ஜிஞ்சாங்

ஆள்கூறுகள்: 3°12′43″N 101°39′27″E / 3.21194°N 101.65750°E / 3.21194; 101.65750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிஞ்சாங்
புறநகர்
Jinjang
ஜிஞ்சாங் பெந்திங் பாராட் சாலை
ஜிஞ்சாங் பெந்திங் பாராட் சாலை
ஜிஞ்சாங்-இன் கொடி
கொடி
ஜிஞ்சாங்-இன் சின்னம்
சின்னம்
ஜிஞ்சாங் is located in மலேசியா
ஜிஞ்சாங்
      ஜிஞ்சாங்
ஆள்கூறுகள்: 3°12′43″N 101°39′27″E / 3.21194°N 101.65750°E / 3.21194; 101.65750
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
புறநகர்ஜிஞ்சாங்
தொகுதிகோலாலம்பூர்
அரசு
 • நகராண்மைகோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு52100
மலேசியத் தொலைபேசி எண்+6-03 22
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்W ; V
இணையதளம்www.dbkl.gov.my

ஜிஞ்சாங், (மலாய்: Jinjang; ஆங்கிலம்: Jinjang; சீனம்: 增江玛珠); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரின் வட மேற்குப் பகுதியில், கெப்போங் தொகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப் பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகும்.[1]

ஜே-நகரம் (J-Town) என்று அழைக்கப்படும் இந்த நகர்ப் பகுதி; முன்பு காலத்தில் சீனர்களின் குடியேற்றக் கிராமமாகத் (Chinese New Village) திகழ்ந்தது. 1960-ஆம் ஆண்டுகளில் குண்டர் கும்பல் செயல்பாடுகளுக்கு நன்கு அறியப்பட்ட இடமாகவும் இருந்தது.[2]

ஜிஞ்சாங் நகர்ப்புறம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் படுகிறது. ஒரு பிரிவு: வடக்கு ஜிஞ்சாங் (Jinjang Utara). மற்றொரு பிரிவு வடக்கு ஜிஞ்சாங் (Jinjang Selatan).[3]

பொது[தொகு]

கோலாலம்பூரின் மையத்தில் இருந்து 8.5 கிலோமீட்டர் தொலைவில், கெப்போங் மற்றும் ஈப்போ சாலைக்கு இடையே உள்ளது. முன்னர் காலத்தில் ஜெங்ஜியாங் (Zengjiang) அல்லது ஜெங்குவாங் (Zengguang) என்றும் அழைக்கப்பட்டது.

ஜிஞ்சாங் எனும் சொல் கான்டோனீச மொழியில் இருந்து மலாய் மொழிச் சொல்லுக்கு நேரடி மொழிபெயர்ப்பாகும். இருப்பினும், மூத்த கோலாலம்பூர் குடிமக்களில் பலர் இன்னும் "ஜெங்குவாங்" என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

பாரம்பரிய சீனர் கிராமம்[தொகு]

186 எக்டர் பரப்பளவு கொண்ட ஜிஞ்சாங்கில் கிட்டத்தட்ட 5,000 கிராம வீடுகள் உள்ளன. மலேசியாவில் உள்ள 452 சீனர் புதிய கிராமங்களில் ஜிஞ்சாங் தான் மிகப் பெரியது. உள்ளூர் சீன மக்கள் தொகை 90% க்கும் அதிகமாக உள்ளது.

முன்பு காலத்தில் ஜிஞ்சாங் ஒரு பாரம்பரிய சீனர் கிராமமாக இருந்தது. தற்போது ஜிஞ்சாங் பகுதியின் எல்லா இடங்களிலும் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் ஜிஞ்சாங் நகர்ப்புறம் ஒரு நவீன நகரமாகவும் மாறி விட்டது.[4]

சொற்பிறப்பியல்[தொகு]

19 ஆம் நூற்றாண்டில் ஒரு சீன வணிகரால் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு பன்றியின் பெயரில் இருந்து ஜிஞ்சாங் என்ற பெயர் பெறப்பட்டது என்று நம்பப்படுகிறது. அந்தப் பன்றி மங்களகரமானது என்று நம்பப்பட்டது.[5][6]

ஜெங்குவாங் (Zengguang) எனும் கான்டோனீச மொழியில் இருந்து பெறப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

வரலாறு[தொகு]

இந்த நகரம் மலாயா அவசரகாலத்தின் போது பிரிக்ஸ் திட்டம் என்று அழைக்கப்படும் பிரித்தானிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இந்தச் செயல்திட்டம் மலாயாவில் சீனர் மக்களை வேறு புதிய குடியிருப்புப் பகுதிகளுக்கு மறுக் குடியேற்றம் செய்வதை அடிப்படையாகக் கொண்டது.[7]

