020). "Unravelling the Socfin Group". Profundo.nl.
  3. "With a capital of £180,000, KLRC acquired 5 estates totalling 640 hectares of land planted mainly with rubber and coffee, located in Kuala Lumpur. KLRC shares were listed on the London Stock Exchange in 1907". NUMISTORIA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 December 2022.
  4. French Memories in Malaysia, an exhibition at Muzium Negara, Department of Museums and Antiquities, the French Embassy and the Ecole Francaise d'Extreme – Orient, September 2002.
  5. "History & Origins". Bangsar Community Portal. 2 December 2008. Archived from the original on 3 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 1 June 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Salina Khalid (28 January 2008). "Efforts being made to preserve Bukit Persekutuan". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2008/1/28/central/20116510&sec=central. 
  7. "Fifty years ago on May 13, Malaysia was stunned by sectarian riots that would permanently scar the country, killing hundreds and putting on display longstanding differences between the country's Malay and ethnic Chinese populations". South China Morning Post (in ஆங்கிலம்). 13 May 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2022.
  8. 8.0 8.1 8.2 Vivienne Pal (12 November 2005). "Now, the address of the rich, the elite". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2005/11/12/central/12508159&sec=central. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்சார்&oldid=3633164" இலிருந்து மீள்விக்கப்பட்டது