ஆரா டாமன்சாரா

ஆள்கூறுகள்: 3°7′28.9″N 101°34′33.04″E / 3.124694°N 101.5758444°E / 3.124694; 101.5758444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரா டாமன்சாரா
புறநகர்
Ara Damansara
சுபாங் பகுதியில் ஆரா டாமன்சாரா
சுபாங் பகுதியில் ஆரா டாமன்சாரா
ஆரா டாமன்சாரா is located in மலேசியா
ஆரா டாமன்சாரா
ஆரா டாமன்சாரா
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°7′28.9″N 101°34′33.04″E / 3.124694°N 101.5758444°E / 3.124694; 101.5758444
நாடு மலேசியா
மாநிலம்Flag of Selangor.svg சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
மாநகராட்சிPetaling Jaya Emblem.svg பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • நிர்வாகம்பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
 • மாநகர முதல்வர்முகமட் அசான் அமீர்
Mohamad Azhan Md. Amir
21 அக்டோபர் 2021
 • துணை மாநகர முதல்வர்அசுலிண்டா அசுமான்
Azlinda Azman
24 சனவரி 2020[1]
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு47301
இணையதளம்www.aradamansara.com

ஆரா டாமன்சாரா (மலாய்: Ara Damansara; ஆங்கிலம்: Ara Damansara; சீனம்: 阿拉白沙罗); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும்.

இந்தப் புறநகர்ப் பகுதி சுபாங் வானூர்தி நிலையச் சாலையின் (Jalan Lapangan Terbang Sultan Abdul Aziz) வழியில் அமைந்துள்ளது. துராபிகானா (Tropicana) மற்றும் பண்டார் உத்தாமா டாமன்சாரா (Bandar Utama Damansara) புறநகர்ப் பகுதிகளுக்கு அடுத்தப் புறநகர்ப் பகுதியாக உள்ளது.

வரலாறு[தொகு]

அரா டாமன்சாரா இயற்கைப் பூங்கா

1999-ஆம் ஆண்டில் சைம் டார்பி (Sime Darby) நிறுவனத்தின் துணை நிறுவனமான சைம் பில்மோர் மேம்பாட்டு நிறுவனத்தினால் (Sime Pilmoor Development Sdn Bhd) ஆரா டாமன்சாரா புறநகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது. அரா டமன்சாரா சுமார் 4,000 பல்வேறு வகையான கட்டிடங்களை உள்ளடக்கிய புறநகர்ப் பகுதி.[2][3]

அமைவு[தொகு]

பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் 739 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புறநகர்ப் பகுதி; JKR 15 சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலையில்; புஞ்சாக் ஆலாம் நெடுஞ்சாலைக்கு (Puncak Alam Highway) கிழக்கிலும்; Mes-e1.svg கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையின் (New Klang Valley Expressway - NKVE) வடக்கு மேற்கிலும் அமைந்துள்ளது.

இந்தப் புறநகர்ப் பகுதியின் வடக்கே கோத்தா டாமன்சாரா (Kota Damansara), கிழக்கே தாமான் துன் டாக்டர் இசுமாயில் (Taman Tun Dr Ismail), தெற்கே சுபாங் ஜெயா (Subang Jaya) மற்றும் மேற்கில் காயாங்கான் அயிட்ஸ் (Kayangan Height) நகர்ப் பகுதிகள் உள்ளன.

இலகு தொடருந்து போக்குவரத்து[தொகு]

அத்துடன் ஆரா டாமன்சாரா நகர்ப்புறம் கூட்டரசு சாலை 2; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை E1   AH2 எனும் ஆசிய நெடுஞ்சாலை மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.

ஆரா டாமன்சாரா இரண்டு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) நிலையங்களைக் கொண்டுள்ளது.

2016 சூன் மாதம் KLRT Line 5 icon.svg கிளானா ஜெயா இலகு தொடருந்து தடம் (LRT Kelana Jaya Line) கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. PRIYA, SHEILA SRI. "PETALING Jaya City Council (MBPJ) received its first-ever woman deputy mayor when Azlinda Azman was sworn in". The Star (ஆங்கிலம்). 9 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ara Damansara is the pioneering township consisting of low and high-rise residential homes, commercial properties, and bungalows arrayed in dedicated garden precincts and commercial centres". www.simedarbyproperty.com (ஆங்கிலம்). 9 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Light Railroad. Ara Damansara is vibrant and livable". Sinchew. 16 July 2017. 8 நவம்பர் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 November 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரா_டாமன்சாரா&oldid=3592955" இருந்து மீள்விக்கப்பட்டது