புக்கிட் ஜாலில்
புக்கிட் ஜாலில் Bukit Jalil | |
|---|---|
புக்கிட் ஜாலில் அரங்கம் (2023) | |
| ஆள்கூறுகள்: 3°3′31″N 101°41′31″E / 3.05861°N 101.69194°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| தொகுதி | செபுத்தே மக்களவைத் தொகுதி |
| அரசு | |
| • உள்ளாட்சி | கோலாலம்பூர் மாநகராட்சி |
| • முதல்வர் | ஆமீன் நோர்டின் அப்துல் அஜீஸ் |
| நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
| அஞ்சல் குறியீடு | 57000[1] |
| தொலைபேசி | +60 3 |
புக்கிட் ஜாலில் (மலாய்; ஆங்கிலம்: Bukit Jalil; சீனம்: 武吉加里尔) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்தின் கிழக்கில் கோலாலம்பூர் விளையாட்டு நகரம் உள்ளது; மேலும், வடக்கில் சா ஆலாம் விரைவுச்சாலை; தெற்கில் பூச்சோங்-சுங்கை பீசி நெடுஞ்சாலை; ஆகிய போக்குவரத்து அணுகல்கள் உள்ளன.
1992 வரை இந்த நகரம் புக்கிட் ஜாலில் ரப்பர் தோட்டம் (Bukit Jalil Estate) என்று அழைக்கப்பட்டது. பின்னர் தேசிய விளையாட்டு வளாகம் 1998-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக (1998 Commonwealth Games) ஒரு புதிய நகரமாக உருவாக்கப்பட்டது.[2]
பின்னர் 1999-ஆம் ஆண்டு வெளியான என்ட்ராப்மென்ட் (Entrapment) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடமாகவும் புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதி பயன்படுத்தப்பட்டது.[3]
பொது
[தொகு]புக்கிட் ஜாலில் நகரத்திற்கு டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை மற்றும் புக்கிட் சாலில் நெடுஞ்சாலை வழியாகவும்; கிள்ளான் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளுடன் இணைப்புகள் உள்ளன. இவற்றைத் தவிர சா ஆலாம் விரைவுச்சாலை, மாஜு விரைவுச்சாலை, மெக்ஸ் நெடுஞ்சாலை மற்றும் பந்தாய் புதிய விரைவுச்சாலை (New Pantai Expressway) வழியாகவும் புக்கிட் ஜாலில் நகரத்தை அணுகலாம்.
புக்கிட் ஜாலில் நகரம், 4 செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உள்ள SP17 புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம், SP18 செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் மற்றும் SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ஆகியவற்றால் சேவை செய்யப்படுகிறது.
கல்வி
[தொகு]இந்த நகரத்தில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் / கட்டமைப்புகள்:
- பன்னாட்டு மருத்துவப் பல்கலைக்கழகம் - (International Medical University)
- மலேசிய தொழில்நுட்ப பூங்கா - (Technology Park Malaysia)
- ஆசிய பசிபிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் - (Asia Pacific Institute of Information Technology)
- ஆசிய பசிபிக் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பல்கலைக்கழகம் - (Asia Pacific University of Technology & Innovation)
- புக்கிட் ஜாலில் தேசிய நடுநிலைப்பள்ளி - (Bukit Jalil National Secondary School)
காட்சியகம்
[தொகு]- புக்கிட் ஜாலில் (2023)
- புக்கிட் ஜாலில் (2023)
- அரோரா மையம் (2021)
- மலிவுவிலை வீடுகள் (2016)
- மாநாட்டு அரங்கம் (2015)
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bukit Jalil, Kuala Lumpur - Postcode - 57000 - Malaysia Postcode". postcode.my. Retrieved 15 December 2024.
- ↑ "The construction of the Bukit Jalil National Stadium began in March 1994 and was fully completed in 1998 with the opening during the XVI Commonwealth Games - Kuala Lumpur '98". www.stadium.gov.my. Retrieved 15 December 2024.
- ↑ "IMDB Trivia of Entrapment, Bukit Jalil is a much more attractive station than Pudu, but too far from central KL to be feasible for the plot". https://www.imdb.com/title/tt0137494/trivia.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Bukit Jalil தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.