செமாங்கோக் மலை

ஆள்கூறுகள்: 3°44′15″N 101°39′05″E / 3.73750°N 101.65139°E / 3.73750; 101.65139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செமாங்கோக் மலை
Gunung Semangkok
Mount Semangkok
செமாங்கோக் மலை is located in மலேசியா
செமாங்கோக் மலை
செமாங்கோக் மலை
உயர்ந்த இடம்
உயரம்1,825 m (5,988 அடி)
இடவியல் புடைப்பு623 m (2,044 அடி)
ஆள்கூறு3°44′15″N 101°39′05″E / 3.73750°N 101.65139°E / 3.73750; 101.65139[1]
புவியியல்
நாடுமலேசியா
மாநிலங்கள் சிலாங்கூர்
பகாங்
மாவட்டங்கள்உலு சிலாங்கூர் மாவட்டம்
ரவுப் மாவட்டம்
மூலத் தொடர்தித்திவாங்சா மலைத்தொடர்

செமாங்கோக் மலை (மலாய்: Gunung Semangkok; ஆங்கிலம்: Mount Semangkok) என்பது மலேசியா; பகாங்; சிலாங்கூர் மாநிலங்களின் எல்லையில் தித்திவாங்சா மலைத்தொடரில் (Titiwangsa Mountains) அமைந்துள்ள ஒரு மலை.[2]

உலு சிலாங்கூர் மாவட்டம்; கோலா குபு பாரு பகுதியில் உள்ள இந்த மலை, சிலாங்கூர் மாநிலத்தில் மிக உயர்ந்த மலையாகும். பகாங்; ரவுப் மாவட்டத்தில் உள்ள பிரேசர் மலைக்கு (Bukit Fraser) அருகிலும் இந்த மலை உள்ளது.[3]

செமாங்கோக் மலையின் உயரம் 1830 மீட்டர் (5,984 அடி). அதன் சிகரம் பகாங் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையாக உள்ளது. இந்த மலை, பகாங் - சிலாங்கூர் - நெகிரி செம்பிலான் எல்லை முக்கோணத்திற்கு அருகிலும் உள்ளது.

பொது[தொகு]

பிரேசர் மலை[தொகு]

பிரேசர் மலை (Fraser's Hill) ஓர் உல்லாசப் பொழுதுபோக்கு இடமாகும். மலேசியா, பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு குளிர்மையான தட்ப வெட்ப நிலை நிலவுகிறது. மலேசியாவின் மலைகளில் இளவரசியாக விளங்கும் கோடை வாசத்தலம் பிரேசர் மலை ஆகும். கோலாலம்பூர் மாநகரில் இருந்து 103 கி.மீ. தொலைவில் கோலா குபு பாரு பட்டணத்திற்கு அருகாமையில் உள்ளது.[4] பிரேசர் மலையைச் சுற்றிலும் ஏழு மலை உச்சிகள் உள்ளன.

இந்த இடம் ஒரு மாசற்ற, தூய்மையான காட்டுப் பகுதி ஆகும். லூயிசு ஜேம்சு பிரேசர் (Louis James Fraser) எனும் ஸ்காட்லாந்துகாரர் 1890-ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தைக் கண்டுபிடித்தார்.[5]

பிரித்தானியர் உல்லாச மையம்[தொகு]

பிரித்தானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, கோடை கால வெப்பத்தைத் தவிர்க்க இங்கு வந்து தங்கினர். நாளடைவில் இந்த இடம் ஓர் உல்லாச மையமாக மாறியது. 1951-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, சர் என்றி கர்னி எனும் மலாயா உயர் ஆணையர், கம்யூனிச பயங்கரவாதிகளால் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.[6]

1970-ஆம் ஆண்டுகளில் பல குழிப்பந்தாட்டத் திடல்கள் உருவாக்கப்பட்டன. புதுக் கட்டடங்கள் கட்டப்பட்டன. பிரேசர் மலையின் இயற்கை அழகு சிதையத் தொடங்கியது. இதை அறிந்த பகாங் மாநில அரசு, 2010-ஆம் ஆண்டில் இருந்து பிரேசர் மலையில், எந்த ஒரு நிலையான கட்டடத்தையும் எழுப்பக் கூடாது என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mount Semangkok". GeoNames. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  2. "Gunung Semangkok, Fraser's Hill, Selangor". Archived from the original on 2017-08-18. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
  3. Federation Museums Journal, Volumes 16-23
    Museums Department, States of Malaya, 1971 - Ethnology
  4. "About 103km from Kuala Lumpur is an area of seven hills originally named Ulu Tras just coming down the Titiwangsa Range". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2014-12-29.
  5. Fraser's Hill is named after Louis James Fraser, a Scotsman who prospected for gold in Australia but eventually struck tin here instead in the 1890s.
  6. On 6th October 1951, on a lonely stretch of winding road between Kuala Lumpur and Fraser’s Hill, Sir Henry Gurney, the High Commissioner for the Federation of Malaya was murdered by communist terrorists (CTs).
  7. The Pahang state government has sensibly ruled out further encroachment into the surrounding virgin forest having seen the damage caused in Cameron Highlands.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செமாங்கோக்_மலை&oldid=3710104" இலிருந்து மீள்விக்கப்பட்டது