செரண்டா

ஆள்கூறுகள்: 3°21′50″N 101°36′20″E / 3.36389°N 101.60556°E / 3.36389; 101.60556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரண்டா
Serendah
சிலாங்கூர்
Skyline of செரண்டா
செரண்டா is located in மலேசியா
செரண்டா

      செரண்டா       மலேசியா
ஆள்கூறுகள்: 3°21′50″N 101°36′20″E / 3.36389°N 101.60556°E / 3.36389; 101.60556
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு சிலாங்கூர் மாவட்டம்
நிர்வாக மையம்கோலா குபு பாரு
அரசு
 • ஊராட்சிஉலு சிலாங்கூர் ஊராட்சி
(Ulu Selangor District Council)
 • தலைவர்நொராயினி பிந்தி ரோசுலான்
(Noraini binti Roslan)
பரப்பளவு
 • மொத்தம்208.8 km2 (80.6 sq mi)
ஏற்றம்72 m (236 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்94,762[1]
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு48200
தொலைபேசி எண்கள்+60-3
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்mdhs.gov.my

செரண்டா, (மலாய்: Serendah; ஆங்கிலம்: Serendah; சீனம்: 萬撓); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் (Hulu Selangor District) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 23 கி.மீ. வடக்கே உள்ளது.

செரெண்டா முன்பு காலத்தில் பல ஈயச் சுரங்கங்களின் தாயகமாக இருந்தது. இந்தச் சிறு நகரம், முன்பு பெரிய ஈயச் சுரங்க நகரமான ரவாங்கிற்கு (Rawang) ஒரு துணைக்கோள் நகரமாக இருந்தது.[2]

இந்த நகரம் இப்போது ஒரு நிலையான கட்டத்தில் வளர்ந்து வருகிறது. மற்றும் கோலாலம்பூர் மாநகருக்கு வெளியே உள்ள மிகப்பெரிய புறநகர்ப் பகுதியாகும். இது உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்கிம் (நகரம்) (Mukim) ஆகும்.[3]

பொது[தொகு]

இந்த நகரம் ஒரு தாழ்வான இடத்தில் அமைந்து உள்ளது. இங்கு அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில், இந்தப் பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க, ஈயச் சுரங்க உரிமையாளர்கள் அங்கு ஒரு சிறிய தடுப்பு அணையைக் கட்டினார்கள்.

அதனால் இந்த இடத்திற்கு செரண்டா என்று பெயர் வந்தது. மலாய் மொழியில் செரண்டா (Serendah) என்றால் ’தாழ்வானது’ என்று பொருள். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஈயச் சுரங்க நடவடிக்கைகளால் இந்தப் பகுதி வளர்ச்சி பெற்றது.

நிலவியல்[தொகு]

செரண்டாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பெரிகி தூஜோ செரண்டா (Perigi Tujuh Serendah), அங்கு ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த நகரத்திற்குத் தெற்கில் சுங்கை சோ (Sungai Choh) நகர்ப்புறம்; மேற்கில் புக்கிட் பெருந்தோங் (Bukit Beruntung); மற்றும் வடக்கில் அன்ந்தாரா காபி (Antara Gapi) ஆகிய புறநகர்ப் பகுதிகள் உள்ளன. செரண்டாவின் மொத்த பரப்பளவு 208.8 சதுர கி.மீ.

வளர்ச்சி[தொகு]

செரண்டா தொடருந்து நிலையம் (Serendah Komuter Station) எனும் ஒரு புதிய தொடருந்து நிலையம், செரண்டா நகரில் இருந்து வடமேற்கில் சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நிலையம் ராசா தொடருந்து நிலையம் (Rasa Komuter Station) மற்றும் பத்தாங்காலி தொடருந்து நிலையம் (Batang Kali Komuter Station) ஆகியவற்றுடன் ஏப்ரல் 21, 2007-இல் திறக்கப்பட்டது.

தேசிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பெரோடுவா (Perodua), இந்த செரண்டாவில் தன் தலைமையகத்தைக் கொண்டு உள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரண்டா&oldid=3703015" இருந்து மீள்விக்கப்பட்டது