மலாயா தேசிய விடுதலை படையின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சில முக்கிய நடவடிக்கைகளை மலாயா பிரித்தானியா அரசாங்கம் மேற்கொண்டது. ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈட்டுபட்டது.[8]

பிரிக்ஸ் திட்டம்[தொகு]

அந்த வகையில் பிரிக்ஸ் திட்டத்தையும் (Briggs Plan) அமல் செய்தது. மலாயா தேசிய விடுதலை படையினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருளுதவிகளைத் துண்டிப்பதுதான் பிரிக்ஸ் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

பிரிக்ஸ் திட்டத்தை உருவாக்கியவர் ஹெரால்ட் பிரிக்ஸ் (General Sir Harold Briggs) என்பவர். இவர் அப்போது மலாயாவின் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார்.[9]

மலாயா தேசிய விடுதலை இராணுவம்[தொகு]

மலாயா கம்யூனிஸ்டு கட்சி (Malayan Communist Party) (MCP); மற்றும் மலாயா தேசிய விடுதலை இராணுவம் (Malayan National Liberation Army) (MNLA) ஆகிய இரு அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டு வந்த உணவு, பணம் மற்றும் ஆயுத வசதிகளைத் துண்டிக்கும் முயற்சியாக மலாயா புதிய கிராமங்கள் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோலாலம்பூர் புறநகரில் இப்போது உள்ள மீள்குடியேற்றப் பகுதிகளில் ("புதிய கிராமங்கள்") ஜிஞ்சாங் மீள்குடியேற்றமே மிகப் பெரியது ஆகும். 4.45 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட ஜிஞ்சாங் புதுக் கிராமத்தின் மக்கள்தொகை 13,000.[10][11]

மலாயா விடுதலைக்குப் பிந்தைய 1960-ஆம் ஆண்டுகளில், ஜிஞ்சாங் நகரத்தில் கொள்ளைக்காரர்கள் இருந்ததால் இந்த நகரம் அவப் பெயரைப் பெற்றது. "இராபின் ஊட்" (Robin Hood) போன்ற ஒரு குற்றவாளியான போத்தாக் சின் (Botak Chin) இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்ததாகவும் கூறப் படுகிறது.[12]

போக்குவரத்து[தொகு]

இந்த நகரம் எம்ஆர்டி புத்ராஜெயா லைன் தடப் பாதையில் உள்ள:

ஆகிய நிலையங்களால் சேவை செய்யப்படுகிறது. இந்தச் சேவைகள் 2022 ஜூன் 16-ஆம் தேதி தொடங்கியது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Jinjang, Kuala Lumpur". Toponymy Heritage Places of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2017-05-18.
 2. "It was a "new village" set up by the British (colonial masters at the time) to avoid communists from influencing local communities. Gangsterism was rife, and living conditions were terrible". Tripadvisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
 3. "Jinjang is primarily separated into two sections called Jinjang North and Jinjang South. Located within minutes from Kuala Lumpur, Jinjang is still predominantly occupied by the Chinese ethnic group". PropSocial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
 4. "Started as an old village for mainly the Chinese community in the early KL days. However, the place is now inundated by foreigners from Indonesia, Bangladesh, China and even Africa as the local Chinese community moves out and up into better residential areas". Tripadvisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
 5. "An Introduction to Jinjang". iProperty. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
 6. "Jinjang, Kuala Lumpur". Toponymy Heritage Places of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2017-05-18.
 7. Newsinger, John (2015). British Counterinsurgency. Basingstoke: Palgrave Macmillan. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-29824-8. 
 8. Newsinger, John (2013). The Blood Never Dried: A People's History of the British Empire. London: Bookmarks Publications. பக். 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-909026-29-2. 
 9. Newsinger, John (2015). British Counterinsurgency. Basingstoke: Palgrave Macmillan. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-29824-8. 
 10. King, Ross (2008). Kuala Lumpur and Putrajaya: negotiating urban space in Malaysia. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9971-69-415-9. 
 11. Corry, W. C. S. (1954). A General Survey of New Villages: Report to His Excellency Sir Donald MacGillivray, High Commissioner of the Federation of Malaya. Kuala Lumpur: Government Printing Press. 
 12. "Jinjang grows out of bad reputation". The Star (Malaysia). 12 May 2015. https://www.thestar.com.my/metro/focus/2015/05/12/jinjang-grows-out-of-bad-reputation-no-more-gang-fights-in-new-villages-as-citys-development-creeps/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஞ்சாங்&oldid=3615759" இலிருந்து மீள்விக்கப்பட்டது