பெரானாங்
பெரானாங் (ஆங்கிலம்: Beranang; மலாய்: Mukim Beranang) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் (Hulu Langat District) உள்ள புற நகரப்பகுதி; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். இந்த முக்கிம் செமினி முக்கிம் மற்றும் சிப்பாங் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.[1]
இதன் வடக்கே செமினி நகரம்; தெற்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்தின் நகரம்; ஆகிய இரு நகரங்கள் உள்ளன. உண்மையிலேயே பெரானாங் நகரம் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தலையாய பெரானாங் நகரம் சிலாங்கூர் மாநிலத்திலும்; உலு பெரானாங் நகரம் (Ulu Beranang) நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் உள்ளன.
பொது
[தொகு]குன்றுகள்
[தொகு]பெரானாங் பகுதியில் 2 குன்றுகளும் ஒரு மலையும் உள்ளன.
- புக்கிட் தெம்புரோங் குன்று - 400 அடி
- புக்கிட் பூலோ குன்று - 401 அடி
- உலு பெரானாங் மலை - 2654 அடி
ஆறுகள்
[தொகு]பெரானாங்கில் சில ஆறுகள் உள்ளன. அவற்றில் பெரானாங் ஆறு என்பது செமனி ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இங்கு காணப்படும் ஆறுகள்:[2]
- பெரானாங் ஆறு
- தருண் ஆறு
- புரோகா ஆறு
- ஜெய் ஆறு
- லூமுட் ஆறு
- பாலாவ் ஆறு
ரப்பர் தோட்டங்கள்
[தொகு]முன்பு இங்கு பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. பின்னர் அவை செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன.
- பாலாவ் தோட்டம்
- கிளன்வோரி தோட்டம்
- கன்னிமாரா தோட்டம்
- அபாக்கோ தோட்டம்
- பெனார் தோட்டம்
- புக்கிட் உங்குல் தோட்டம்
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Beranang is a mid-size place in the region of Selangor in Malaysia with a population of approximately 46,329 people". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 20 August 2023.
- ↑ "Rivers in Beranang, Hulu Langat District, Selangor, Malaysia". AllTrails.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 August 2023.