டெங்கில்

ஆள்கூறுகள்: 2°52′0″N 101°41′0″E / 2.86667°N 101.68333°E / 2.86667; 101.68333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெங்கில்
நகரம்
Dengkil
Dengkil (town).JPG
டெங்கில் is located in மலேசியா
டெங்கில்
டெங்கில்
      டெங்கில்
ஆள்கூறுகள்: 2°52′0″N 101°41′0″E / 2.86667°N 101.68333°E / 2.86667; 101.68333
நாடுFlag of Malaysia.svg மலேசியா
மாநிலம்Flag of Selangor (pre 1965).svg சிலாங்கூர்
மாவட்டம்சிப்பாங்
அரசு
பரப்பளவு
 • மொத்தம்309.50 km2 (119.50 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு62xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+603-88
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்mpsepang.gov.my

டெங்கில் (மலாய் மொழி: Dengkil; ஆங்கிலம்: Dengkil; சீனம்: 龙溪) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிம்; ஒரு நகரம். புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயாவிற்கு அருகில், கோலாலம்பூரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

மலேசிய பல்லூடகப் பெருவழி; மற்றும் புத்ராஜெயா வளாகங்களுக்கு அருகில் உள்ளதால் அண்மைய காலங்களில் அபிரிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இந்த நகரத்திற்கு தெற்கில் சாலாக் திங்கி புது நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது.[2]

பொது[தொகு]

சிலாங்கூர் மாநிலத்தில், டெங்கில் பெரிய முக்கிம் ஆகும். இந்த நகரம் பத்து மலாய்க் கிராமங்கள்; ஒரு சீனர் புதிய கிராமம்; ஓர் இந்தியர் சமூகக் கிராமம் மற்றும் 82 பொது வீட்டு மனைத் திட்டங்களை உள்ளடக்கியது.[2]

வரலாறு[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஈயச் சுரங்கத் தொழிலுக்கு பேர் பெற்ற இடமாக விளங்கியது. மலாயாவின் பல பகுதிகளில் இருந்து சீன மக்கள் இங்கு வந்தனர். அதே போல பல ரப்பர் தோட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டதால் கணிசமான அளவிற்குத் தமிழர்களும் குடிபெயர்ந்தனர்.

1950-களில், டெங்கில் புறநகர்ப் பகுதியில் உள்ள சீனர்கள் மலாயா கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்காக, பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம், ஒரு புதிய கிராமத்தை நிறுவியது. அதன் பெயர் டெங்கில் புதிய கிராமம் (Dengkil New Village}.[1]

கம்போங் பாரு டெங்கில்[தொகு]

இப்போது இந்தக் கிராமம் கம்போங் பாரு ஸ்ரீ டெங்கில் (Kampung Baru Seri Dengkil) என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இந்தக் கிராமம் பல சிறு கிராமங்களாக விரிவடைந்தது. அவை படிப்படியாக பல சீனக் கிராமங்களாக மாறின. டெங்கில் முன்பு ஒரு சீன கிராமமாகும். அதனால் அங்கு இன்னும் சீனத் தெரு அடையாளங்கள் உள்ளன.[3]

டெங்கில் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

சிப்பாங் மாவட்டத்தின் டெங்கில் பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 452 மாணவர்கள் பயில்கிறார்கள். 52 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட 2020-ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள்.[4]

பள்ளி
எண்
பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD9452 SJK(T) Ladang Ampar Tenang அம்பர் தெனாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி டெங்கில் 43 10
BBD9455 SJK(T) Dengkil டெங்கில் தமிழ்ப்பள்ளி டெங்கில் 231 24
BBD9457 தாமான் பெர்மாத்தா தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி டெங்கில் 177 18

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Volunteers, Author Museum (22 May 2021). "Dengkil is the largest mukim and it comprises ten Malay kampungs, one Chinese new village, one Indian community village and 82 public housing developments. Dengkil has benefitted from its proximity to our country's mega projects namely Putrajaya, Cyberjaya, KL International Airport and KL International Airport 2". Museum Volunteers, JMM (ஆங்கிலம்). 22 August 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 lim, choo woon. "engkil was very quiet. Then in the 1990s, along came Putrajaya, Cyberjaya and the KL International Airport. It gave breath to the dying town". The Star (ஆங்கிலம்). 22 August 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Portal Rasmi PDT Sepang Kampung Dengkil". www.selangor.gov.my. 22 August 2022 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. 2020-02-19 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெங்கில்&oldid=3499524" இருந்து மீள்விக்கப்பட்டது