பத்து தீகா
பத்து தீகா | |
---|---|
நகரம் | |
Batu Tiga | |
![]() பத்து தீகா இரயில் நிலையம் | |
ஆள்கூறுகள்: 3°3′52″N 101°35′37″E / 3.06444°N 101.59361°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
அமைவு | 1800 |
அரசு | |
• நிர்வாகம் | சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 40100 |
மலேசியத் தொலைபேசி எண் | +603 - 55 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | B |
பத்து தீகா (மலாய்: Batu Tiga ; ஆங்கிலம்: Batu Tiga ; சீனம்: 峇都知甲); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில், சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் கீழ் அமைந்து உள்ள ஒரு நகர்ப் புறமாகும்.
இந்த நகரம் சுபாங் ஜெயா மற்றும் சா ஆலாம் ஆகிய நகரங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இருப்பினும், இது சுபாங் ஜெயா நகர மையத்தை விட சா ஆலாமிற்கு அருகில் உள்ளது. சுபாங் உயர்த் தொழில்நுட்பத் தொழில் பூங்கா (Subang Hi-Tech Industrial Park), இந்த பத்து தீகா நகரின் புறநகரில் தான் அமைந்துள்ளது.[1]
பொது[தொகு]
பத்து தீகா நகரம், சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. முன்னர் காலத்தில் இதன் புறநகர்ப் பகுதியில் ஒரு தொழில்துறை பேட்டை உருவாக்கப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்கள் பல தொழிற்சாலைகளை உருவாக்கின. நிறைய வேலை வாய்ப்புகள். மக்கள் தொகையும் கூடியது. அதன் விளைவாக 2000-ஆம் ஆண்டுகளில் மலிவு விலை குடியிருப்புகள் தோன்றின.
சுபாங் ஹைடெக் (Subang Hi-Tech) என்பது பத்து தீகாவின் முக்கியத் தொழில்துறை பகுதியாகும். பன்னாட்டு நிறுவனங்களின் பல தலைமையகங்கள் பத்து தீகா தொழில்துறைப் பகுதியில் அமைந்து உள்ளன.
வரலாறு[தொகு]
1860 - 1870-ஆம் ஆண்டுகளில் பத்து தீகா பகுதியில் நிறைய ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. அதற்கு முன்னர் அங்கே காபி தோட்டங்கள் இருந்தன. அந்தத் தோட்டங்கள்:
கிளன்மேரி தோட்டம்; நார்த்தமோக் தோட்டம்; ராசா தோட்டம்; சுங்கை ரெங்கம் தோட்டம்; டாமன்சாரா தோட்டம்; ஈபோர் தோட்டம்; சீபீல்டு தோட்டம்; லாபுவான் பாடாங் தோட்டம்; மேர்ட்டன் தோட்டம்; புக்கிட் கமுனிங் தோட்டம்; இவற்றுள் டமன்சாரா தோட்டம் (Damansara Estate) 1896-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
பத்து தீகா இரயில் நிலையம்[தொகு]
1860-ஆம் ஆண்டுகளில் பத்து தீகா பகுதிகளில் காபி பயிர் செய்யப் பட்டது. பத்து தீகா இரயில் நிலையத்தில் (Batu Tiga Railway Station) இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தது. அப்போது மாட்டு வண்டிச் சாலை பயன்படுத்தப்பட்டது.[2]
பத்து தீகா டாமன்சாரா தோட்டத்தில் 1906-ஆம் ஆண்டில் 600 தமிழர்கள் 150 ஜாவானியர்கள் வேலை செய்தார்கள்.[2]