சாலாக் திங்கி

ஆள்கூறுகள்: 2°48′0″N 101°45′0″E / 2.80000°N 101.75000°E / 2.80000; 101.75000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலாக் திங்கி
நகரம்
Salak Tinggi
சாலாக் திங்கி is located in மலேசியா
சாலாக் திங்கி
சாலாக் திங்கி
      சாலாக் திங்கி
ஆள்கூறுகள்: 2°48′0″N 101°45′0″E / 2.80000°N 101.75000°E / 2.80000; 101.75000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்சிப்பாங்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு43900
மலேசியத் தொலைபேசி எண்கள்+603-870
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்mpsepang.gov.my

சாலாக் திங்கி (மலாய் மொழி: Salak Tinggi; ஆங்கிலம்: Salak Tinggi; சீனம்: 沙拉丁宜) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம்.

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 53 கி.மீ. சிரம்பான் மாநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது. வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், சாலாக் திங்கி நகரத்தை ‘வானூர்தி நிலைய நகரம்’ (Airport City) என்றும் அழைப்பதும் உண்டு.[1]

பொது[தொகு]

இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. சிப்பாங் மாவட்டத்தின் நிர்வாக மையம் இந்த நகரில்தான் அமைக்கப்பட்டு உள்ளது.[2]

1970-ஆம் ஆண்டுகளில் சாலாக் திங்கி நகரம் ஓர் ஒதுக்குப் புறமான கிராமமாக இருந்தது. நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அது ஒரு காட்டுப் பகுதியில் இருந்ததால் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

பண்டார் பாரு சாலாக் திங்கி[தொகு]

1990-களில், புத்ராஜெயா; சைபர்ஜெயா; மலேசிய பல்லூடகப் பெருவழி; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்ற நவீனத் தளங்கள் உருவானதும் சாலாக் திங்கி நகரம் மிகவும் பிரபலமானது.

இப்போது பண்டார் பாரு சாலாக் திங்கி (Bandar Baru Salak Tinggi) என்று அழைக்கப் படுகிறது. கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் பணிபுரிபவர்கள் பலர் இந்த நகரில் தங்கி உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bandar Baru Salak Tinggi also known as "Airport City" is the center of Sepang city located in Sepang district, Selangor. Surrounded by other major cities including Nilai, Putrajaya, KLIA, Bangi and Cyberjaya". பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
  2. "History of Sepang – MAJLIS PERBANDARAN SEPANG". பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலாக்_திங்கி&oldid=3537831" இலிருந்து மீள்விக்கப்பட்டது